என் மலர்
புதுச்சேரி

மின்சார டிரான்ஸ்பார்மரை சுற்றியுள்ள செடி, கொடிகளை மின் துறை ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றிய காட்சி.
மின்சார டிரான்ஸ்பார்மர்களை சுற்றியுள்ள செடி,கொடிகள்
- பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றம்
- 80-க்கும் மேற்பட்ட மின்சார டிரான்ஸ்பார்மர்கள் உள்ளது.
புதுச்சேரி:
திருபுவனை உட்கோட்டத்து க்குட்பட்ட வாதானூர் பிரிவு மின் துறை அலுவலக பராம ரிப்பில் மண்ணாடிப்பட்டு, பி.எஸ்.பாளையம், வாதானூர், சோம்பட்டு,சோரப்பட்டு, வினாயகம்பட்டு, வம்புப்பட்டு மற்றும் செல்லிப்பட்டு கிராமங்களில் 80-க்கும் மேற்பட்ட மின்சார டிரான்ஸ்பார்மர்கள் உள்ளது.
இந்த டிரான்ஸ்பார்மர்களை சுற்றி மரக்கிளைகள், முள் புதர்கள், செடி கொடிகள் அதிகமாக வளர்ந்துள்ளது.
இந்த நிலையில் பருவ மழை மற்றும் பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு சீரான மின்விநி யோகம் அளிக்கும் வகையில் திருபுவனை மின்துறை உதவிப்பொறியாளர் பேரம்பலம், இளநிலை பொறியாளர் அரிபுத்திரி, மேற்பார்வையாளர் திருஞானசம்பந்தம் மற்றும் மின்துறை ஊழியர்கள் மின் டிரான்ஸ்பா ர்மர்களை சுற்றியுள்ள செடி, கொடி மற்றும் முட்புதற்களை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றினார்கள்.
மேலும் டிரான்ஸ்பார்மர் பகுதியில் உள்ள பழுதான மின் ஒயர்களும் மாற்றப்பட்டது.






