என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் தலைவர் நாராகலைநாதன் தலைமை வகித்தார்.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கீதநாதன், சுப்பையா, பிரதீஷ் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதில் அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் சார்பில் இஸ்ரேல் போர் வெறியை கண்டித்து காமராஜர் சிலை சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் தலைவர் நாராகலைநாதன் தலைமை வகித்தார்.

    வக்கீல் சாமிநாதன், ஜீவானந்தம், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் கீதநாதன், சுப்பையா, பிரதீஷ் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    • ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப கல்விதுறை முடிவு செய்து கவர்னருக்கு கோப்பு அனுப்பியது.
    • விரைவில் 145 தொடக்க பள்ளி ஆசிரியர் பணியிட ங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாக உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு பள்ளி களில் இந்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.அதேநேரத்தில் ஆசிரியர் பற்றாக்குறையும் ஏற்பட்டு ள்ளது. இதனையடுத்து தொடக்க பள்ளி ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப கல்விதுறை முடிவு செய்து கவர்னருக்கு கோப்பு அனுப்பியது.

    இந்த கோப்புக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். எனவே விரைவில் 145 தொடக்க பள்ளி ஆசிரியர் பணியிட ங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாக உள்ளது.

    • 16 வயது சிறுவன் உள்பட 2 பேர் சிக்கினர்
    • மறுநாள் காலை வந்து பார்த்த போது கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார்.

    புதுச்சேரி:

    சின்னக்காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 65). இவர் அந்த பகுதியில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்ததும் பெட்டி கடையை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார்.

    கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரொக்கப்பணம் ரூ.10 ஆயிரம், பிஸ்கட் பாக்கெட்டுகள், பீடி மற்றும் சிகரெட் ஆகியவை திருட்டுப் போயிருந்தது.

    அதிர்ச்சி அடைந்த அண்ணாமலை இதுகுறித்து காலப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பெட்டிக்க டையை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடியது சின்னகாலப்பட்டு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் பிள்ளை சாவடியை சேர்ந்த வாலிபர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • செல்வகணபதி எம்.பி. திறந்து வைத்தார்
    • அசோலா வளர்ப்பு மற்றும் மண் உரம் தயாரித்தல் ஆகிய வற்றை செல்வகணபதி எம்.பி. பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினார்.

    புதுச்சேரி:

    தவளகுப்பத்தில் பாண்டிச்சேரி வேளாண் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியின் வேளாண் பண்ணையில் மாணவர்கள் 100-க்கும் மேற்பட்ட மருத்துவ தாவரங்கள் அடங்கிய மூலிகை தோட்டத்தை அமைத்துள்ளனர்.

    இந்த மூலிகை தோட்டத்தை செல்வகணபதி எம்.பி. திறந்து வைத்தார். திறந்து வைத்து மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

    மேலும் அங்கு மரக்கன்றுகளையும் நட்டார். தொடர்ந்து மாணவர்கள் ஏற்படுத்திய 20-க்கும் மேற்பட்ட நெல் வகைகள் ஒருங்கிணைந்த வேளாண் பண்ணையில் 100-க்கும் மேற்பட்ட தாவரங்கள் அடங்கிய பயிற்திட்டமிடல், காலான் வளர்பு, அசோலா வளர்ப்பு மற்றும் மண் உரம் தயாரித்தல் ஆகிய வற்றை செல்வகணபதி எம்.பி. பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினார்.

    அப்போது அவர் பேசிய போது மருத்துவ குணங்கள் அடங்கிய தாவரங்களை வளர்ப்பு மட்டுமில்லாமல் அதன் பயன்களையும் அறிந்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று எடுத்துறைத்தார். முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகைதந்த செல்வகணபதி எம்.பி.யை கல்லூரியின் தாளாளர் அக்ரிகணேஷ் சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் ரமேஷ், சுரேஷ், உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுபஸ்ரீ , மணி கண்டன், காரல்மார்க்ஸ், ஜெயசவிதா, வினிதா மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    • 3 நாட்கள்காளானில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கான பயிற்சி கடந்த 17 -ந் தேதி தொடங்கியது.
    • காளான் பவுடர் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் நுணுக்கங்கள் ஆகியவை எடுத்துரைக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதி உதவியுடன், அட்டவணை இன துணை திட்டத்தின் கீழ், வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ஜெய்சங்கர் தலைமையில், அட்டவணை இன மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு, 3 நாட்கள்காளானில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கான பயிற்சி கடந்த 17 -ந் தேதி தொடங்கியது. இம்முகாம் நேற்று நிறைவு பெற்றது.

    3 நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில், காளானில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்களான காளான் சூப் பவுடர், காளான் ஜாம், காளான் ஊறுகாய், காளான் பாயாசம், சிறுதானிய காளான் பிஸ்கட், சிறுதானிய காளான் கேக் போன்றவை செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் காளான் அறுவடைக்குப் பின் பதப்படுத்துதல், உலர்ந்த காளான் மற்றும் காளான் பவுடர் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் நுணுக்கங்கள் ஆகியவை எடுத்துரைக்கப்பட்டது. இப்பயிற்சியினை வேளாண் அறிவியல் நிலைய பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநர் திவ்யா தொகுத்து வழங்கினார்.

    • குடும்ப தலைவிகளிடம் வைத்திலிங்கம் எம்.பி. கேள்வி
    • காங்கிரசுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

    புதுச்சேரி:

    இந்திராநகர் தொகுதி காங்கிரஸ் ஆலோசனைக்கூ ட்டம் தர்மாபுரியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.

    தொகுதி பொறுப்பாளர் ராஜாகுமார் தலைமை வகித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:-

    இங்குள்ள எத்தனை பேரின் குடும்ப பெண்களுக்கு ரூ.ஆயிரம் வந்துள்ளது? எத்தனை பேருக்கு சமையல் கியாஸ் மானியம் வந்துள்ளது? யாருக்கும் வரவில்லை. இதுதான் ரங்கசாமி ஆட்சியின் நிலை. காங்கிரசுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு, வட்டார தலைவர் மோகன்தாஸ், பி.சி.சி. உறுப்பினர்கள் ராஜசேகர், சோமசுந்தரம், மாவட்ட செயலாளர் ஆழ்வார், தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் தினேஷ், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றம்
    • 80-க்கும் மேற்பட்ட மின்சார டிரான்ஸ்பார்மர்கள் உள்ளது.

    புதுச்சேரி:

    திருபுவனை உட்கோட்டத்து க்குட்பட்ட வாதானூர் பிரிவு மின் துறை அலுவலக பராம ரிப்பில் மண்ணாடிப்பட்டு, பி.எஸ்.பாளையம், வாதானூர், சோம்பட்டு,சோரப்பட்டு, வினாயகம்பட்டு, வம்புப்பட்டு மற்றும் செல்லிப்பட்டு கிராமங்களில் 80-க்கும் மேற்பட்ட மின்சார டிரான்ஸ்பார்மர்கள் உள்ளது.

     இந்த டிரான்ஸ்பார்மர்களை சுற்றி மரக்கிளைகள், முள் புதர்கள், செடி கொடிகள் அதிகமாக வளர்ந்துள்ளது.

    இந்த நிலையில் பருவ மழை மற்றும் பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு சீரான மின்விநி யோகம் அளிக்கும் வகையில் திருபுவனை மின்துறை உதவிப்பொறியாளர் பேரம்பலம், இளநிலை பொறியாளர் அரிபுத்திரி, மேற்பார்வையாளர் திருஞானசம்பந்தம் மற்றும் மின்துறை ஊழியர்கள் மின் டிரான்ஸ்பா ர்மர்களை சுற்றியுள்ள செடி, கொடி மற்றும் முட்புதற்களை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றினார்கள்.

    மேலும் டிரான்ஸ்பார்மர் பகுதியில் உள்ள பழுதான மின் ஒயர்களும் மாற்றப்பட்டது.

    • எம்.எல்.ஏ. என்ற முறையிலேயே சந்திர பிரியங்கா அரசு விழாவில் பங்கேற்றார்.
    • சந்திர பிரியங்கா வகித்த துறைகளை முதலமைச்சர் கூடுதலாக கவனித்து வருகிறார்.

    புதுச்சேரி:

    சபாநாயகரிடம் அரசு விழாவில் சந்திர பிரியங்கா பங்கேற்றது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பதில் அளித்து கூறியதாவது:-

    அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சந்திர பிரியங்கா இனி எம்.எல்.ஏ.வாக மட்டுமே செயல்படுவார். எம்.எல்.ஏ. என்ற முறையிலேயே அரசு விழாவில் பங்கேற்றார். எம்.எல்.ஏ.வாக சந்திர பிரியங்கா செயல்பட எந்த தடையும் இல்லை.

    பதவி நீக்க கோப்பு உள்துறை ஒப்புதல் பெற்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்றுள்ளது. இன்று அல்லது நாளைக்குள் ஒப்புதல் கிடைக்கும். தொடர்ந்து அரசாணை வெளியாகும். மத்திய அரசு இதில் எந்த தயக்கமும் காட்டவில்லை.

     சந்திர பிரியங்கா வகித்த துறைகளை முதலமைச்சர் கூடுதலாக கவனித்து வருகிறார்.

    இவ்வாறு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறினார்.

    • சந்திர பிரியங்கா தங்கியுள்ள அரசு இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு இன்று வரை தொடர்கிறது.
    • வழக்கமாக அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டால் அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசாணையில் உடனுக்குடன் வெளியிடப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அமைச்சரவையில் இடம் பெற்ற என்ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா கடந்த 10-ந் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    அவர் தனது ராஜினாமா கடிதத்தில் சாதி, பாலின தாக்குதலுக்கு உள்ளானதாக பரபரப்பு குற்றச்சாட்டும் கூறியிருந்தார். ஆனால் அவர் ராஜினாமா செய்யும் முன்பே பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கவர்னர் தமிழிசையும், சபாநாயகர் ஏம்பலம் செல்வமும் தெரிவித்தனர்.

    மேலும் அவரது பணி திருப்தி அளிக்காததால் முதலமைச்சர் ரங்கசாமி பதவி நீக்கத்துக்கு பரிந்துரை செய்தார் என்றும் கவர்னர் தெரிவித்திருந்தார்.

    வழக்கமாக அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டால் அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசாணையில் உடனுக்குடன் வெளியிடப்படும்

    ஆனால் சந்திர பிரியங்கா விவகாரத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாகியும் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பும் அவர் வகித்து வந்த துறைகள் யாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்ற விவரமும் வெளியிடப்படவில்லை.

    அதோடு புதுவை கடற்கரை சாலையையொட்டி சந்திர பிரியங்கா தங்கியுள்ள அரசு இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு இன்று வரை தொடர்கிறது.

    இதனால் சந்திர பிரியங்கா பதவி நீக்கத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த நிலையில் 10 நாட்களுக்கு பிறகு நேற்றைய தினம் தனது தொகுதியில் நடந்த அரசு விழாவில் சந்திர பிரியங்கா பங்கேற்றார். காரைக்கால் பஞ்சாட்சபுரம் கிராமத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் குரும்பகரம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பு சார்பில் நடந்த மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி பொருட்காட்சி நடந்தது.

    இதன் தொடக்க விழாவில் சந்திர பிரியங்கா கலந்து கொண்டார். அவரை அரசு அதிகாரிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் சந்திர பிரியங்கா வழங்கினார். விழாவுக்கு அவர் தேசிய கொடி கட்டிய காரில் வந்தார்.

    மேலும் அந்த அரசு விழா குறித்த சந்திர பிரியங்காவின் செய்தி தொடர்பு வாட்ஸ்-அப் குழுவில் புதுவை போக்குவரத்து துறை அமைச்சர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    கவர்னர், சபாநாயகர் நீக்கப்பட்டதாக அறிவித்த பின்னும் அரசு விழாவில் சந்திர பிரியங்கா பங்கேற்றது புதுவை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது. 

    • அ.தி.மு.க. குற்றச்சாட்டு
    • புதுவையில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ்பாடம் முதல் பாடமாக அரசு கொண்டுவர வேண்டும்.

    புதுச்சேரி:

    ராஜ்பவன், உருளை யன்பேட்டை தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் சரஸ்வதி மகாலில் இன்று நடந்தது.

    தொகுதி செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். நகர செயலாளர் அன்பழகன் உடையார், சிவக்குமார், ராமலிங்கம், நாக.லோகநாதன், சுரேஷ்குமரன், பர்கத், ராஜா, ஜெயராஜ், மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மோட்சநாதன், நந்தன், ஆனந்தராஜ், ஆறுமுகம், துரைசாமி, இளவழகி, சாவித்திரி, மதி, பாபு, பாலசுப்ரமணியன், சம்னேஸ், வளர்மணி, அப்துல்ரகுமான், ஜக்மால், டெய்சிக் கிளாரா, பாலசுப் பிரமணியன் ஆகியோர் வரவேற்றனர்.

    கூட்டத்தில் அதி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் நலன் கருதி வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை நம்மை நம்பி பொதுச்செயலாளர் எடுத்து வருகிறார். அவர் இடும் பணியை தொய்வின்றி செய்ய வேண்டியது நம் தலையாய கடமையாகும்.

    தேசிய கல்வி கொள்கையை முன்னிறுத்தி புதுவையில் மாணவர்களை தி.மு.க.வினர் தவறாக கொண்டு செல்கின்றனர்.

    தாய் மொழியான தமிழ் தேசிய கல்வி கொள்கையால் பாதிக்க வாய்ப்பில்லை. மாணவர்களை வைத்து தி.மு.க. நடு வீதியில் போராட்டம் செய்வது கண்டிக்கத்தக்கது.

    புதுவையில் உள்ள எந்த தனியார் பள்ளிகளிலும் தமிழ் கட்டாய பாடம் இல்லை. தேசிய கல்வி கொள்கையை மத்திய பா.ஜனதா அரசு கொண்டு வந்துள்ள நிலையில், புதுவையில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ்பாடம் முதல் பாடமாக அரசு கொண்டுவர வேண்டும்.

    உருளையன்பேட்டை தொகுதி இளைஞர்கள் பலர் முன்பு இருந்த தி.மு.க. எம்.எல்.ஏ.வை நம்பி தங்களது வாழ்க்கையை இழந்துள்ள–னர். அவர் சுயநலத்துக்காக வியா–பாரிகளை தூண்டி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளான புதிய பஸ் நிலையம், அண்ணாதிடல், பெரிய–மார்க்கேட் கட்டு–மான பணி–களை நிறுத்தியுள்ளார்.

    நடந்து செல்ல கூட வழியில்லாத மார்க்கெட் பகுதியை நவீனப்படுத்த வியாபாரிகளை முன்னி றுத்தி இந்தியா கூட்டணி கட்சிகள் அரசின் திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுக்கின்றன. மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப வியாபாரிகள் உண்மை நிலையை உணர்ந்து அரசுக்கு துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அவை தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், ராஜாராமன், முன்னாள் கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரவு, எம்.ஏ.கே. கருணாநிதி, குணசேகரன், உமா, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில கழகத் துணைச் செயலாளர்கள் நாகமணி, காந்தி, உழவர் கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற் சங்க பேரவை செயலாளர் பாப்பு சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதி இல்லை என ஆசிரியர்களிடம் தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.
    • கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    புதுச்சேரி:

    புதுவை காராமணி குப்பத்தில் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    பள்ளியில் வழங்க படும் மதிய உணவு தரமானதாக இல்லை. சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதி இல்லை என ஆசிரியர்களிடம் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். ஆனால் கோரிக்கைகள் சரி செய்யப்படவில்லை. இதையடுத்து மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து பள்ளியிலிருந்து ஊர்வலமாக கிளம்பி இந்திராகாந்தி சிலை அருகே வந்தனர். அங்குள்ள கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த ஆசிரியர்கள் அங்கு வந்து மாணவர்களிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ரூ.4.10 லட்சம் செலவில் ஏரிக்கரை கரைகள் சீரமைப்பு பணி நடைபெற்று வந்தது.

    புதுச்சேரி:

    பாகூர் தொகுதிக்குட்பட்ட காட்டுக்குப்பம் தாங்கல் ஏரியைதூர்வாரி, கரைகளை சீரமைத்து, பாக்கியலட்சுமி நகர் குடியிருப்பு பகுதியில் மழை நீர் உட்புகுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமார், தனியார் நிறுவனம் தனது சமூக பொறுப்பு நிதியின் மூலமாக காட்டுக்குப்பம் ஏரியை கரைகளை சீரமைத்திட முன் வந்தது.

    இதையடுத்து ரூ.4.10 லட்சம் செலவில் ஏரிக்கரை கரைகள் சீரமைப்பு பணி நடைபெற்று வந்தது.தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் கரைப்பகுதி சுற்றிலும் பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., தனியார் நிறுவனத்தின் பொது மேலாளர் சுகுமார், மனிதவள துறை பொது மேலாளர் சோன் செரியன், முதன்மை அதிகாரி விவேக் கண்ணன், கலந்து கொண்டு பனை விதை நடவு செய்யும் பணியை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ராஜன், இளநிலைப் பொறியாளர் நடராஜன், காட்டுக்குப்பம் பாக்கியலட்சுமி நகர் குடியிருப்போர் நலசங்க நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் ஏரியின் கரையை மேம்படுத்தி தந்த செந்தில்குமார்

    எம்.எல்.ஏ.மற்றும் தனியார் நிறுவனத்துக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    ×