என் மலர்
புதுச்சேரி
- மின் துறை அதிகாரிகளுடன் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. ஆலோசனை
- பட்டினத்தார் கார்டன் ஆகிய பகுதிகளுக்கு புதைவட கேபிள் அமைப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடந்தது.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் முத்தியால்பேட்டை சப்தகிரி கார்டன், தனலட்சுமி கார்டன், ஸ்டாலின் நகர் கல்லறைப் பகுதி மற்றும் பட்டினத்தார் கார்டன் ஆகிய பகுதிகளுக்கு புதைவட கேபிள் அமைப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடந்தது.
மின்துறை செயற்பொறி யாளர் செந்தில்குமார், நக ராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், இளநிலைப் பொறியாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசித்து மேற்படி பகுதிகளுக்கு சாலைகளில் எந்த சேதமும் ஏற்படாமல் உடனடியாக புதைவட கேபிள் அமைக்க ஆலோசித்து இந்த பணிகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
- பணியில் இருந்த சதீஷ்குமார் திடீரென மயங்கி விழுந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து சதிஷ்குமார் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
விழுப்புரம் அருகே திருவாமதூரை சேர்ந்தவர் சதீஷ் குமார் வயது 32. திருமணமாக இவர் புதுவை சின்னக்காலாப்பட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதியில் (ரிசார்ட்) தங்கி ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் பணியில் இருந்த சதீஷ்குமார் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த மற்ற ஊழியர்கள் சதீஷ்குமாரை மீட்டு ஆட்டோவில் கனக செட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும்வழியி லேயே சதிஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து விடுதி கேஷியர் தினகரன் காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சதிஷ்குமார் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருபுவனத்தில் கம்பகரேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் சரபேஸ்வரர் கோவிலில் ரங்கசாமி சாமி தரிசனம் செய்தார்.
- முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு தருமை ஆதீனம் சார்பில் சரபேஸ்வரர் படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
நவக்கிரகங்களில் ஒன்றான ராகு பகவான் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாக நாதசுவாமி கோவிலில் திருமண கோலத்தில் நாகவல்லி, நாககன்னி ஆகிய இரு மனைவிகளுடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில், புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.
அதனையொட்டி அவர், நாகநாதர் சுவாமிக்கு 9 விளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபட்டார். பின்னர், கிரிகுஜாம்பிகை சன்னதிக்கு சென்று தரிசனம் செய்தார்.
அதை தொடர்ந்து திருபுவனத்தில் கம்பகரேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் சரபேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு தருமை ஆதீனம் சார்பில் சரபேஸ்வரர் படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
- ராமகிருஷ்ணன் பல்வேறு தவணைகளாக ரூ.11 லட்சத்து 95 ஆயிரம் முதலீடு செய்தார்.
- பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ராமகிருஷ்ணன் புதுவை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி லாஸ்பேட்டை நாவற்குளம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 25). தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.
இவரது வாட்ஸ்அப்பில் கடந்த மாதம் 2-ந்தேதி ஒரு குறுஞ்செய்தி வந்தது.
அதில் பகுதிநேர வேலை செய்தால் அதிகமாக சம்பாதிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கு ராமகிருஷ்ணன் விருப்பம் தெரிவித்தார்.
மேலும் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ராமகிருஷ்ணன் பதிலும் அளித்தார். உடனே அவரது வங்கி கணக்கிற்கு ரூ.150 அனுப்பி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சோபி என்ற பெண் அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். பின்னர் அவரை இன்ஸ்டாகிராம் குழுவில் இணையுமாறு கூறினார். தொடர்ந்து ராமகிருஷ்ணனும் அந்த குழுவில் இணைந்தார்.
பின்னர் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதன் மூலம் அவருக்கு ரூ.650 கிடைத்தது. இந்த நிலையில் சோபி அவரை தொடர்பு கொண்டு நீங்கள் பணம் முதலீடு செய்து நாங்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் அளித்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறினார்.
இதனை நம்பிய ராமகிருஷ்ணன் பல்வேறு தவணைகளாக ரூ.11 லட்சத்து 95 ஆயிரம் முதலீடு செய்தார்.
இதன் மூலம் அவரது வங்கி கணக்கில் ரூ.14 லட்சத்து 54 ஆயிரத்து 228 இருப்பதாக காண்பித்தது. அதனை அவர் தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை.
இதனை தொடர்ந்து அவர் சோபியை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர் இதுகுறித்து புதுவை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து மோசடி செய்த சோபி என்ற பெண்ணை வலைவீசி தேடிவருகிறார்.
- விபரம் பெற்று, உடனுக்குடன் செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்து வருகின்றனர்.
- நெடுங்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலில் செல்போன்களை தவறவிட்டாலோ அல்லது தொலையவிட்டாலோ, உடனடியாக,அந்தந்த போலீஸ் நிலையத்திலோ, அல்லது, காரைக்கால் சைபர் கிரைம் போலீசாரிடமோ புகார் தரலாம் என சமீபத்தில் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஸ், போலீஸ் சூப்பிரண்டுகள் நிதின் கவ்ஹால் ரமேஷ், சுப்பிரமணியம் ஆகியோர் அறிவித்திருந்தனர். அதன்படி, புகார் தரும் நபர்களிடம் விபரம் பெற்று, உடனுக்குடன் செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கடந்த சில நாட்களுக்கு முன், நெடுங்காடு பகுதியில், இருவர் தங்களது செல்போன்களை தவறவிட்டனர்.
இது குறித்து, சம்பந்தப்பட்டவர்கள், நெடுங்காடு போலீசில் புகார் அளித்தனர். நெடுங்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர், சி.ஐ.இ.ஆர்.போர்ட்டல் ஆப் மூலம் தொலைந்து போன செல்போன் எண்களை வைத்து அதை சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து மீட்டு நேற்று உரியவர்களிடம் ஒப்பைடைக்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு நிதின் கவ்ஹால் ரமேஷ் செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். நெடுங்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
- குடியிருப்பவர்கள் காலி செய்ய மறுப்பு
- போலி பத்திரத்தை ரத்து செய்து நிலத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க பதிவுத்துறைக்கு கலெக்டர் வல்லவன் உத்தரவிட்டார்.
புதுச்சேரி:
புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 64 ஆயிரத்து 35 சதுர அடி நிலம் ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெருவில் உள்ளது.
இதன் மதிப்பு ரூ.50 கோடி. இதை போலி ஆவணம் தயாரித்து அபகரித்துவிட்டதாக சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு புகார் வந்தது.
டி.ஜி.பி உத்தரவின் பேரில் எஸ்.பி மோகன்குமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்த னர். இதில் 31 ஆயிரத்து 204 சதுர அடி நிலத்தை சிலர் போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்து மனைகளாக பிரித்து விற்றது தெரிந்தது.
இந்த மனைகளில் சிலவற்றை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வாங்கியதாகவும் புகார் எழுந்தது. சி.பி.சி.ஐ.டி போலீசார் முழுமையாக விசாரணை நடத்தி சார்பதி வாளர் சிவசாமி, அப்போதைய மாவட்ட பதிவாளர் ரமேஷ், பட்டா மாற்றம் செய்த தாசில்தார் பாலாஜி உட்பட 17 பேரை கைது செய்தனர். நிலம் பத்திரப் பதிவு தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், கோவில் நிலத்தை மனைப் பிரிவாக மாற்றி பதிவு செய்துள்ள பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும். மனை வாங்கியுள்ள அனைவரின் கிரய பத்திரத்தையும் ரத்து செய்து நிலத்தை கோவிலுக்கு ஒப்படைக்க வேண்டும்.
சி.பி.சி.ஐ.டி போலீசார் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்.சொத்து மதிப்பு குறித்து வருமான வரித்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என உத்தர விட்டார்.
இந்த பணிகளை 6 வாரத்திற்குள் செய்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இதற்கான பணியை அரசின் வருவாய்துறை தொடங்கியது. போலி பத்திரத்தை ரத்து செய்து நிலத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க பதிவுத்துறைக்கு கலெக்டர் வல்லவன் உத்தரவிட்டார். இதையடுத்து விற்பனை பத்திரம் ரத்து செய்யg; பட்டது.
கோயில் நிலத்தை மீண்டும் காமாட்சியம்மன் கோயில் நிர்வாக குழுவிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று ரெயின்போ நகரில் நடந்தது.
மாவட்ட பதிவாளர் கந்தசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் முன்னிலையில் இந்து அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன் மற்றும் கோவில் நிர்வாகி களிடம் நில ஆவணம், ஐகோர்ட்டு உத்தரவு ஆகிய வற்றை ஒப்படைத்தார்.
இதையடுத்து கோவில் நிர்வாகிகள் அதிகாரிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முன்னதாக மாவட்ட பதிவாளர் கந்தசாமி தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகளோடு 2 பிரிவாக உள்ள நிலத்தை பார்வையிட்டார். ஒரு பிரிவில் வீடு ஒன்று கட்டப் பட்டிருந்தது.
அந்த வீட்டின் உரிமை யாளரை அழைத்து ஒரு வார காலத்திற்குள் வீட்டை காலி செய்ய வேண்டும். இதற்காக நோட்டீஸ் வழங்கப்படும் என்றார். வீட்டின் உரிமையாளர் தன்னிடம் பட்டா உள்ளது என பேச தொடங்கினார். அப்போது கந்தசாமி, அதெல்லாம் பேச கூடாது. ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்துகிறோம் என தெரிவித்தார்.
- பாராளுமன்ற சபாநாயகர்கள் மாநாடு இன்று டெல்லியில் நடைபெற்றது. மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- சந்திர பிரியங்கா ராஜினாமா செய்வதற்கு அவர் கூறியுள்ள காரணங்கள் கண்டிக்கத்த க்கது என்றும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சபாநாயகர் கருத்து கூறியிருந்தார்.
புதுச்சேரி:
அமைச்சர் பதவியை சந்திர பிரியங்கா ராஜினாமா செய்த விவகாரம் புதுவை அரசியலில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சாதிரீதியாகவும், பாலினரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளாவதை உணர்ந்ததால் ராஜினாமா செய்வதாக சந்திர பிரியங்கா கூறியிருந்தார்.
இதற்கிடையே போக்கு வரத்து துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா ராஜினாமா செய்வதற்கு அவர் கூறியுள்ள காரணங்கள் கண்டிக்கத்த க்கது என்றும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சபாநாயகர் கருத்து கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஜி.20 உறுப்பு நாடுகளின் பாராளு மன்ற சபாநாயகர்கள் மாநாடு இன்று டெல்லியில் நடைபெற்றது. மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா அழைப்பின் பேரில் புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டார்.
இந்த மாநாடு முடிந்ததும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் டெல்லியில் முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அவர் சந்திர பிரியங்கா விவகாரம் குறித்து பேசுவார் என தெரிகிறது.
- அதிகாரிகளிடம் எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்
- போதிய மின்கம்பங்கள் அமைத்து மின்விளக்குள் பொருத்து தல், தொகுதி முழுவதும் உள்ள குழல் விளக்குகளை மாற்றி எல்.இ.டி. விளக்குகளாக பொருத்த வேண்டும்.
புதுச்சேரி:
வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 7 வார்டுகளில் உள்ள ஊர்களில் இருக்கின்ற மின்துறை பிரச்சினைகள் குறித்து தொகுதி எம்.எல்.ஏ.வும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமையில் மின்துறை தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.
கூட்டத்தில் மின்துறை முதன்மைப் பொறியாள ர்கள் சண்முகம், முரளிதரன், செயற்பொறி யாளர்கள் கலிவரதன் , ராமநாதன், உதவிப் பொறியாளர்கள் முருகேசன், கில்பர்ட் ஜேம்ஸ், இளநிலைப் பொறி யாளர்கள் செல்வநாதன், பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வில்லியனூர் தொகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள மின் பற்றாக்குறையை போக்குவதற்கு உரிய இடங்களில் மின்மாற்றிகள் அமைத்தல், ஒருமுனை மின்சார இணைப்பை மும்முனை மின்சார இணைப்பாக தொகுதி முழுவதும் மாற்றுதல், தாழ்வாக செல்லும் பல மின்கம்பிகளை உயர்த்திக் கட்டுவதோடு, போதிய மின்கம்பங்கள் அமைத்து மின்விளக்குள் பொருத்து தல், தொகுதி முழுவதும் உள்ள குழல் விளக்குகளை மாற்றி எல்.இ.டி. விளக்குகளாக பொருத்த வேண்டும்.
பழைய மின்மாற்றிகளின் திறனை உயர்த்த வேண்டும், உயரழுத்த மின் கம்பிகள் போட முடியாத இடத்தில் மின் புதைவட கம்பிகளை அமைத்து மின்சப்ளை வழங்க வேண்டும், வருங்காலத்தில் அதிக மின்திறன் கொண்ட எல்.இ.டி. விளக்குகளை தெருவிளக்காக பயன்படு த்துகின்ற நடைமுறையை கொண்டுவர வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடந்தது. இந்த பணிகளை 3 மாத காலத்திற்குள் செய்து முடிப்பதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தி.மு.க தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் தர்மராஜன், மாநில இலக்கிய அணி அமைப்பா ளர் சீனு. மோகன்தாசு, தொகுதி துணைச் செயலா ளர்கள் ஜெகன்மோகன், அரிகிருஷ்ணன், கழக முன்னோடிகள் அங்காளன், குலசேகரன், லட்சுமணன், இரமணன், ரபீக், வேதாச்சலம், கார்த்திகேயன், சரவணன், மிலிட்டரி முருகன், ஜனா, பாலகுரு மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ஊழியர்கள் புகார்
- மீதமுள்ள 30 சதவீதத்தில் வீட்டில் யாரும் இருப்பதில்லை, சிலர் சாதி பெயரை கூறுவ தில்லை என தெரிவித்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வந்தது.
இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இதர பிற்படுத்தப்பட்டோர் குறித்த கணக்கெடுப்பு நடத்தி, தேர்தலை நடத்த உத்தரவிட்டது. கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி சசிதரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் நகரம், கிராமப்புறங்களில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வர்களின் எண்ணிக்கையை கண்டறிய திட்டமிட்டது.
நகராட்சிகள், கிராம பஞ்சாயத்து பகுதிகளில் தொகுதி வாரியாக இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினை சேர்ந்த வாக்காளர்கள் குறித்து அங்கன்வாடி ஊழியர்கள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், வில்லியனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், வில்லியனூர் கொம்யூனுக்கு உட்பட்ட உள்ளாட்சி தேர்தலில், இதர பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீடு கணக்கிடும் பணி தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் முன்னிலை வகித்தார்.
ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதபதி சசிதரன் உத்தரவின் பேரில், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்திரன் தலைமையில் கூட்டம் நடந்தது.
இதில் அங்கன்வாடி ஊழியர்கள், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களால் நடத்தப்பட்ட இதர பிற்படுத்தப்பட்டோ ருக்கான இட ஒதுக்கீடு கணக்கீடு தொடர்பான ஆய்வு அறிக்கை சமர்பிக்க ப்பட்டது.
இதுகுறித்து விரிவாக விவாதிக்க ப்பட்டது. கூட்டத்தில், ஊழியர்கள் தங்களுக்கு உள்ள பிரச்சினைகள், நடைமுறை சிக்கல்கள் குறித்து எடுத்து கூறினர். 70 சதவீத பணிகள் முடிந்து விட்டது. மீதமுள்ள 30 சதவீதத்தில் வீட்டில் யாரும் இருப்பதில்லை, சிலர் சாதி பெயரை கூறுவ தில்லை என தெரிவித்தனர்.
ஊழியர்கள் கள ஆய்வுக்கு காலை, மாலை நேரங்களில் செல்ல வேண்டும். அங்கு என்ன சூழ்நிலை உள்ளதோ அதனை குறித்துக்கொள்ள வேண்டும்.
காலதாமதம் ஏற்பட்டால், உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, ஆலோசனை பெற்று, அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.
கூட்டத்தில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை ஒரு ங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி பாலாஜி, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- அவசர தேவைகளுக்கு தொடர்பு கொள்ள முடியாமல் பொதுமக்கள் அவதி
- பொதுமக்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் திருக்கனூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபடுவர்.
புதுச்சேரி:
தீ விபத்து மற்றும் ஆபத்துக்கால உதவி என்றால் பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு போன் செய்து தகவல் தெரிவிப்பார்கள்.
அதன் அடிப்படையில் தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.
இது போன்று திருக்கனூர் பகுதியில் நடைபெறும் தீ விபத்து உள்ளிட்ட சம்பவத்தின் போது பொதுமக்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் திருக்கனூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபடுவர்.
இந்நிலையில் திருக்கனூர் தீயணைப்பு நிலைய தொலைபேசி கடந்த 3 நாட்களாக இயங்க வில்லை. அப்பகுதியில் மரம் அகற்றப்பட்ட போது தொலைபேசி ஒயர் துண்டாகி விட்டதாக கூறப்படுகிறது. அதிலிருந்து கடந்த 3 தினங்களாக தொலைபேசி முழுமையாக வேலை செய்யவில்லை.
திருக்கனூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு தீயணைப்பு நிலையத்திற்கு போன் செய்தால் நீங்கள் தொடர்பு கொண்ட எண் உபயோகத்தில் இல்லை என்று வருகிறது.
தொலைபேசி வேலை செய்யாததால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.
பொதுமக்களின் நலன் கருதி திருக்கனூர் தீயணைப்பு நிலைய தொலைபேசியை உடனடி யாக சரி செய்ய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மின்விசிறியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- திருக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே உள்ள சோரப்பட்டு தென்னஞ்சாலை வீதியைச் சேர்ந்தவர் ஹரி (வயது 35) பொதுப்பணித்துறை ஊழியராக பணி புரிந்து வருகிறார்.
இவரது மனைவி தேவிப்பிரியா (வயது 30) தேவிப்பிரியாவிற்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.
நேற்று மாலை வழக்கம்போல் மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் மனமுடைந்த தேவி பிரியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மின் துறை தலைமை பொறியாளர் சண்முகம் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி னார்.
- போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி மாநில துணை செயலாளர் சேது செல்வம் தலைமை வகித்தார்.
புதுச்சேரி:
காமராஜர் நகர் தொகுதி கவிக்குயில் நகரில் 4-வது குறுக்கு தெரு முதல் 9-வது குறுக்கு வீதி வரை சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
தொடர் மின் தடை
இந்த பகுதியில் 2000-ம் ஆண்டு முதல் தொடர் மின் தடை, குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் படிக்க முடியவில்லை. மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதானது. இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடி க்கையும் எடுக்க வில்லை.
இதைய டுத்து இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி தலைமையில் மின்துறை தலைமை அலுவல கத்தை முற்றுகை யிட்டு பொது மக்கள் இன்று போராட்டம் நடத்தினர். இதையடுத்து மின் துறை தலைமை பொறியாளர் சண்முகம் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி னார்.
அப்போது, ஒரு வாரத்தி ற்குள் மின் கம்பிகள் பொ ருத்தி மின் இணைப்புகள் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிட ப்பட்டது. போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி மாநில துணை செயலாளர் சேது செல்வம் தலைமை வகித்தார்.
காமராஜர் நகர் தொகுதி செயலாளர் துரை செல்வம், துணை செயலாளர் தயாளன், பொருளாளர் பிரகாஷ், தட்டாஞ்சாவடி தொகுதி செயலாளர் தென்னரசன், கவிக்குயில் நகர் செல்லப்பெருமாள், வேலழகன், முருகேசன், ரமேஷ், கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






