search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நரிக்குறவர் துப்பாக்கியை பறித்த வனத்துறை அதிகாரி வாகனம் முற்றுகை
    X

    வில்லியனூரில் வனத்துறை அதிகாரிகள் வாகனத்தை மறித்து முற்றுகையிட்ட நரிக்குறவ பெண்கள்.

    நரிக்குறவர் துப்பாக்கியை பறித்த வனத்துறை அதிகாரி வாகனம் முற்றுகை

    • புதுவை மற்றும் தமிழக வனத்துறையினர் தொடர்ந்து பறவைகளை வேட்டையாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • வேறு வழியில்லாமல் வடிவேலை வனத்துறை யினர் வாகனத்தில் இருந்து இறக்கிவிட்டு துப்பாக்கியும் கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை கூடப்பாக்கம் பகுதியில் ஊசுட்டேரி உள்ளது. பரந்து விரிந்து காணப்படும் இந்த ஏரி புதுவை மற்றும் தமிழகத்திற்கு சொந்தமான தாகும்.

    புதுவை-பத்துகண்ணு சாலையில் உள்ள ஊசுட்டேரி பறவைகள் சரணாலயமாக அரசால் அறிவிக்கப்பட்டது. அங்கு சுற்றுலா பயணிகள் படகு சவாரியும் செய்யும் படகு குழாம் உள்ளது.

    இதேபோல் உசுட்டேரி அமைந்துள்ள தமிழக பகுதியான பூத்துறை பகுதியில் அடர்ந்த வனத்துடன் கூடிய பகுதியில் தமிழக அரசு பறவைகள் சரணாலயமாக அறிவித்து அங்கு படகு குழாம் அமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது.

    இந்தப் பகுதிகளில் தொடர்ந்து பறவைகள் வேட்டையாடப்பட்டு வருகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களில் அரிய வகை பறவைகளை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேட்டை யாடப்பட்டு வருகிறது.

    இதனை தடுக்கும் வகையில் புதுவை மற்றும் தமிழக வனத்துறையினர் தொடர்ந்து பறவைகளை வேட்டையாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக பூத்துறை பகுதியில் பறவை கள் வேட்டையா டப்படுவதாக வந்த தகவலை யடுத்து திண்டிவனம் சரக வனத்துறை அதிகாரிகள் வில்லியனூர் பட்டாணி களம் பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர்கள் பகுதியை கண்காணித்து வந்தனர். அப்போது அந்த வழியாக துப்பாக்கி எடுத்துச் சென்ற வடிவேல் என்ற நரிக்குறவரை பிடித்து அவரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொ ண்டனர். அப்போது அவர் வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த வனத்துறையினர் அவரை வாகனத்தில் ஏற்றினர்.

    இதனை அறிந்த அங்குள்ள நரிக்குறவ பெண்கள் வனத்துறை அதிகாரிகள் வந்த வாகனத்தை மறித்து வாகனத்தை முற்றுகை யிட்டனர்.

    வாகனத்தின் முன் பக்க கதவை தட்டி வாகனத்தில் இருக்கும் நரிக்குறவர் வடிவேலை விடுவிக்கும் படி கூச்சலிட்டனர்.

    இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் வடிவேலை வனத்துறை யினர் வாகனத்தில் இருந்து இறக்கிவிட்டு துப்பாக்கியும் கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர்.

    Next Story
    ×