search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை கோவில்களில் கொலு வைத்து வழிபாடு
    X

    இரும்பை பாலாதிரிபுரசுந்தரி கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கொலு.

    புதுவை கோவில்களில் கொலு வைத்து வழிபாடு

    • நவராத்திரி கொலு புதுவையில் உள்ள பல்வேறு கோவில்களில் அமைக்கப்பட்டுள்ளது.
    • எல்லைபிள்ளைசாவடி சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் கணபதி பூஜையுடன் தொடங்கியது.

    புதுச்சேரி:

    புரட்டாசி அமாவாசைக்கு அடுத்து வரும் 9 நாட்கள் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

    மனிதனாக பிறந்தவன் படிப்படியாக தனது குணநலனை மாற்றி, தெய்வ நிலைக்கு உயர வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் கொலு வைப்பவர்கள் 7 அல்லது 9 படிக்கட்டுகள் அமைத்து அதில் பொம்மை களை அலங்கரிப்பர்.

    முதல் படிக்கட்டில் கலசமும், அந்த கலசத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு அம்பிகையை எழுந்தருள செய்து பூஜையும் நடத்தப்படும்.

    மேலும் முதல் படியில் ஓரறிவு கொண்ட புல், பூண்டு, செடி கொடிகளும், 2-வது படிக்கட்டில் 2 அறிவு கொண்ட சிப்பி, சங்கு போன்றவையும், 3- வது படிக்கட்டில் 3 அறிவு கொண்ட எறும்பு, கரையான் போன்ற பொம்மைகளும் வைப்பர்.

    இதேபோல் 4-வது படியில் 4 அறிவு கொண்ட நண்டு, வண்டு போன்ற ஜீவராசி களின் பொம்மைக ளும், 5-வது படியில்.5 அறிவு கொண்ட விலங்கு களின் பொம்மைகளும், 6-வது படிக்கட்டில் நாட்டிற்காக உழைத்த தலை வர்களின் பொம்மைகளும், 7-வது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மை களும் இடம்பெறும், 8-வது படியில் தேவர்கள், மற்றும் தெய்வங்களை வைப்பர். 9- வது படியில் மும்மூர்த்தி கள் அவர்களது துணைவி யர்கள் இடம்பறுவர்.

    வாழ்க்கை தத்துவத்தை உணர்த்தும் வகையில் அமைக்கப்படும் கொலுவில் தினமும் பெண்கள் வழிபாடு நடத்துவர்.

    நவராத்திரி கொலு புதுவையில் உள்ள பல்வேறு கோவில்களில் அமைக்கப்பட்டுள்ளது. கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொலு வைக்கப்பட்டது.

    இன்று முதல் நாள் உற்சவம் நடத்தப்படுகிறது. புதுவை ரெயில் நிலையம் அருகில் உள்ள கவுசிக பால சுப்பிரமணியர் கோவில், திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர் கோவில், கடலூர் சாலையில் உள்ள கெங்கையம்மன் கோவில், மாங்காளியம்மன் கோவில், இரும்பை பாலாதிரி புரசுந்தரி கோவில், கிருமாம்பாக்கம் முத்தா லம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள கொலு வினை பக்தர்கள் வழிபட்டனர்.

    எல்லைபிள்ளைசாவடி சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் கணபதி பூஜையுடன் தொடங்கியது.

    நாளை மகாருத்ர ஹோமம், கந்தர்வ ராஜ ஹோமம், 17-ந் தேதி துர்கா சுக்த மற்றும் காயத்திரி ஹோமம், 18-ந் தேதி ஹயக்ரீவ மற்றும் சுதர்ச ஹோமம், 19-ந் தேதி நவக்கிரக ஹோமம், 20-ந் தேதி அஷ்டலட்சுமி ஹோமம், 21-ந் தேதி தன்வந்திரி, ஆஞ்சநேயர் ஹோமம், 22-ந் தேதி அதிஷ்டாணத்தில் ஆராதனை, 23-ந் தேதி மகா சண்டி ஹோமம், 24-ந் தேதி ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடக்கிறது.

    Next Story
    ×