என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sendak officials"

    • வையாபுரி மணிகண்டன் குற்றச்சாட்டு
    • சுயலாப நோக்கோடு திட்டமிட்டு மருத்துவ கலந்தாய்வை சென்டாக் அதிகாரிகள் இழுத்தடித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலா ளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய மருத்துவ ஆணையம் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை முடிக்க உத்தரவிட்டது. ஆனால், தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு சாதகமாகவும், சுயலாப நோக்கோடு திட்டமிட்டு மருத்துவ கலந்தாய்வை சென்டாக் அதிகாரிகள் இழுத்தடித்தனர்.

     இந்திய மருத்துவ மையம், சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு என்பதால், செப்டம்பர் 30-ந் தேதிக்கு பிறகு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி யில்லை என திட்டவட்டமாக இப்போது அறிவித்துள்ளது. சென்டாக் அதிகாரிகளின் அலட்சியத்தால் மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.கூடுதல் கால அவகாசம் பெற்று மருத்துவ கலந்தாய்வை நடத்த வேண்டும்.

    இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    ×