search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாணவர்களை தவறான பாதையில் தி.மு.க. வழிநடத்துகிறது
    X

    செயல்வீரர்கள் கூட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசிய காட்சி.

    மாணவர்களை தவறான பாதையில் தி.மு.க. வழிநடத்துகிறது

    • அ.தி.மு.க. குற்றச்சாட்டு
    • புதுவையில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ்பாடம் முதல் பாடமாக அரசு கொண்டுவர வேண்டும்.

    புதுச்சேரி:

    ராஜ்பவன், உருளை யன்பேட்டை தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் சரஸ்வதி மகாலில் இன்று நடந்தது.

    தொகுதி செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். நகர செயலாளர் அன்பழகன் உடையார், சிவக்குமார், ராமலிங்கம், நாக.லோகநாதன், சுரேஷ்குமரன், பர்கத், ராஜா, ஜெயராஜ், மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மோட்சநாதன், நந்தன், ஆனந்தராஜ், ஆறுமுகம், துரைசாமி, இளவழகி, சாவித்திரி, மதி, பாபு, பாலசுப்ரமணியன், சம்னேஸ், வளர்மணி, அப்துல்ரகுமான், ஜக்மால், டெய்சிக் கிளாரா, பாலசுப் பிரமணியன் ஆகியோர் வரவேற்றனர்.

    கூட்டத்தில் அதி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் நலன் கருதி வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை நம்மை நம்பி பொதுச்செயலாளர் எடுத்து வருகிறார். அவர் இடும் பணியை தொய்வின்றி செய்ய வேண்டியது நம் தலையாய கடமையாகும்.

    தேசிய கல்வி கொள்கையை முன்னிறுத்தி புதுவையில் மாணவர்களை தி.மு.க.வினர் தவறாக கொண்டு செல்கின்றனர்.

    தாய் மொழியான தமிழ் தேசிய கல்வி கொள்கையால் பாதிக்க வாய்ப்பில்லை. மாணவர்களை வைத்து தி.மு.க. நடு வீதியில் போராட்டம் செய்வது கண்டிக்கத்தக்கது.

    புதுவையில் உள்ள எந்த தனியார் பள்ளிகளிலும் தமிழ் கட்டாய பாடம் இல்லை. தேசிய கல்வி கொள்கையை மத்திய பா.ஜனதா அரசு கொண்டு வந்துள்ள நிலையில், புதுவையில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ்பாடம் முதல் பாடமாக அரசு கொண்டுவர வேண்டும்.

    உருளையன்பேட்டை தொகுதி இளைஞர்கள் பலர் முன்பு இருந்த தி.மு.க. எம்.எல்.ஏ.வை நம்பி தங்களது வாழ்க்கையை இழந்துள்ள–னர். அவர் சுயநலத்துக்காக வியா–பாரிகளை தூண்டி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளான புதிய பஸ் நிலையம், அண்ணாதிடல், பெரிய–மார்க்கேட் கட்டு–மான பணி–களை நிறுத்தியுள்ளார்.

    நடந்து செல்ல கூட வழியில்லாத மார்க்கெட் பகுதியை நவீனப்படுத்த வியாபாரிகளை முன்னி றுத்தி இந்தியா கூட்டணி கட்சிகள் அரசின் திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுக்கின்றன. மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப வியாபாரிகள் உண்மை நிலையை உணர்ந்து அரசுக்கு துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அவை தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், ராஜாராமன், முன்னாள் கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரவு, எம்.ஏ.கே. கருணாநிதி, குணசேகரன், உமா, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில கழகத் துணைச் செயலாளர்கள் நாகமணி, காந்தி, உழவர் கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற் சங்க பேரவை செயலாளர் பாப்பு சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×