என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • மயிலம் கல்வி இயக்குனர் செந்தில் சிறப்புரை ஆற்றினார்.
    • மயிலம் செவிலியர் கல்லூரியின் துணை முதல்வர் அருணா நன்றி கூறினார்.

    புதுச்சேரி:

    மயிலம் கல்வி குழுமத்தின் ஓர் அங்கமான மயிலம் செவிலியர் கல்லூரி (பி.எஸ்.சி. நர்சிங்), துணை செவிலியர் படிப்பு (ஏ.என்.எம்.) மற்றும் சுகாதார ஆய்வாளர் (ஹெல்த் இன்ஸ்பெக்டர்) ஆகிய பிரிவுகளில் 5-ம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா நடைபெற்றது.

    விழாவில் தட்சசீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும் மயிலம் சுப்பிரமணிய சுவாமி கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநருமான தனசேகரன் தலைமை தாங்கினார்.

    செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலம் செவிலியர் கல்லூரி முதல்வர் தமிழ்செல்வி வரவேற்றார். மயிலம் கல்வி இயக்குனர் செந்தில் சிறப்புரை ஆற்றினார்.

    விழுப்புரம் சுகாதாரத்துறையின் இணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

    மேலும் விழாவில் மயிலம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் ராஜப்பன், மயிலம் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மெண்ட் முதல்வர் பாலகிருஷ்ணன் மற்றும் கல்வி குழுமத்தின் அனைத்து துறைத் தலைவர்களும், பேராசிரியர்கள் மற்றும் புதிய அறிமுக மாணவர்கள் , பெற்றோருடன் கலந்துகொண்டனர்.

    முடிவில் மயிலம் செவிலியர் கல்லூரியின் துணை முதல்வர் அருணா நன்றி கூறினார்.

    • வெளிமாநில சுற்றுலா பயணிகள் வாகனங்களில் நகரின் பல்வேறு இடங்களில் வலம் வந்தன.
    • போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

    புதுச்சேரி:

    சுற்றுலா தலமான புதுவைக்கு வார இறுதிநாட்கள் மற்றும் தொடர் விடுமுறைநாட்களில் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில் சனி, ஞாயிறு, திங்கட்கிழமை (ஆயுதபூஜை), செவ்வாய்க்கிழமை (விஜயதசமி) என தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இதனால் வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்துள்ளனர். குறிப்பாக சென்னை- பெங்களூரில் ஏராளமான உள்ள சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

    இதனால் புதுவையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. மேலும் ரெஸ்டோ பார், மதுபார்களில் மதுப்பிரியர்கள் கூட்டம் களைகட்டுகிறது.

    சுற்றுலா பயணிகள் வருகையால் புதுவை கடற்கரை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, படகு குழாம், மணக்குள விநாயகர், அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்டபல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதை காண முடிந்தது.

    வெளிமாநில சுற்றுலா பயணிகள் வாகனங்களில் நகரின் பல்வேறு இடங்களில் வலம் வந்தன. இதனால் புதுவை அண்ணா சாலை, காமராஜ் சாலை, புஸ்சி வீதி, கடற்கரைசாலை, ஆம்பூர் சாலை, செஞ்சி சாலை, ஓயிட் டவுன் பகுதி, நேரு வீதி, காந்தி வீதி உள்ளிட்ட பிரதான சாலைகளில், முக்கிய சந்திப்புகளில் நேற்று மாலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

    புதுச்சேரிக்கு பெரும்பாலும் தமிழக அரசு பஸ்கள் தான் இயக்கப்படுகிறது. இந்தநிலையில் புதுச்சேரிக்கு வரும் தமிழக அரசு பஸ்கள் புதுவை புதிய பஸ் நிலையத்திற்குள் வருவதில்லை என பயணிகள் தரப்பில் புகார் தெரிவித்தனர். இதன் காரணமாக தமிழக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நேற்று மறைமலையடிகள் சாலையில் திடீர் ஆய்வு நடத்தினார்கள். அப்போது புதுவை பஸ் நிலையத்திற்குள் வராமல் சென்ற பஸ்களை மறித்து டிரைவர், கண்டக்டர்களை எச்சரித்தனர். 

    • கல்வியியலில் புதுமை கற்றல் மற்றும் மதிப்பீடு மாதிரிகள் சிறந்து விளங்கும் நிறுவனத்துக்கான விருது வழங்கப்பட்டு அங்கிகரிக்கப்பட்டுள்ளது.
    • ஆலோசகர் சுரேஷ் சாமுவேல் மற்றும் துறை பேராசிரியர்கள் பாராட்டு மற்றும் வாழ்த்தினை தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், சென்னை ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகம், புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் கற்றல் செயற்பாடுகளுக்கான ஐ.டி.ஏ. விருதுகள் அமைப்பின் மூலம் கல்வியியலில் புதுமை கற்றல் மற்றும் மதிப்பீடு மாதிரிகள் சிறந்து விளங்கும் நிறுவனத்துக்கான விருது வழங்கப்பட்டு அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்த விருதினை ஹெல்த் சயின்ஸ் துறையின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில் குமார் பெற்றுக்கொண்டார்.

    இதை தொடர்ந்து விருதினை பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய டாக்டர் செந்தில் குமாரை பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கணேசன் மற்றும் துணைத் தலைவர் டாக்டர் அனுராதா கணேசன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகர் சுரேஷ் சாமுவேல் மற்றும் துறை பேராசிரியர்கள் பாராட்டு மற்றும் வாழ்த்தினை தெரிவித்தனர்.

    • முனியப்பன் தனது கூட்டாளிகளுடன் ஆயுதங்களுடன் வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்த முயற்சி செய்தனர்.
    • தப்பியோடிய முக்கிய குற்றவாளியான முனியப்பனை வலை வீசி தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அருகே திருக்கனூரை அடுத்துள்ள லிங்காரெட்டி பாளையத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும், தமிழக பகுதியான கரசானூர் கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் ஒரு மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. அவர்கள் லிங்கா ரெட்டிபாளையத்தில் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அந்த இளம்பெண்ணை, புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த முனியப்பன் என்ற தினேஷ் என்பவர் ஒருதலையாய் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    திருமணத்திற்கு பிறகும் அந்த இளம்பெண்ணை தன்னுடன் வந்து விடுமாறு முனியப்பன் தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால் அதற்கு அந்த இளம்பெண் மறுப்பு தெரிவித்து தனது கணவருடன் தான் வாழ்வேன் என உறுதிபட கூறியதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த முனியப்பன் தனது நண்பர்களான லாஸ்பேட்டையை சேர்ந்த இளஞ்செழியன், அதே பகுதியை சேர்ந்த இளவரசன், ராகுல், அசோக், அய்யப்பன் ஆகியோரை சேர்த்துக்கொண்டு ஆயுதங்களுடன் நேற்று இரவு 7 மணி அளவில் லிங்கா ரெட்டிபாளையம் வந்தார்.

    பின்னர் முனியப்பன் தனது கூட்டாளிகளுடன் ஆயுதங்களுடன் வீடு புகுந்து அந்த இளம்பெண்ணை கடத்த முயற்சி செய்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை அறிந்த அவர்கள் அங்கிருந்து காரில் தப்பி சென்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் காட்டேரிக்குப்பம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதற்கிடையே அந்த இந்த கார் காட்டேரிக்குப்பம் வழியாக சென்ற போது போலீசாரும், பொதுமக்களுடன் இணைந்து காரை வழிமறித்தனர். அப்போது முனியப்பன் தப்பியோடி விட்டார்.

    மேலும் காரில் இருந்து இளஞ்செழியன் உள்பட 5 பேரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், 4 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பியோடிய முக்கிய குற்றவாளியான முனியப்பனை வலை வீசி தேடி வருகின்றனர்.

    ஆயுதங்களுடன் வீடு புகுந்து புதுப்பெண்ணை கடத்த முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் பங்கேற்பு
    • புதுவை பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான செல்வகணபதி எம்.பி அனைவரையும் வரவேற்று பேசினார்.

    புதுச்சேரி:

    புதுவை அய்யங்குட்டி பாளையத்தில் புதிதாக அமைந்துள்ள விவேகா னந்தா செவிலியர் கல்லூரி யின் தொடக்க விழா வாணி மஹாலில் நடந்தது.

    சிறப்பு விருந்தினராகப் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு விவேகா னந்தா செவிலியர் கல்லூ ரியை திறந்து வைத்தார். முன்னதாகப் பள்ளியின் தாளாளரும் புதுவை பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான செல்வகணபதி எம்.பி அனைவரையும் வரவேற்று பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், குடிமைப்பொருள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், அரசு கொறடா ஏ.கே.டி ஆறுமுகம் சிவசங்கரன் எம்.எல்.ஏ, ஆகியோர் சிறப்புறையா ற்றினார்கள்.

    விழாவில் செவிலியர் கல்லூரியின் மாணவர்களும் பெற்றோர்களும், ஊர் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு
    • ஆண்டு தோறும் அக்டோபர் 21-ந் தேதி பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு நினைவு தினம் அனுசரிக் கப்படுகிறது.

    புதுச்சேரி:

    காவல் துறையில் பணியில் இருந்தபோது இறந்த காவலர்கள் நினைவாக அஞ்சலி செலுத்தும் தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படு கிறது.

    சீன படையினரால் எல்லையில் 1959-ம் ஆண்டு நடந்த சண்டையின் போது எல்லை பாதுகாப்பு வீரர்கள் வீரமரண மடைந்தனர். பலர் காணாமல் போனார்கள்.

    இந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் அக்டோபர் 21-ந் தேதி பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

    அந்த வகையில் நாடு முழுவதும் கடந்த ஆண்டு பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    புதுவை கோரிமேட்டில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல் -அமைச்சர் ரங்கசாமி நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அமைச்சர் நமச்சிவாயம், அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், டி.ஜி.பி. ஸ்ரீநிவாஸ், ஏ.டி.ஜி.பி. பிரிஜேந்திரகுமார் யாதவ் ஆகியோரும் மலர் வளையம் வைத்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர். 21 குண்டுகள் முழங்க வீர வணக்கம் செலுத்தப்பட்டது. 

    • புதுச்சேரி நோக்கி வந்த தனியார் பஸ் பயணிகளை இறக்கி விட்டு நள்ளிரவு ஓய்வு எடுப்பதற்காக முதலியார் பேட்டை நோக்கி வந்தது.
    • போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் இயக்கப் பட்டு வரும் தனியார் பஸ்கள் பணி நேரம் முடிந்து இரவு நேரங்களில் காலியான இடங்களில் நிறுத்திவிட்டு டிரைவர்கள் ஓய்வெடுப்பது வழக்கம்.

    அதுபோல் நேற்று இரவு கோரிமேட்டில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த தனியார் பஸ் பயணிகளை இறக்கி விட்டு  நள்ளிரவு ஓய்வு எடுப்பதற்காக முதலியார் பேட்டை நோக்கி வந்தது.

    முதலியார் பேட்டையில் இருந்து உடையார் தோட்டம் வழியாக துறைமுகம் செல்லும் வழியில் பஸ் சென்ற போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியது. மேலும் அருகில் உள்ள வீட்டிலும் மோதி நின்றது.

    இந்த விபத்தில் மின்கம்பம் சேதம் அடைந்த துடன் வீட்டின் முன் பகுதி சேதமானது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.

    விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த திடீர் விபத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • மார்க்சிஸ்டு வலியுறுத்தல்
    • முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் அரசு அதிகாரிகள் மீது புதுவை அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் தனியார் மருத்துவ கல்லூரி நிறுவனங்களுக்கு ஆதரவாக சென்டாக் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது என தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறோம். ஊழல், முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் அரசு அதிகாரிகள் மீது புதுவை அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    மாணவர் சேர்க்கையில் நடைபெறும் அனைத்து முறைகேடுகளுக்கும் சென்டாக் அதிகாரிகளும், புதுவை அரசும் தான் காரணம். எனவே உடனடி யாக சென்டக் கன்வீனர், சென்டாக் அதிகாரிகள் மற்றும் புதுவை அரசு மீது ஒய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.
    • மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் பொதுச்செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன்பா ளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் குளம், ஏரி, இயற்கைச் சார்ந்த பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் 16-வது வாரமான இன்று புதுவை அபிஷேகப்பாக்கம் அயிற்றூர் மகாதேவர் கோவிலில் உள்ள குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.

    பூரணாங்குப்பத்தை சேர்ந்த பச்சையப்பன், தவளக்குப்பம் ரமேஷ், மற்றும் கோஜூரியோ கராத்தே சங்கத் துணைத் தலைவர் மதிஒளி புதுச்சேரி மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் பொதுச்செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விரிவுரையாளர் ஜெயந்தி செய்திருந்தார்.

    • 4 பஸ்களுக்கு அபராதம் விதிப்பு
    • நீண்ட தூரம் செல்லும் தனியார் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வந்தது.

    புதுச்சேரி:

    ஆயுத பூஜை பண்டிகை யொட்டி இன்று 21-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை 4 தினங்கள் விடுமுறை நாட்களாக உள்ளது.

    இந்த விடுமுறையை பயன்படுத்தி பலரும் சொந்த ஊருக்கு செல்வதற்காக ரயில், பஸ், ஆம்னி பஸ் களில் செல்கின்றனர்.

    ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பயணிகள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதால் ரெயில் மற்றும் பஸ்களில் டிக்கெட் கிடைக்கவில்லை.

    இதனால் நீண்ட தூரம் செல்லும் தனியார் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வந்தது.

    அதையடுத்து தமிழக அரசு ஒவ்வொரு ஊருக்கும் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற ஆணையை வெளியிட்டது. அதன் அடிப்படையில் புதுவையை அடுத்த தமிழக பகுதியான மொரட்டாண்டி டோல்கேட்டில் திண்டிவனம் சரக்கு போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் போக்குவரத்து ஆய்வாளர் சுந்தர்ராஜன் தலைமை யிலான போக்குவரத்து துறை அலுவலர்கள் சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து புதுவை நோக்கி வந்த தனியார் பஸ் மற்றும் தனியார் ஆம்னி பஸ்களை நிறுத்தி பரிசோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 4 ஆம்னி பஸ்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் விதிக்கப்பட்டது. 

    • மாணவர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
    • தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணி நியமனத்தில் வயது தளர்வு அளிக்கவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் தொடக்கப்பள்ளி ஆசிரிய ருக்கான பணி நியமன அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் வயது வரம்பு, ஒதுக்கீட்டில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. 10 ஆண்டுக்கு பிறகு நிரப்பப்படும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணி நியமனத்தில் வயது தளர்வு அளிக்கவில்லை.

    இதனால் பலர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் 6-வது ஊதிய குழுவை பின்பற்றி பணிநியமன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.

    எனவே இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்து வயது தளர்வு, சீனியாரிட்டி, 7-வது சம்பளக்குழு பரிந்து ரையின் படி புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • போலீசாருடன் வாக்குவாதம்
    • புதுவை விளையாட்டு வீரர் நலச்சங்கத்தினர் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் எதிரே போராட்டம் நடத்தப்போ வதாக அறிவித்திருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானம் மற்றும் அங்குள்ள ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கத்தை பராமரிக்கவும், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி, விளையாட்டு பயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக தரமான குடிநீர், சுகாதாரமான கழிப்பிட வசதி, இரவு நேரங்களில் பயிற்சி மேற்கொள்ள போதிய மின்விளக்கு வசதி ஆகிய வற்றை செய்து தரவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை விளையாட்டு வீரர் நலச்சங்கத்தினர் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் எதிரே போராட்டம் நடத்தப்போ வதாக அறிவித்திருந்தனர்.

    அதன்படி நேற்று மாலை அனைத்து விளையாட்டு வீரர்கள் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் அருகே ஒன்று திரண்டனர். அவர்கள் திடீரென விளையாட்டு மைதான கேட்டை பூட்டு போட்டு திடீர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு தலைவர் கராத்தே வளவன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கீதநாதன், கோவிந்தராஜ், சதீஷ், பிரகதீஸ்வரன், செந்தில் வேல், டி.வி.நகர் ராஜா உள்ளிட்ட 50க்கும் மேற் பட்டோர் கலந்து கொண் டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த ஒதியஞ்சாலை இன்ஸ் பெக்டர் வெங்கடாஜலதி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மைதா னத்தின் வாயில் கதவை ஏன் மூடுகிறீர்கள்? என போலீசார் கேட்டனர். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் வாயில் கதவு திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு விளையாட்டு துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதில் உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். விளை யாட்டு உபகரணங்கள், தேசிய போட்டிகளில் பங்கேற் கும் வீரர்களுக்கு அரசு உதவித்தொகை, ஊக்கத் தொகை ஆகியவற்றை நேரடியாக வழங்கவும், மைதானத்தின் அனைத்து இடங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி டவும், போதிய செக்யூரிட்டி களை பாதுகாப்புக்கு நியமி த்து பாதுகாப்பு வச திகளை மேம்படுத்தவும், ரூ.8 கோடி செலவு செய்து அமைக்கப்ப ட்டுள்ள சிந்தடிக் ஓடுதளத்தை உடனே திறந்து பயன் பாட்டுக்கு கொண்டு வரவும், ராஜீவ்காந்தி உள்விளை யாட்டு அரங்கில் ரூ.4 கோடி செலவில் அமைக்கப்பட்ட ஏசி உபகரணங் களுக்கு மின் இணைப்பு வழங்கவும் கோரி கோஷ மிட்டனர்.

    ×