என் மலர்
புதுச்சேரி
- முதல்வர் கண்ணன் பேரிடர் குறித்த விழிப்பு உரை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
- மாணவிகளுக்கு எழுந்த சந்தேகங்களுக்கு தீயணைப்பு துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
புதுச்சேரி:
பொம்மையார் பாளையத்தில் உள்ள ராஜேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பேரிடர் மேலாண்மைத் தற்காப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி செயலர் சிவக்குமார், முதல்வர் கண்ணன் பேரிடர் குறித்த விழிப்பு உரை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இதில் வானூர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையின் முதுநிலை நிலைய அதிகாரிகள் தீ விபத்தில் எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்ற செயல் விளக்க முறையில் தீயணைப்பு மீட்புத் துறையினர் ஒத்திகை செய்து காட்டினர்.
தீயை அணைப்பதிலும், தங்களை தற்காத்து கொள்வது குறித்தும் மாணவிகளுக்கு எழுந்த சந்தேகங்களுக்கு தீயணைப்பு துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
முடிவில் பேராசிரியை சாந்தி நன்றி கூறினார்.
- நேரடியாகவே தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நேரம் ஒதுக்க கேட்டு அறிவாலயத்தில் சந்தித்துள்ளனர்.
- தி.மு.க. அமைப்பாளர் சிவா மற்றும் நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவராக வைத்தியலிங்கம் எம்.பி. பொறுப்பேற்றுள்ளார்.
புதிதாக பொறுப்பேற்ற வைத்திலிங்கம் எம்.பி. கூட்டணி கட்சித்தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை நேற்று முன்தினம் சந்தித்தார்.
இந்த சந்திப்பு சென்னை அறிவாலயத்தில் நடந்தது. அவருடன் புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்றக்கட்சி தலைவர் வைத்தியநாதன் மற்றும் காங்கிரசார் உடன் சென்றிருந்தனர்.
வழக்கமாக கூட்டணிக்கட்சித் தலைவர்களை புதுவை அரசியல் கட்சித்தலைவர்கள் சந்திக்கும் போது அந்த கட்சியின் புதுவை மாநில தலைவர்கள் மூலம் அனுமதி பெற்றுதான் சந்திப்பார்கள். இதுதான் நடைமுறை வழக்கம்.
ஆனால் இந்த சந்திப்பில் தி.மு.க. அமைப்பாளர் சிவாவோ, அக்கட்சி நிர்வாகிகளோ இல்லை. நேரடியாகவே தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நேரம் ஒதுக்க கேட்டு அறிவாலயத்தில் சந்தித்துள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றதால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது.
அதேநேரத்தில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தி.மு.க 6 எம்.எல்.ஏ.க்கள் பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.
தேர்தலுக்கு பிறகு கூட்டணி கட்சியான காங்கிரசுடன் இணக்கமான உறவை தொடரவில்லை.
காங்கிரஸ் சார்பில் கூட்டணி கட்சி கூட்டத்துக்கு அழைத்தபோது காங்கிரஸ் அலுவலகத்துக்கு வர முடியாது என்று தி.மு.க. பதில் அளித்தது.
இதனால், ஓட்டல்களிலோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்திலோ கூட்டணி கட்சி கூட்டம் நடந்து வருகிறது. இது புதுவை காங்கிரசுக்கும்-தி.மு.க.வுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இதனாலேயே தி.மு.க. அமைப்பாளர் சிவாவை புறக்கணித்து விட்டு நேரடியாகவே ஸ்டாலினை புதுவை காங்கிரசார் சந்தித்துள்ளனர். இது புதுவை தி.மு.க. அமைப்பாளர் சிவா மற்றும் நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழிசை கூறும்போது சந்திர பிரியங்கா ராஜினாமா செய்வதற்கு முன்பே ரங்கசாமியின் பரிந்துரையின் பேரில் நீக்கப்பட்டுவிட்டார் என்றார்.
- கடற்கரை சாலையில் உள்ள வீட்டுக்கு பாதுகாப்பு இன்னும் தொடர்கிறது.
புதுச்சேரி:
காரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா, தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் மாளிகைக்கும், முதலமைச்சர் அலுவலகத்துக்கும் தனித் தனியாக அனுப்பியிருந்தார்.
கவர்னரும் கடிதத்தை ஏற்று மத்திய அரசுக்கு அனுப்பியதாக தகவல்கள் வெளியானது. ஆண் ஆதிக்கம், பாலின தாக்குதல் என கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தொகுதி மக்களுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறும்போது அமைச்சர் சந்திரபிரியங்கா நீக்கம் செய்யப்பட்டது முதல்வரின் தனிப்பட்ட முடிவு. நிர்வாக காரணங்களுக்காக எடுத்துள்ளார். அமைச்சராக இருந்தபோது, சந்திர பிரியங்கா சிறப்பாக செயல்படவில்லை என கருதி முதலமைச்சர் நீக்கியுள்ளார்.
இதையடுத்து சந்திரா பிரியங்கா, ராஜினாமா செய்வதற்கு முன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் பொதுமக்களுக்கு தெரியவந்தது.
இதற்கிடையில் சென்னையில் கவர்னர் தமிழிசை கூறும்போது சந்திர பிரியங்கா ராஜினாமா செய்வதற்கு முன்பே ரங்கசாமியின் பரிந்துரையின் பேரில் நீக்கப்பட்டுவிட்டார், என்றார். இது குறித்து முன்னாள் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில்:-
சந்திரபிரியங்காவின் பதவியை டிஸ்மிஸ் செய்ய கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரையின் பேரில் கவர்னர் தமிழிசை உள்துறைக்கு அனுப்பி வைத்தார். அங்கிருந்து அவரது பதவியை பறித்து கடிதமும் வந்துவிட்டது.
ஆனால் அதற்கான அரசாணை இன்னும் வெளியிடாமல் நாடகம் ஆடுகின்றனர். தலித் பெண் அமைச்சர் பதவியை பறித்ததால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் வெளியிடாமல் உள்ளனர்.
விரைவில் அவரது பதவி பறிக்கப்பட்டதாக அரசாணை வெளியிடுவார்கள், என்றார்.
தற்போது தெலுங்கானாவில் கவர்னர் தமிழிசை உள்ளதால் அவர் புதுச்சேரி வரும்போது, சந்திரா பிரியங்கா ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதா? அல்லது முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரையின் பேரில் அவரது பதவி பறிக்கப்பட்டதா என்ற முழு விவரம் தெரியவரும்.
சட்டசபையில் உள்ள அமைச்சர் அலுவலகத்தில் அவரது பெயர் பலகை மாற்றப்படவில்லை. புதுவை கடற்கரை சாலையை ஒட்டியுள்ள அரசு வீடும், கார்களும் ஒப்படைக்கப்படவில்லை. அந்த வீட்டுக்கு போலீசாரின் பாதுகாப்பும் தொடர்கிறது.
அரசின் முறையான நடவடிக்கை எதுவும் தெரியவில்லை. சந்திரபிரியங்கா ராஜினாமா செய்தாரா? அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டாரா? என்ற குழப்பம் பொதுமக்களிடையே எழும்பியுள்ளது.
மக்களை குழப்பம் செய்யாமல் முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
- முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
- முதல்-அமைச்சர் பரிந்துரையை அனுப்ப வேண்டியது என் கடமை என தமிழிசை கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
என்ஆர்.காங்கிரஸ் அமைச்சர் சந்திரபிரியங்கா தனது ராஜினாமாவை கவர்னருக்கு அனுப்பியுள்ளார். முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கடிதம் கொடுத்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து சர்ச்சை நிலவுகிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் பதவியிலிருந்து சந்திரபிரியங்காவை நீக்கிவிட்டு, திருமுருகனை அமைச்சர் பதவியில் நியமிக்க கவர்னரிடம் பரிந்துரை கொடுத்தார்.
அதற்கான ஒப்புதல் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து வந்துள்ளது. இதையறிந்த சந்திரபிரியங்கா தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் என நான் கூறியிருந்தேன். சந்திரபிரியங்காவை கலந்து பேசாமல், அவரிடம் ராஜினாமா கடிதத்தை பெறாமல், அவரை டிஸ்மிஸ் செய்யவும், அந்த இடத்தில் திருமுருகனை அமைச்சராக நியமிக்கவும் பரிந்துரையை கவர்னர் தமிழிசை மூலம் முதல்-அமைச்சர் ரங்கசாமி அனுப்பினார்.
சந்திரபிரியங்கா தகுதிநீக்கம் தொடர்பாக புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கமும், நானும் பேட்டியளித்தோம். அதற்கு கவர்னர் தமிழிசை பதிலளித்துள்ளார். 6 மாதம் முன்பு சந்திரபிரியங்கா அமைச்சர் செயல்பாடுகளில் முதல்-அமைச்சர் அதிருப்தி தெரிவித்தார்.
அதை அவரிடம் கூறினேன். 6 மாதமாக அவர் திறமையாக செயல்படாததால் பதவிநீக்கம் செய்ய கோப்பை முதல அமைச்சர் கொடுத்தார், உள்துறை அமைச்சகத்துக்கு நான் அனுப்பினேன். முதல்-அமைச்சர் பரிந்துரையை அனுப்ப வேண்டியது என் கடமை என தமிழிசை கூறியுள்ளார்.
தமிழிசை புதுவையின் பொறுப்பு கவர்னராக பதவிப்பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்துள்ளார். முதல்-அமைச்சருக்கும், கவர்னருக்கும் நடந்த உரையாடல்கள், முதல்-அமைச்சர் அளித்த கடிதம் போன்றவற்றை கவர்னர் தமிழிசை வெளியில் சொல்வது ரகசிய காப்பு பிரமாணம் எடுத்துக்கொ ண்டதற்கு எதிரானது, முரண்பாடானது.
முதல்-அமைச்சர் அனுப்பிய கோப்பை டெல்லிக்கு அனுப்பி ஒப்புதல் வந்த பிறகு அதுதொடர்பான அறிவிப்பை மட்டுமே மாநில அரசிதழில் வெளியிட வேண்டும். இதுதொடர்பாக பேட்டி அளிப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ரகசியகாப்பு பிரமாண த்திற்கு எதிரானது.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சந்திரபிரியங்கா ராஜினாமா செய்யும் முன்பே முதல்- அமைச்சர் அவரை பதவிநீக்கம் செய்து விட்டார் என சொல்கிறார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் இதுவரை வாய் திறக்கவில்லை. அமைச்சர் பதவி நீக்கமா? ராஜினாமா? என்பது மர்மமாக உள்ளது. நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கண்காட்சியில் சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள கொலு பொம்மைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
- இக்கொலு பொம்மை கண்காட்சியில் உற்பத்தி விலைக்கே உற்பத்தியாளர்கள் நேரடியாக விற்பனை செய்கின்றனர்.
புதுச்சேரி:
புதுவை பொம்மை உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைந்து கூட்டுறவு சங்கத்தை அமைத்து பாரம்பரிய பொம்மைகளை உற்பத்தி செய்து ஆண்டு தோறும் கண்காட்சி மற்றும் விற்பனையை நடத்தி வருகின்றனர்.
நவராத்திரி திருவிழாவையொட்டி புதுவை அரசின் கூட்டுறவு த்துறையின் உதவியுடன் 29-வது கொலு பொம்மை கண்காட்சி காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவிலில் நடந்து வருகிறது. வருகிற 24-ந் தேதி வரை இந்த கண்காட்சி நடக்கிறது. கண்காட்சியில் சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள கொலு பொம்மைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ரூ.50 லட்சத்துக்கு பொம்மைகள் விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருட கொலு கண்காட்சியில் கொழு கட்டை விநாயகர், நீச்சல் கிருஷ்ணர், மாயா பஜார் கடோத்கஜன், சஞ்சீவி மலை ஆஞ்சநேயர், மாயா பஜார் செட், மாவிளக்கு பூஜை செட், பெண் பார்க்கும் படலம், ராமானுஜர் வேத பாடசாலை, நாச்சியார், கருடர் உற்சவ பெருமாள், ராமானுஜர் குருகுல விஜயம், வளைகாப்பு செட், அசுபதி யாகம் செட், நவ நரசிம்மர், வராகி அஷ்ட லட்சுமி, கும்பகர்ணா, கிளி ஜோசியம், ராமாயணம் ஆகியவை புதிய வரவாக கண்காட்சியில் விற்பனை க்காக வைக்கப்பட்டுள்ளது.
ஒரே இடத்தில் ஒரு லட்சத்திற்கும் மேலான பொம்மைகள் இங்கு குவிக்கப்பட்டுள்ளன. இக்கொலு பொம்மை கண்காட்சியில் உற்பத்தி விலைக்கே உற்பத்தியாளர்கள் நேரடியாக விற்பனை செய்கின்றனர். ரூ.50 முதல் ரூ.4 ஆயிரம் வரை பொம்மைகள் உள்ளன.
- இயங்காத டெலிபோன் உடனடியாக செயல்பட நடவடிக்கை
- அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் இன்று காலை திருக்கனூர் தீயணை ப்பு நிலையத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்.
புதுச்சேரி:
திருக்கனூரில் தீயணைப்பு நிலையத்தில் கடந்த 3 நாட்களாக டெலிபோன் இயங்க வில்லை.
இதுகுறித்து மலரில் செய்தியாக வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் இன்று காலை திருக்கனூர் தீயணை ப்பு நிலையத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். அங்கிருந்த அதிகாரிகளிடம் டெலிபோன் இயங்காதது குறித்து விசாரித்தார்.
அதற்கு சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள் வெட்டப்படுவதால், தொலைபேசி ஒயர் துண்டாகி விட்டதாக தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர் அங்குள்ள ஊழியர்களின் குடியிரு ப்பினை பார்வையிட்டு தீயணைப்பு வீரர்களின் குறைகளையும் கேட்ட றிந்தார். இதற்கிடையே திருக்கனூர் தீயணைப்பு நிலைய டெலிபோன் சரி செய்யப்பட்டு தற்பொழுது மீண்டும் இயங்கத்தொடங்கி உள்ளது.
- இந்திய ஜனநாயக கட்சியினர் திடீரென மறைத்து வைத்திருந்த கர்நாடக முதல் மந்திரி உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர்.
- தட்சிணாமூர்த்தி, சிவராமன், தியாகு, அந்தோணிசாமி, செந்தில், அபிமன்னன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
இந்திய ஜனநாயக கட்சி (ஐ.ஜே.கே.) சார்பில் இந்திராகாந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு, புதுவைக்கு காவிரி நீர் தராத கர்நாடக அரசை கண்டித்தும், கர்நாடக முதல் மந்திரி சித்தராமையாவை கண்டித்தும் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு புதுவை மாநில தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். மாநில செயலாளர் சிவக்குமார், நிர்வாகிகள் தியாகு, தட்சிணாமூர்த்தி, சிவராமன், தியாகு, அந்தோணிசாமி, செந்தில், அபிமன்னன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டம் செய்த இந்திய ஜனநாயக கட்சியினர் திடீரென மறைத்து வைத்திருந்த கர்நாடக முதல் மந்திரி உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அந்த உருவபொம்மையை அணைத்தனர்.
- அ.தி.மு.க. வலியுறுத்தல்
- ரூ.400 கோடிக்கான திட்டங்கள் நடைபெற வாய்ப்பில்லை. இந்த நிதிமுடங்கிவிடும் அபாயம் உள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை பத்திரப்பதிவு த்துறையில் அனுமதியின்றி விளைநிலங்களை குழி கணக்கில் விற்பனை செய்வது, போலி பத்திரம் தயாரிப்பது, உயில் பத்திரங்களை மாற்றுவது என பல்வேறு முறை கேடுகளில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக பலமுறை புகார் கூறியுள்ளோம்.
தற்போது இந்த முறைகேடுகள் தொடர்பாக புதுவை அரசின் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடந்து வருகிறது. சி.பி.சி.ஐ.டி.யால் ஒரு கட்டத்துக்கு மேல் விசாரணைக்கு செல்ல முடியாது. அதனால் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். ஊழலில் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்து க்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
அரசு பள்ளி மாணவ ர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடை இறுதிநேரத்தில் அறிவித்து சென்டாக் கலந்தாய்வு நடத்தினர். இதனால் ஆரம்பத்தில் மருத்துவக்கல்வியில் மெரிட் லிஸ்டில் இடம்பெற்ற சில மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. அரசு மருத்துவ கல்லூரிரியில் மொத்தம் 22 என்.ஆர்.ஐ. இடங்களில் 10 மட்டுமே நிரம்பியுள்ளது.
மீதமுள்ள 12 என்ஆர்ஐ இடங்களை ஏற்கனவே மெரிட் லிஸ்டில் இடம்பெ ற்ற மாணவர்க ளுக்கு வழங்க வேண்டும். அவர்க ளிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை பெறவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுவை அரசு 50 சதவீத நிதியும், மத்திய அரசு 50 சதவீத நிதியும் வழங்கி திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
கடந்த ஆட்சியில் 5 ஆண்டும் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை நிறை வேற்றவில்லை. இதனால் மத்திய அரசு நிதி வீணடிக்கப்படடது. ரங்கசாமி முதல்-அமைச்சர் ஆன பிறகும் ரூ.200 கோடிதான் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்துள்ளது. அடுத்து ஆண்டு ஜூன் மாதத்தோடு ஸ்மார்ட் சிட்டி திட்ட காலக்கெடு முடிவடைகிறது.
இந்த நிலையில் ரூ.400 கோடிக்கான திட்டங்கள் நடைபெற வாய்ப்பில்லை. இந்த நிதிமுடங்கிவிடும் அபாயம் உள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை அரசு விரைவுபடுத்த வேண்டும். ஒத்துழைப்பு தராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் முன்னிலையில் மருத்துவ துறைக்கு அர்ப்பணிப்புடன் மாணவ- மாணவிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
- பேராசிரியர் நாயர்இக்பால் உள்ளிட்ட அனைத்து துறை மருத்துவ பேராசிரியர்கள், மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. பிம்ஸ் மருத்துவமனை தலைமை வழிகாட்டி திலீப்மாத்தாய் வரவேற்றார். பிம்ஸ் முதல்வர் அனில் பூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக டெல்லி தேசிய காசநோய் மருத்துவ நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரும் பிரபல காசநோய் மருத்துவ நிபுணருமான டாக்டர் ரோகித் சரீன் கலந்து கொண்டு இளங்கலை மருத்துவ மாணவ- மாணவிகள் 137 பேருக்கும், முதுகலை மருத்துவ மாணவ -மாணவிகள் 35 பேருக்கும் பட்டங்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் முன்னிலையில் மருத்துவ துறைக்கு அர்ப்பணிப்புடன் மாணவ- மாணவிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக 2022ஆண்டின் ஆல்ரவுண்டராக தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவி ராகவலட்சுமி மற்றும் பல்வேறு பாட பிரிவுகளில் சிறப்பு தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர் சுதர்ஷனன் ஆகியோருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
அதுபோல முதுகலை பட்டம் பெற்ற மாணவர்கள், மற்றும் சிறந்த மருத்துவ ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்த பேராசிரியர்கள் நிகழ்ச்சியில் கவுரவிக்கப் பட்டனர்.விழாவில் துணை முதல்வர்கள் டாக்டர் மேகி, டாக்டர் ஸ்டாலின், பேராசிரியர் நாயர்இக்பால் உள்ளிட்ட அனைத்து துறை மருத்துவ பேராசிரியர்கள், மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
- எந்த கோப்பின் அடிப்படையில் நிர்வாக ஒதுக்கீடு இடங்களாக மாற்றப்பட்டு ள்ளது என்பதை சென்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது வியப்பாக உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி பெற்றோர்-மாணவர்கள் நலச்சங்க தலைவர் வை.பாலா புதுவை கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் ஆகி யோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிரு ப்பதாவது:-
புதுவை கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் ஆகியோரின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல் இல்லாமல் சென்டாக் நிர்வாகம் 3-ம் கட்ட இள நிலை மருத்துவம் மற்றும் துணை மருத்துவ படிப்பிற்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது எனவும், அதற்கான வைப்புத் தொகையான ரூ.2 லட்சத்தை செலுத்த வேண்டு மெனவும் அனைத்து மாணவர்களின் செல்போ னில் குருந்தகவல் வெளி யானது. அதே வேளையில் இன்று 11 மணிக்குள் இத்தொகையை செலுத்தி தங்கள் விருப்பப் பாடங்களை தேர்வுசெய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று மாதத்தின் 2-வது சனிக்கிழமை என்பதால் அனைத்து தனியார் மற்றும் அரசு வங்கிகள் செயல்ப டாது என்பது குறிப்பிட த்தக்கது.
மேலும் தற்போது இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 12 மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. இந்த காலியாக உள்ள இடங்களை எந்த கோப்பின் அடிப்படையில் நிர்வாக ஒதுக்கீடு இடங்களாக மாற்றப்பட்டு ள்ளது என்பதை சென்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது வியப்பாக உள்ளது.
இதற்காக புதுவை சுகாதாரத்துறையின் ஒப்புதலை பெற்றுள்ளதா என்பதை சென்டாக் நிர்வாகம் தெரிவிக்க வேண்டும்.
ஏற்கனவே வருகிற 20-ந் தேதி முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களின் சேர்க்கையினை முடித்து அந்ததந்த மருத்துவ கல்லூரிகள் கலந்தாய்வு கமிட்டிக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
எனவே வருகிற 16-ந் தேதி மாலை வரை மாண வர்கள் வைப்பு த்தொகை ரூ.2 லட்ச த்தை செலுத்தி காலியாக உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவ இடங்களை புதுச்சேரி மாநில மாணவர்களைக் கொண்டு அரசு ஒதுக்கீட்டு இடங்களாக அறிவித்து கலந்தாய்வினை நடத்த ஆணை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முகாமில் நாட்டு நலப்பணி திட்டத்தின் முக்கியத்துவம், வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
- என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர்கள் டேவிட் செயின்ட் அந்தோணி, சசி கலா மற்றும் ஆசிரியர்கள் ராஜேஷ் கண்ணா, சுருதி ஆகியோர் செய்திருந்தனர்.
புதுச்சேரி:
புதுச் சேரி அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி மாண வர்களுக்கு வீராம்பட்டி னம் குடியிருப்பு பகுதியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் கடந்த 30-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை நடந்தது.
முகாமை நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரிகள் சதீஷ்குமார், மதிவாணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
முன்னதாக பள்ளி துணை முதல்வர் செல்வநாதன் வரவேற்றார். இம் முகாமில் நாட்டு நலப்பணி திட்டத்தின் முக்கியத்துவம், வாழ்க்கையில் ஏற்ப டுத்தும் தாக்கம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
பிறகு மாணவர்கள் அப்பகுதி மக்களிடம் அவர்களின் உடல், மனம், கல்வி சார்ந்த முன்னேற்றம் குறித்து விளக்கினர். மேலும், மக்களின் குடும்ப வருமானம், கல்வித்தகுதி கள் குறித்து கணக்கெடுப்பு, டெங்கு தடுப்பு பற்றிய விழிப்புணர்வு, மருத்துவ முகாம், துப்புரவு பணி, பனை மரக்கன்றுகள் நடு தல் உள்ளிட்ட சமூக பணி யில் ஈடுபட்டனர்.
முகாமின் நிறைவு விழாவில் முன்னாள் கவுன்சிலர் சக்திவேல், மருந்தியல் கல்லூரியின் முதல்வர் கோபால், அமலோற்பவம் குழுமத்தின் நிறுவனரும், தாளாளரும், முதுநிலை முதல்வருமான லூர்து சாமி, பள்ளியின் முதல் வர் ஆன்டோனியோஸ் பிரிட்டோ ஆகியோர் கலந்து கொண்டு மாண வர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர்கள் டேவிட் செயின்ட் அந்தோணி, சசி கலா மற்றும் ஆசிரியர்கள் ராஜேஷ் கண்ணா, சுருதி ஆகியோர் செய்திருந்தனர்.
- கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை
- கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தி நோய் பரவுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான கென்னடியிடம் கோரிக்கை வைத்தனர்.
புதுச்சேரி:
உப்ப ளம் தொகுதியில் உள்ள உப்பனாறு வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகரித்து மலேரியா, டெங்கு, சிக்கன் குனிய தொற்று நோய்கள் உள்ளிட்ட பல் பரவும் அபாயம் இருந்து வந்தது. எனவே கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தி நோய் பரவுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான கென்னடியிடம் கோரிக்கை வைத்தனர்.
அதனடிப்படையில் கென்னடி எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின் படி புதுவை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கும் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் மூலம் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதா ரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனிடையே தொகுதி முழுவதும் நகராட்சி சார்பில் கொசு மருந்து தெளிக்கப்பட்டது. இந்நிலை யில் இதனை தொடர்ந்து உப்பனாறு வாய்க்காலை பொதுப்பணித்துறை சார்பில் பொக் லைன் இயந்திரம் மூலம் தூர்வாரும் பணி தொடங்கியது.
இதனை தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது பொதுப்பணித் துறை செயற்பொறியார் ராதாகிருஷ்ணன், உதவிப் பொறியார் சம்மந்தம் உள்ளிட்டோர் இருந்தனர்.






