என் மலர்
புதுச்சேரி

பொம்மையார்பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கல்லூரியில் தீயணைப்பு விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்ற காட்சி.
ராஜேஸ்வரி மகளிர் கல்லூரியில் தீயணைப்பு விழிப்புணர்வு ஒத்திகை
- முதல்வர் கண்ணன் பேரிடர் குறித்த விழிப்பு உரை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
- மாணவிகளுக்கு எழுந்த சந்தேகங்களுக்கு தீயணைப்பு துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
புதுச்சேரி:
பொம்மையார் பாளையத்தில் உள்ள ராஜேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பேரிடர் மேலாண்மைத் தற்காப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி செயலர் சிவக்குமார், முதல்வர் கண்ணன் பேரிடர் குறித்த விழிப்பு உரை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இதில் வானூர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையின் முதுநிலை நிலைய அதிகாரிகள் தீ விபத்தில் எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்ற செயல் விளக்க முறையில் தீயணைப்பு மீட்புத் துறையினர் ஒத்திகை செய்து காட்டினர்.
தீயை அணைப்பதிலும், தங்களை தற்காத்து கொள்வது குறித்தும் மாணவிகளுக்கு எழுந்த சந்தேகங்களுக்கு தீயணைப்பு துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
முடிவில் பேராசிரியை சாந்தி நன்றி கூறினார்.






