search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    என்.ஆர்.ஐ.  இடங்களை அரசு   ஒதுக்கீட்டில் நிரப்ப வேண்டும்
    X

    கோப்பு படம்.

    என்.ஆர்.ஐ. இடங்களை அரசு ஒதுக்கீட்டில் நிரப்ப வேண்டும்

    • வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்
    • 6 இடங்கள் வெளிமாநி லத்தை சேர்ந்தவர்களுக்கும், 4 இடங்கள் வெளிநாட்டினர் என்ற போர்வையிலும் தாரை வார்க்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி யில் மொத்தம் 22 வெளிநாடு வாழ் இந்தியர் மருத்துவ இடங்களில் 10 இடங்கள் மட்டுமே கலந்தாய்வு மூலம் நிரம்பியது. எஞ்சிய 12 இடங்கள் நிரம்பவில்லை.

    இந்த இடங்களை சென்டாக் அதிகாரிகள் தங்களுக்கு வேண்டிய வர்களுக்கு தாரை வார்த்துள்ளனர். 3-ம் கட்ட கலந்தாய்வில் காலியாக இருந்த 12 இடங்களில் 10 இடங்கள் நிரப்பப் பட்டுள்ளது. இதில் 6 இடங்கள் வெளிமாநி லத்தை சேர்ந்தவர்களுக்கும், 4 இடங்கள் வெளிநாட்டினர் என்ற போர்வையிலும் தாரை வார்க்கப்பட்டுள்ளது.

    கடந்த காலங்களில் வெளிநாடு வாழ் இந்தியர் இடங்கள் முழுமையாக நிரம்பாவிட்டால், எஞ்சிய இடங்கள் அரசு ஒதுக்கீடாக மாற்றம் செய்யப்படும்.

    ஆனால் தற்போது சென்டாக் அதிகாரிகள் இந்த இடத்தை தங்கள் இஷ்டத்திற்கு பல லட்சம் ரூபாய் விலை வைத்து விற்பனை செய்துள்ளனர். இந்த ஒதுக்கீடை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

    என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்கள் அனைத்தையும், புதுவை மாணவர்கள் பலனடையும் வகையில் அரசு ஒதுக்கீடாக அறிவித்து கலந்தாய்வை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×