search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரங்கசாமி முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்
    X

    கோப்பு படம்.

    ரங்கசாமி முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்

    • முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆவேசம்
    • சபாநாயகர் செல்வம், சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ.வாக செயல்படுகிறார் என தெரிவிக்கிறார். முன்னுக்கு பின் முரணாக இவர்கள் பதிலளித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-மைச்சர் நாராயணசாமி வெளி யிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

    அமைச்சராக சந்திரபிரியங்கா நீடிக்கிறாரா? அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டாரா? என மக்களிடம் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. இதற்கு பதிலளிக்க வேண்டிய ரங்கசாமி 10 நாளாக எந்த பதிலும் கூறாமல் மவுனமாக இருந்து வருகிறார்.

    6 மாதம் முன்பே அமைச்சர் சந்திரபிரியங்காவை நீக்கம் செய்ய முதல்-அமைச்சர் கூறியதாகவும், கவர்னர் அதை தடுத்து அறிவுரை கூறியதாகவும் கவர்னர் தமிழிசை தெரிவித்தி ருந்தார். 6 மாதமாக அமைச்சர் செயல்பாடு சரியில்லாததால் அவரை நீக்க முதல்-அமைச்சர் கடிதம் கொடுத்ததாகவும், அதை உள்துறைக்கு அனுப்பியு ள்ளதாகவும் கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வமும், அமைச்சர் பதவியிலிருந்து சந்திரபிரியங்கா நீக்கப்பட்டார் என தெரிவித்து ள்ளார். சந்திரபிரியங்கா ராஜினாமா ஏற்கப்பட்டதா? அவர் டிஸ்மிஸ் செய்யப்ப ட்டாரா? என்பது புதுவை மக்களுக்கு புரியாத புதிராக உள்ளது.

    கவர்னர் தமிழிசை, இதுதொடர்பாக இனி எந்த கருத்தும் கூற மாட்டேன் என புதுவையில் தெரிவித்துள்ளார். கவர்னர் தனது ரகசிய காப்பு பிரமாணத்தை மீறியுள்ளார். அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என கூறினேன். அதை ஏற்காமல், நான் கவர்னருக்கு எதிராக பேசுவது தான் என் வேலை என விமர்சித்துள்ளார்.

    நம் கடமையை செய்யும்போது இம்மியளவும் பிறழாமல் வேலை செய்ய வேண்டும். கவர்னர் எதற்கெடுத்தாலும் பேட்டி கொடுக்கிறார். கவர்னர் வேலையை தவிர மற்ற வேலைகளை தமிழிசை செய்து வருவது வாடிக்கையாக உள்ளது.

    உள்துறை அமைச்சகம் முதல்-அமைச்சர் ரங்கசாமி அனுப்பிய, அமைச்சர் பதவி நீக்கத்தை நிராகரித்துவிட்டதாக தகவல் வந்துள்ளது. இதன்மூலம் சந்திரபிரியங்கா ராஜினாமா ஏற்கப்படவில்லை. முதல்-அமைச்சர் கொடுத்த நீக்கல் கடிதமும் ஏற்கப்படவில்லை.

    எனவே சந்திரபிரியங்கா தொடர்ந்து அமைச்சராக நீடிக்கிறார். சபாநாயகர் செல்வம், சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ.வாக செயல்படுகிறார் என தெரிவிக்கிறார். முன்னுக்கு பின் முரணாக இவர்கள் பதிலளித்து வருகின்றனர்.

    சந்திரபிரியங்கா தனது தொகுதியில் ஒருநிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார். அவர் அலுவலகத்திலிருந்து அமைச்ச ராக நீடிக்கி றார் என தகவல் செய்தி வெளியா கிறது. இது போன்ற புதுவை மக்களை ஏமாற்றும், உண்மையை சொல்லாத மர்மமான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சி நடக்கிறது.

    என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதால், முதல்-அமைச்சர் கடிதம் உள்துறை அமைச்சகத்தால் ஏற்கப்படவில்லை.

    இந்த நாடகத்தை பா.ஜனதா முழுமையாக அரங்கேற்றி வருகிறது. ரங்கசாமிக்கு நெருக்கடி தரும் வேலையை பா.ஜனதா செய்து வருகிறது. புதுவையை சேர்ந்த பா.ஜனதாவினர் ரங்கசாமிக்கு ஆதரவாக இருப்பதுபோல நாடகமாடி இரட்டை வேடம் போடுகின்றனர்.

    என்ஆர்.காங்கிரசை சேர்ந்த வர்கள் பா.ஜனதா கூட்டணி யிலிருந்து வெளியேற வேண்டும் என மற்றொரு நாடகமாடு கின்றனர். திரைமறைவில் இவர்கள் ஆடிய நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பா.ஜனதாவை தூண்டி விடுவதும், என்.ஆர்.காங்கிரசாரை தூண்டிவிடுவதும் ரங்கசாமிதான்.

    எல்லோரையும் கோரிக்கை வைக்கச்சொல்லி ரங்கசாமி வேடிக்கை பார்க்கிறார்.

    உள்துறை முதல்- அமைச்சர் கடிதத்தை நிராகரித்துவிட்டதால் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் முதல்- அமைச்சராக இருக்க தகுதியில்லை. ஒரு முதல்- அமைச்சருக்கு அமைச்சரை நியமிக்கவும், நீக்கவும் அதிகாரம் உண்டு.

    அந்த அதிகாரத்தில் உள்துறை அமைச்சகம் நேரடியாக ஈடுபட்டுள்ளது. எனவே முதல்- அமைச்சர் பதவியில் ரங்கசாமி நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார். ஒருநிமிடம் கூட ரங்கசாமி முதல்- அமைச்சராக நீடிக்கக்கூடாது.

    எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் . அதுதான் அவருக்குள்ள மரியாதை யாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×