search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆம்னி பஸ்களில் போக்குவரத்து அதிகாரிகள் சோதனை
    X

     மொரட்டாண்டி டோல்கேட்டில் திண்டிவனம் சரக போக்குவரத்து ஆய்வாளர் சுந்தர்ராஜன் ஆம்னி பஸ்சில் ஆய்வு செய்த காட்சி.

    ஆம்னி பஸ்களில் போக்குவரத்து அதிகாரிகள் சோதனை

    • 4 பஸ்களுக்கு அபராதம் விதிப்பு
    • நீண்ட தூரம் செல்லும் தனியார் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வந்தது.

    புதுச்சேரி:

    ஆயுத பூஜை பண்டிகை யொட்டி இன்று 21-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை 4 தினங்கள் விடுமுறை நாட்களாக உள்ளது.

    இந்த விடுமுறையை பயன்படுத்தி பலரும் சொந்த ஊருக்கு செல்வதற்காக ரயில், பஸ், ஆம்னி பஸ் களில் செல்கின்றனர்.

    ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பயணிகள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதால் ரெயில் மற்றும் பஸ்களில் டிக்கெட் கிடைக்கவில்லை.

    இதனால் நீண்ட தூரம் செல்லும் தனியார் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வந்தது.

    அதையடுத்து தமிழக அரசு ஒவ்வொரு ஊருக்கும் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற ஆணையை வெளியிட்டது. அதன் அடிப்படையில் புதுவையை அடுத்த தமிழக பகுதியான மொரட்டாண்டி டோல்கேட்டில் திண்டிவனம் சரக்கு போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் போக்குவரத்து ஆய்வாளர் சுந்தர்ராஜன் தலைமை யிலான போக்குவரத்து துறை அலுவலர்கள் சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து புதுவை நோக்கி வந்த தனியார் பஸ் மற்றும் தனியார் ஆம்னி பஸ்களை நிறுத்தி பரிசோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 4 ஆம்னி பஸ்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் விதிக்கப்பட்டது.

    Next Story
    ×