என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    திருக்குறள் முற்றோதல் பயிற்சி தொடக்க விழா
    X

    திருக்குறள் முற்றோதல் தொடக்க நிகழ்ச்சியில் சங்கீதா கண்ணன் பயிற்சி வகுப்பை நடத்திய காட்சி.

    திருக்குறள் முற்றோதல் பயிற்சி தொடக்க விழா

    • 10 மணி முதல் 12 மணி வரை பூரணாங்குப்பத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது.
    • அப்துல்கலாமின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு இந்த வகுப்புகள் தொடங்கியதாகவும் அவர் கூறினர்.

    புதுச்சேரி:

    உலக தமிழ் வளர்ச்சி மன்றம், உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் ஆகியவை இணைந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச திருக்குறள் புத்தகம் வழங்கி, முற்றோதல் பயிற்சி தொடக்க விழா இன்று பூரணாங்குப்பத்தில் நடந்தது. இதில் அரசுப் பள்ளியில் 3-ம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கு பெற்றனர். இதனை தொடர்ந்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தோறும் 10 மணி முதல் 12 மணி வரை பூரணாங்குப்பத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது.

    இதற்கான தொடக்க விழா இன்று காலை பூஜையுடன் தொடங்கியது. இதில் முன்னாள் ராணுவவீரர் நந்தா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கோவில் நிர்வாக அதிகாரி பாஸ்கரன், ஊர் பிரமுகர்கள் புருஷோத்தமன், ஜெயபால், வெங்கடேசன், கார்த்தி, மதி கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உலக திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் பயிற்சியாளர் சங்கீதா கண்ணன் இந்த பயிற்சி வகுப்பை நடத்தி வருகின்றார். இதில் ஸ்டாலின்,மோகன், மணி, தளிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விடுமுறை நாட்களில் மாணவர்கள் செல் போனில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

    அதிலிருந்து அவர்களை வெளி கொண்டு வரும் விதமாக இந்த விழிப்புணர்வு முற்றோதல் வகுப்புகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். அப்துல்கலாமின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு இந்த வகுப்புகள் தொடங்கியதாகவும் அவர் கூறினர்.

    Next Story
    ×