என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது
    X

    விநாயகா‌ மிஷன் பல்கலைக்கழகத்திற்கு‌ட்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது வழங்கிய காட்சி.

    விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது

    • கல்வியியலில் புதுமை கற்றல் மற்றும் மதிப்பீடு மாதிரிகள் சிறந்து விளங்கும் நிறுவனத்துக்கான விருது வழங்கப்பட்டு அங்கிகரிக்கப்பட்டுள்ளது.
    • ஆலோசகர் சுரேஷ் சாமுவேல் மற்றும் துறை பேராசிரியர்கள் பாராட்டு மற்றும் வாழ்த்தினை தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், சென்னை ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகம், புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் கற்றல் செயற்பாடுகளுக்கான ஐ.டி.ஏ. விருதுகள் அமைப்பின் மூலம் கல்வியியலில் புதுமை கற்றல் மற்றும் மதிப்பீடு மாதிரிகள் சிறந்து விளங்கும் நிறுவனத்துக்கான விருது வழங்கப்பட்டு அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்த விருதினை ஹெல்த் சயின்ஸ் துறையின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில் குமார் பெற்றுக்கொண்டார்.

    இதை தொடர்ந்து விருதினை பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய டாக்டர் செந்தில் குமாரை பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கணேசன் மற்றும் துணைத் தலைவர் டாக்டர் அனுராதா கணேசன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகர் சுரேஷ் சாமுவேல் மற்றும் துறை பேராசிரியர்கள் பாராட்டு மற்றும் வாழ்த்தினை தெரிவித்தனர்.

    Next Story
    ×