என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
கடையை உடைத்து பணம்-பொருட்கள் திருட்டு
- 16 வயது சிறுவன் உள்பட 2 பேர் சிக்கினர்
- மறுநாள் காலை வந்து பார்த்த போது கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார்.
புதுச்சேரி:
சின்னக்காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 65). இவர் அந்த பகுதியில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்ததும் பெட்டி கடையை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார்.
கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரொக்கப்பணம் ரூ.10 ஆயிரம், பிஸ்கட் பாக்கெட்டுகள், பீடி மற்றும் சிகரெட் ஆகியவை திருட்டுப் போயிருந்தது.
அதிர்ச்சி அடைந்த அண்ணாமலை இதுகுறித்து காலப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பெட்டிக்க டையை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடியது சின்னகாலப்பட்டு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் பிள்ளை சாவடியை சேர்ந்த வாலிபர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






