search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் காளானிலிருந்து மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி முகாம்
    X

    பயிற்சி முகாம் நடைபெற்ற காட்சி.

    காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் காளானிலிருந்து மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி முகாம்

    • 3 நாட்கள்காளானில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கான பயிற்சி கடந்த 17 -ந் தேதி தொடங்கியது.
    • காளான் பவுடர் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் நுணுக்கங்கள் ஆகியவை எடுத்துரைக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதி உதவியுடன், அட்டவணை இன துணை திட்டத்தின் கீழ், வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ஜெய்சங்கர் தலைமையில், அட்டவணை இன மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு, 3 நாட்கள்காளானில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கான பயிற்சி கடந்த 17 -ந் தேதி தொடங்கியது. இம்முகாம் நேற்று நிறைவு பெற்றது.

    3 நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில், காளானில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்களான காளான் சூப் பவுடர், காளான் ஜாம், காளான் ஊறுகாய், காளான் பாயாசம், சிறுதானிய காளான் பிஸ்கட், சிறுதானிய காளான் கேக் போன்றவை செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் காளான் அறுவடைக்குப் பின் பதப்படுத்துதல், உலர்ந்த காளான் மற்றும் காளான் பவுடர் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் நுணுக்கங்கள் ஆகியவை எடுத்துரைக்கப்பட்டது. இப்பயிற்சியினை வேளாண் அறிவியல் நிலைய பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநர் திவ்யா தொகுத்து வழங்கினார்.

    Next Story
    ×