என் மலர்
புதுச்சேரி
- மீன் பிடிக்க வருமாறு சந்திரனை செல்போன் மூலம் கவுதமன் அழைத்துள்ளார்.
- கவுதமன் மோட்டார் சைக்கிளில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றார்.
புதுச்சேரி:
நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தம்போட், அமிர்தா நகரை சேர்ந்தவர் கவுதமன் (வயது 42). அதே ஊரை சேர்ந்தவர் சந்திரன் (43), இருவரும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணிக்கு, மீன் பிடிக்க வருமாறு சந்திரனை செல்போன் மூலம் கவுதமன் அழைத்துள்ளார். அதற்கு சந்திரன் நீ முன்னே செல், நான் பின்னாடி வருகிறேன் என கூறியுள்ளார். இதனால், அதே ஊரைச் சேர்ந்த ராஜம் (38) என்பவரை அழைத்துகொண்டு, கவுதமன் மோட்டார் சைக்கிளில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றார். காரைக்கால்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை திரு.பட்டினம் பிராவிடையான் ஆறு அருகே, காலை 4.15 மணிக்கு சென்றபோது, எதிரே அதிவேகமாக வந்த பால் வாண்டி (மினிவேன்) மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில், இருவரும் சாலையில் தூக்கியெறியப்பட்டு, தலை, கை, கால் முகம் என படுகாயம் அடைந்தனர். சிறிது நேரம் கழித்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சந்திரன், இரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி கவுதமன் இறந்து போனார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜத்திற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை ஏற்படுத்திய, நன்னிலம் திருகொட்டாரம் கீழத்தெருவை சேர்ந்த ஜோதிபாசு (34) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
- அமைச்சர் பதவி நீக்கத்திற்கான கோப்பு ஜனாதிபதியிடம் நிலுவையில் உள்ளது.
- டெல்லிக்கு செல்லும்போதெல்லாம் மத்திய மந்திரிகளை, சந்திர பிரியங்கா சந்தித்து வந்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநில அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா கடந்த 8-ந் தேதி நீக்கப்பட்டார்.
ஆனால் அவர் நீக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும், அரசாணையும் இன்று வரை வெளியிடப்படவில்லை. இதனால் புதுவையில் தொடர் குழப்பம் நீடித்து வருகிறது.
சந்திர பிரியங்கா ஜாதி, பாலின ரீதியில் தாக்குதலுக்கு உள்ளாவதாக தெரிவித்திருந்தார்.
இதனாலேயே பதவி நீக்க அறிவிப்பு வெளியாவது தாமதமாகிறது என கூறப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் தனது தொகுதியில் நடந்த அரசு விழாவில் தேசியக்கொடி பொருத்திய காரில் வந்து சந்திர பிரியங்கா கலந்து கொண்டார்.
இதனால் இன்னும் அமைச்சராக நீடிக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேநேரத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சந்திர பிரியங்கா எம்.எல்.ஏ. என்ற முறையில் தனது தொகுதியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்றார். அவர் இனி எம்.எல்.ஏ.வாக மட்டும் செயல்படுவார்.
அமைச்சர் பதவி நீக்கத்திற்கான கோப்பு ஜனாதிபதியிடம் நிலுவையில் உள்ளது. அதற்கான அறிவிப்பு 2 நாளில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே சந்திர பிரியங்கா பதவி நீக்கத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் தர காலதாமதம் ஆவதற்கு மத்திய மந்திரி காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகனும் தனது பேட்டியில், சந்திர பிரியங்கா நீக்கத்தை மத்திய மந்திரி தடுப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்திருப்பதாக கூறினார்.
சந்திர பிரியங்கா நீக்கத்தை தடுக்கும் மத்திய மந்திரி யார்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
புதுவையில் சட்டசபை தேர்தலின்போது மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், அமித்ஷா, அர்ஜூன் ராம்மெக்வால் உட்பட பல மத்திய மந்திரிகள் பிரசாரம் செய்தனர்.
மத்திய மந்திரி அர்ஜூன்ராம்மெக்வால் புதுவையில் பல்வேறு தொகுதிகளுக்கு சென்று தேர்தல் பணியாற்றினார்.
புதுவை பா.ஜனதா பொறுப்பாளராக இருந்த ராஜூ வர்மா தேர்தலுக்கு பிறகு மத்திய மந்திரியாகியுள்ளார்.
தற்போது பாராளுமன்ற பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராக மத்திய மந்திரி எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மாதத்திற்கு ஒரு முறையாவது புதுவைக்கு வந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதில் எந்த மத்திய மந்திரி, சந்திர பிரியங்கா நீக்கல் விவகாரத்தை தடுத்து வருகிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அமைச்சராக இருந்த சந்திர பிரியங்காவுக்கு அகில இந்திய பா.ஜனதாவின் நிர்வாகிகள், மத்திய மந்திரிகள் ஆகியோருடன் செல்வாக்கு இருந்துள்ளது.
டெல்லிக்கு செல்லும்போதெல்லாம் மத்திய மந்திரிகளை, சந்திர பிரியங்கா சந்தித்து வந்துள்ளார்.
மேலும் அவர்களோடு தொடர்ந்து நட்பில் இருந்து வந்துள்ளார். இதனால் சந்திர பிரியங்கா பதவி நீக்கல் காரணத்திற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
அமைச்சர் பதவி நீக்கத்துக்கு விரைவில் ஒரு முற்றுப்புள்ளி வைத்தால் தான் புதுவையில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.
- முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கென்னடி எம்.எல்.ஏ.மனு
- காவல்துறை மற்றும் தாசில் தார் முன்னிலையில் கூட்டம் நடத்தப்பட்டும் உடன்பாடு எட்டப்படவில்லை.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு அறங்காவல் குழு தேர்வு செய்வதில் நடுத்தெரு ஊர் பஞ்சாயத்தார் மற்றும் அங்காளம்மன் கோவில் பஞ்சாயத்தாரிடையே பிரச்சினை இருந்து வருகிறது.
இதனால் கோவில் பூட்டப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக காவல்துறை மற்றும் தாசில் தார் முன்னிலையில் கூட்டம் நடத்தப்பட்டும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில் இதுசம்பந்த மாக நடுத்தெரு ஊர் பஞ்சாயத்தார் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தலைமையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு கொடுத்தனர்.
அப்போது நடுத்தெரு பொதுமக்கள் முன்னி லையில் கோவிலில் கூட்டம் போட்டு மக்களின் கருத்தை கேட்டு அறங்காவலர் குழு நிர்வாகிகளை முடிவு செய்ய ஆவண செய்ய வேண்டும். ஊர் கோவிலை திறக்க நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இது சம்பந்தமாக உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்ப தாக முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.
- வையாபுரி மணிகண்டன் குற்றச்சாட்டு
- சுயலாப நோக்கோடு திட்டமிட்டு மருத்துவ கலந்தாய்வை சென்டாக் அதிகாரிகள் இழுத்தடித்தனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலா ளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய மருத்துவ ஆணையம் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை முடிக்க உத்தரவிட்டது. ஆனால், தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு சாதகமாகவும், சுயலாப நோக்கோடு திட்டமிட்டு மருத்துவ கலந்தாய்வை சென்டாக் அதிகாரிகள் இழுத்தடித்தனர்.
இந்திய மருத்துவ மையம், சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு என்பதால், செப்டம்பர் 30-ந் தேதிக்கு பிறகு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி யில்லை என திட்டவட்டமாக இப்போது அறிவித்துள்ளது. சென்டாக் அதிகாரிகளின் அலட்சியத்தால் மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.கூடுதல் கால அவகாசம் பெற்று மருத்துவ கலந்தாய்வை நடத்த வேண்டும்.
இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.
- செந்தில்குமார் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார்
- கமலா நேரு திருமண மண்டபம் அருகே ரூ.12 லட்சத்து 18 ஆயிரம் செலவில் மின் துறை சார்பில் புதிய மின்மாற்றி நிறுவப்பட்டது.
புதுச்சேரி:
பாகூர் காமராஜர் நகர் பகுதியில் அடிக்கடி குறைந்தழுத்த மின் பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
இப்பிரச்சினையை சரி செய்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, செந்தில்குமார் எம்.எல்.ஏ., முயற்சியால் பாகூர் கமலா நேரு திருமண மண்டபம் அருகே ரூ.12 லட்சத்து 18 ஆயிரம் செலவில் மின் துறை சார்பில் புதிய மின்மாற்றி நிறுவப்பட்டது. இந்த மின்மாற்றியை செந்தில்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து இயக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மின் துறை செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் சக்திவேல், இளநிலை பொறியாளர் பிரபுராம், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவரும் நிர்வாக இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார்.
- ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு துறை தலைவர் ஜெயக்குமார் செய்திருந்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி, கலிதீர்த்தா ள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ் டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) கல்லூரியில் சென்னை சதர்லேண்ட் நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது.
நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவரும் நிர்வாக இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார்.
கல்லூரி முதல்வர் மலர்க் கண் முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் அந்நிறுவனத்தின் மனித தவளத்துறை மேலாளர் அக்ஷயா கலந்து கொண்டு நிறுவனத்தின் விவரங்கள் வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் பற்றிய அனைத்து விவ ரங்களையும் விளக்கி கூறினார்.
இம்முகாமில், அனைத்து துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், கல்லூரியின் இறுதியாண்டு பொறியியல் படிக்கும் மாணவ-மாணவி கள் மற்றும் 2023-ம் ஆண்டு இளங்கலை பட்டதாரிகள் உட்பட 300-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு துறை தலைவர் ஜெயக்குமார் செய்திருந்தார்.
- நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கி ணைப்பாளர் மதிவாணன் ஆகியோர் முகாம் குறித்து நோக்க உரையாற்றினர்.
- நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அன்பு மொழி நன்றி கூறினார். தமிழ் விரிவுரையாளர் சுந்தரி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் 7 நாள் முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வந்தது.
முகாம் நிறைவு நாள் விழாவில் புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் கலந்துகொண்டு மாணவி களிடையே சிறப்புரை யாற்றினார்.
முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் தெய்வகுமாரி வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் முதல்வர் எழில் கல்பனா தலைமை தாங்கினார். மாநில நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் டாக்டர் சதீஷ்குமார் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கி ணைப்பாளர் மதிவாணன் ஆகியோர் முகாம் குறித்து நோக்க உரையாற்றினர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி மற்றும் பள்ளியின் பொறுப் பாசிரியரும் வேதியியல் விரிவுரையாள ருமான செம்பியன், ஓவிய ஆசிரியர் பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவி களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நெருப்பூட்டுதல் நடைபெற்றது. முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அன்பு மொழி நன்றி கூறினார். தமிழ் விரிவுரையாளர் சுந்தரி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
விழாவிற்கான ஏற்பாடு களை நாட்டு நல பணி திட்ட அலுவலர் மனையியல் விரிவுரையாளர் தெய்வ குமாரி செய்திருந்தார்.
- அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் வழங்கப்படும் உணவு தரமற்ற உள்ளது.
- இதைத்தொட்ந்து மாணவர்கள் சங்கம் சார்பில் கல்வித்துறை இயக்குனரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி:
மதிய உணவில் வாரம் ஒருநாள் அசைவம் வழங்க கோரி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட் டத்துக்கு சங்க தலைவர் ஜெயபிர காஷ், செயலாளர் பிரவீன் குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் வழங்கப்படும் உணவு தரமற்ற உள்ளது. எனவே முட்டை யுடன் மதிய உணவை அரசே வழங்க வேண்டும்.
வாரத்துக்கு ஒரு நாள் புரதம் நிறைந்த அசைவ உணவு வழங்க வேண்டும். ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு பள்ளிகளில் சுத்தமான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி செய்து தர வேண்டும்.
புதுவையில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தக் கூடாது. மாணவர்களுக்கு உடனடி–யாக லேப்-டாப் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இதில் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பலர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் பங்கேற்ற னர். இதைத்தொட்ந்து மாணவர்கள் சங்கம் சார்பில் கல்வித்துறை இயக்குனரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
- முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்
- கீதா பேக்கரி எலைட் கடையில் கேக் வகைகள், காரம் ஸ்வீட் வகைகள், பப்ஸ் வகைகள் தரமாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு உள்ளது.
புதுச்சேரி:
கீதா பேக்கரி எலைட் புதிய கடையை முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
புதுவை மிஷன் வீதியில் கீதா பேக்கரி எலைட் என்ற பெயரில் புதிய பேக்கரி கடை அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. புதிய பேக்கரி கடையை புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிதாக திறக்கப்பட்டுள்ள கீதா பேக்கரி எலைட் கடையில் கேக் வகைகள், காரம் ஸ்வீட் வகைகள், பப்ஸ் வகைகள் தரமாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு உள்ளது.
திறப்பு விழாவில் ஏரா ளமான வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினர்களையும், வாடிக்கை யாளர்களையும் பவித்திரன், கிரீஸ் பவித்திரன் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.
- முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆவேசம்
- சபாநாயகர் செல்வம், சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ.வாக செயல்படுகிறார் என தெரிவிக்கிறார். முன்னுக்கு பின் முரணாக இவர்கள் பதிலளித்து வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-மைச்சர் நாராயணசாமி வெளி யிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-
அமைச்சராக சந்திரபிரியங்கா நீடிக்கிறாரா? அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டாரா? என மக்களிடம் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. இதற்கு பதிலளிக்க வேண்டிய ரங்கசாமி 10 நாளாக எந்த பதிலும் கூறாமல் மவுனமாக இருந்து வருகிறார்.
6 மாதம் முன்பே அமைச்சர் சந்திரபிரியங்காவை நீக்கம் செய்ய முதல்-அமைச்சர் கூறியதாகவும், கவர்னர் அதை தடுத்து அறிவுரை கூறியதாகவும் கவர்னர் தமிழிசை தெரிவித்தி ருந்தார். 6 மாதமாக அமைச்சர் செயல்பாடு சரியில்லாததால் அவரை நீக்க முதல்-அமைச்சர் கடிதம் கொடுத்ததாகவும், அதை உள்துறைக்கு அனுப்பியு ள்ளதாகவும் கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் ஏம்பலம் செல்வமும், அமைச்சர் பதவியிலிருந்து சந்திரபிரியங்கா நீக்கப்பட்டார் என தெரிவித்து ள்ளார். சந்திரபிரியங்கா ராஜினாமா ஏற்கப்பட்டதா? அவர் டிஸ்மிஸ் செய்யப்ப ட்டாரா? என்பது புதுவை மக்களுக்கு புரியாத புதிராக உள்ளது.
கவர்னர் தமிழிசை, இதுதொடர்பாக இனி எந்த கருத்தும் கூற மாட்டேன் என புதுவையில் தெரிவித்துள்ளார். கவர்னர் தனது ரகசிய காப்பு பிரமாணத்தை மீறியுள்ளார். அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என கூறினேன். அதை ஏற்காமல், நான் கவர்னருக்கு எதிராக பேசுவது தான் என் வேலை என விமர்சித்துள்ளார்.
நம் கடமையை செய்யும்போது இம்மியளவும் பிறழாமல் வேலை செய்ய வேண்டும். கவர்னர் எதற்கெடுத்தாலும் பேட்டி கொடுக்கிறார். கவர்னர் வேலையை தவிர மற்ற வேலைகளை தமிழிசை செய்து வருவது வாடிக்கையாக உள்ளது.
உள்துறை அமைச்சகம் முதல்-அமைச்சர் ரங்கசாமி அனுப்பிய, அமைச்சர் பதவி நீக்கத்தை நிராகரித்துவிட்டதாக தகவல் வந்துள்ளது. இதன்மூலம் சந்திரபிரியங்கா ராஜினாமா ஏற்கப்படவில்லை. முதல்-அமைச்சர் கொடுத்த நீக்கல் கடிதமும் ஏற்கப்படவில்லை.
எனவே சந்திரபிரியங்கா தொடர்ந்து அமைச்சராக நீடிக்கிறார். சபாநாயகர் செல்வம், சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ.வாக செயல்படுகிறார் என தெரிவிக்கிறார். முன்னுக்கு பின் முரணாக இவர்கள் பதிலளித்து வருகின்றனர்.
சந்திரபிரியங்கா தனது தொகுதியில் ஒருநிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார். அவர் அலுவலகத்திலிருந்து அமைச்ச ராக நீடிக்கி றார் என தகவல் செய்தி வெளியா கிறது. இது போன்ற புதுவை மக்களை ஏமாற்றும், உண்மையை சொல்லாத மர்மமான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சி நடக்கிறது.
என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதால், முதல்-அமைச்சர் கடிதம் உள்துறை அமைச்சகத்தால் ஏற்கப்படவில்லை.
இந்த நாடகத்தை பா.ஜனதா முழுமையாக அரங்கேற்றி வருகிறது. ரங்கசாமிக்கு நெருக்கடி தரும் வேலையை பா.ஜனதா செய்து வருகிறது. புதுவையை சேர்ந்த பா.ஜனதாவினர் ரங்கசாமிக்கு ஆதரவாக இருப்பதுபோல நாடகமாடி இரட்டை வேடம் போடுகின்றனர்.
என்ஆர்.காங்கிரசை சேர்ந்த வர்கள் பா.ஜனதா கூட்டணி யிலிருந்து வெளியேற வேண்டும் என மற்றொரு நாடகமாடு கின்றனர். திரைமறைவில் இவர்கள் ஆடிய நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பா.ஜனதாவை தூண்டி விடுவதும், என்.ஆர்.காங்கிரசாரை தூண்டிவிடுவதும் ரங்கசாமிதான்.
எல்லோரையும் கோரிக்கை வைக்கச்சொல்லி ரங்கசாமி வேடிக்கை பார்க்கிறார்.
உள்துறை முதல்- அமைச்சர் கடிதத்தை நிராகரித்துவிட்டதால் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் முதல்- அமைச்சராக இருக்க தகுதியில்லை. ஒரு முதல்- அமைச்சருக்கு அமைச்சரை நியமிக்கவும், நீக்கவும் அதிகாரம் உண்டு.
அந்த அதிகாரத்தில் உள்துறை அமைச்சகம் நேரடியாக ஈடுபட்டுள்ளது. எனவே முதல்- அமைச்சர் பதவியில் ரங்கசாமி நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார். ஒருநிமிடம் கூட ரங்கசாமி முதல்- அமைச்சராக நீடிக்கக்கூடாது.
எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் . அதுதான் அவருக்குள்ள மரியாதை யாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
- என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் 200-பேர் படிக்கும் மாணவர்கள் சென்டாக் கலந்தாய்வு மூலம் சேர்க்கைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி:
புதுவை பெற்றோர்-மாணவர் நலச்சங்க தலைவர் வை.பாலா கவர்னர் தமிழிசை மற்றும் முதல்-அமைச்சர் ரங்கசாமி க்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிரு ப்பதாவது:-
தேசிய மருத்துவ கமிட்டியின் பொது அறிவிப்பின்படி இளநிலை மருத்துவ கல்லூரியின் இயக்குநர் சம்பு ஷரன் குமார் விடுத்துள்ள சுற்றறிக்கையில் மாநில மற்றும் யூனியன் பிரதே சங்களால் 30.09.2023 பிறகு நடத்தப்பட்ட மருத்துவ கலந்தாய்வை தகுதியற்றது எனக் கூறி நிராகரித்து ள்ளது.
புதுவை சுகாதாரத்துறை க்கும் மற்றும் சென்டாக் நிர்வாகத்திற்கும் பலமுறை எங்கள் அமைப்பின் மூலம் மருத்துவ கலந்தாய்வை காலத்தோடு நடத்திட வலியுறுத்தி மனு அளித்தி ருந்தோம்.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 4-ந் தேதி 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு மற்றும் 14-ந் தேதி மாப்பாப் கலந்தாய்வு நடத்தி அரசு ஒதுக்கீட்டில் 50-க்கு மேற்பட்ட மாணவர்களும் மற்றும் நிர்வாக மற்றும் என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் 200-பேர் படிக்கும் மாணவர்கள் சென்டாக் கலந்தாய்வு மூலம் சேர்க்கைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே காலதாமதமாக நடைபெற்ற கலந்தாய்விற்கு மத்திய அரசையும், மத்திய கலந்தாய்வு கமிட்டியையும் அணுகி உரிய அனுமதி யினைப் பெறவேண்டும். மேலும் இது உச்சநீதி மன்றத்தின் வழக்கின் தீர்ப்பை மேற்கோள்காட்டி தற்போது தேசிய மருத்துவ கவுன்சில் 30.09.2023-க்குள் அனைத்து கவுன்சிலையும் முடித்துக் கொ ள்ள வேண்டும் என அறிவித்து ள்ளதால் புதுவை அரசும், உச்ச நீதிமன்றத்தினை அணுகி காலதாமதமாக சேர்க்கைப் பெற்ற மாண வர்களின் சேர்க்கையினை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அன்பழகன் ஆரூடம்
- அதேபோல கூட்டணி கட்சியை பலகீனப்படுத்தி, பிளவுபடுத்தி ஆட்சி மாற்றம் செய்வதாக பா.ஜனதா மீது ஏற்கனவே புகார் உள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அமைச்சர வையில் ஒரு அமைச்சரை சேர்ப்பதும், நீக்குவதும் முதல்- அமைச்சரின் உரிமை. அந்தவகையில் தனது அமைச்ச ரவையில் இடம் பெற்றிருந்த பெண் அமைச்சரை முதல்-அமைச்சர் நீக்கினார்.
இதற்கான அனுமதி ஜனாதிபதியிடம் இருப்பதாக தகவல் சொல்கின்றனர். கடந்த காலத்தில் முதல்-அமைச்சராக இருந்த சண்முகம், தனது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த கண்ணனை நீக்கினார்.
நீக்கிய ஒரு மணி நேரத்தில் அதற்கான உத்தரவு வெளி வந்தது. இதற்கு முதல்-அமைச்சரின் பரிந்து ரையும், கவர்னரின் ஒப்புதலும் போதும். புதிய அமைச்சரை நியமிக்கத்தான் ஜனாதிபதி வரை அனுமதி பெற வேண்டும்.
அமைச்சரை நீக்க தனியாக கடிதமும், புதிய அமைச்சரை நியமிக்க தனியாக என 2 கடிதம் அளித்திருக்க வேண்டும். என்ஆர்.காங்கிரசுடன் கூட்டணியாக உள்ள பாஜக முதல்-அமைச்சருக்கு திட்டமிட்டு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் முதல்- அமைச்சரின் செயல்பாட்டில் பலகீனம் ஏற்படுகிறது. மத்திய பா.ஜனதா மந்திரி ஒருவரும், மாநில பா.ஜனதா மந்திரி ஒருவரும் சந்திரபிரியங்கா நீக்கத்தை தடுத்து நிறுத்துவதாக அதிகாரப்பூர்வ தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது.
இதேநிலை நீடித்தால் ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்து விடும். ஏற்கனவே முதல்-அமைச்ச ருக்கு பல்வேறு இடையூறு களை பா.ஜனதா அளித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. அதேபோல கூட்டணி கட்சியை பலகீனப்படுத்தி, பிளவுபடுத்தி ஆட்சி மாற்றம் செய்வதாக பா.ஜனதா மீது ஏற்கனவே புகார் உள்ளது.
இந்த புகார் புதுவையிலும் எழுகிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமி விழித்துக்கொள்வது நல்லது. ஒரு அமைச்சர் நீக்கத்துக்கு 15 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இது நாகரீகமான அரசியலுக்கான வழி அல்ல. இதற்கு என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இரு கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும்.
தற்போதைய அரசியல் சூழலால் பாராளுமன்ற தேர்தலோடு புதுவை சட்டமன்ற தேர்தலும் வரலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






