என் மலர்
புதுச்சேரி

மயிலம் செவிலியர் கல்லூரியில் மாணவர்கள் அறிமுக விழா நடந்த போது எடுத்த படம்.
மயிலம் செவிலியர் கல்லூரியில் மாணவர்கள் அறிமுக விழா
- மயிலம் கல்வி இயக்குனர் செந்தில் சிறப்புரை ஆற்றினார்.
- மயிலம் செவிலியர் கல்லூரியின் துணை முதல்வர் அருணா நன்றி கூறினார்.
புதுச்சேரி:
மயிலம் கல்வி குழுமத்தின் ஓர் அங்கமான மயிலம் செவிலியர் கல்லூரி (பி.எஸ்.சி. நர்சிங்), துணை செவிலியர் படிப்பு (ஏ.என்.எம்.) மற்றும் சுகாதார ஆய்வாளர் (ஹெல்த் இன்ஸ்பெக்டர்) ஆகிய பிரிவுகளில் 5-ம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா நடைபெற்றது.
விழாவில் தட்சசீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும் மயிலம் சுப்பிரமணிய சுவாமி கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநருமான தனசேகரன் தலைமை தாங்கினார்.
செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலம் செவிலியர் கல்லூரி முதல்வர் தமிழ்செல்வி வரவேற்றார். மயிலம் கல்வி இயக்குனர் செந்தில் சிறப்புரை ஆற்றினார்.
விழுப்புரம் சுகாதாரத்துறையின் இணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் விழாவில் மயிலம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் ராஜப்பன், மயிலம் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மெண்ட் முதல்வர் பாலகிருஷ்ணன் மற்றும் கல்வி குழுமத்தின் அனைத்து துறைத் தலைவர்களும், பேராசிரியர்கள் மற்றும் புதிய அறிமுக மாணவர்கள் , பெற்றோருடன் கலந்துகொண்டனர்.
முடிவில் மயிலம் செவிலியர் கல்லூரியின் துணை முதல்வர் அருணா நன்றி கூறினார்.






