என் மலர்
புதுச்சேரி
- அரசு பள்ளிகளுக்கு தனியார் நிறுவனத்தின் மூலம் மதிய உணவு வழங்கப்படுகிறது.
- தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.
புதுச்சேரி:
இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் நகர பகுதியில் உள்ள வ.உ.சி. பள்ளியிலிருந்து ஊர்வலமாக வந்து சட்டசபை அருகே ஆம்பூர் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் பிரவீன்குமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கோபி, சத்தியா மற்றும் பள்ளி மாணவர்கள் பலர் இதில் பங்கேற்றனர்.
புதுவையில் அரசு பள்ளிகளுக்கு தனியார் நிறுவனத்தின் மூலம் மதிய உணவு வழங்கப்படுகிறது.
இந்த உணவு தரமற்றதாக உள்ளதால், ஒப்பந்தத்தை ரத்து செய்து அரசே முட்டையுடன் மதிய உணவு வழங்க வேண்டும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
புதுவையில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.
- பொது மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களை பரப்பும் இடமாக மாறி உள்ளது.
- சாக்கடை நீர் செல்வதற்கு ஏற்ற வகையில் மேம்படுத்த வேண்டும் என்றும் வாய்க்கால் மேல் சிலாப்கள் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு4 முனை சந்திப்பு அருகே மேம்பாலம் வழியாக திருக்கனூர் செல்லும் சாலை பகுதியில் திறந்த வெளி கழிவுநீர் கால்வாய் உள்ளது. மழைக்காலங்களில் மழை நீர் வெளியேறி திருபுவனை ஏரியில் சென்று சேரும் வகையில் இந்த கால்வாய் உள்ளது.
தற்போது அங்குள்ள ஓட்டல்கள், கடைகள், காய்கறி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் இந்த வாய்க்கால் வழியாக செல்ல முடியாமல் தேங்கி நிற்கின்றது.
இதனால் கொசு உற்பத்தி அதிகமாகி அவ்வழியே செல்லும் பொது மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களை பரப்பும் இடமாக மாறி உள்ளது.
மேலும் தேங்கிய கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், முதியவர்கள், குழந்தைகள், பெண்கள், வாகன ஓட்டிகள் முகம் சுளித்து செல்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கால்வா யினை பார்வையிட்டு தூர்வாரி தேங்கி நிற்கும் சாக்கடை நீர் செல்வதற்கு ஏற்ற வகையில் மேம்படுத்த வேண்டும் என்றும் வாய்க்கால் மேல் சிலாப்கள் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- அதிகாரிகளும் விரைந்து முடித்து தருவதாக உறுதியளித்தனர்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேத்தாஜி நகர் 3 பகுதியில் புதியசாலை மற்றும் எல் வடிவ வடிக்கால் வாய்கால் அமைக்கப்படுகிறது. இப்பணியினை உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இளநிலை பொறியாளர் சண்முகசுந்தரம் ஊர்பஞ்சாயத்தாரர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள், கட்சி நிர்வாகிகள் சக்திவேல், கண்ணன், ராஜி, அருள், கணேசன், சண்முகம், மனோஜ், ராமலிங்கம், வீரமுருகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது கென்னடி எம்.எல்.ஏ. இப்பணியை மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து முடித்துத்தர நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.
அதிகாரிகளும் விரைந்து முடித்து தருவதாக உறுதியளித்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக் னாலஜி மற்றும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இணைந்து சிறப்பு பயிலரங்கத்தை நடத்தியது.
இதில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, மற்றும் மயிலம் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு நுகர்வோர் தொடர்பு திட்டம் என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது.
இந்த பயிலரங்கத்தில் தக வல் தொலைத்தொடர்பு, அதனை சார்ந்த முக்கிய அறிவு சார் கலந்துரையாடல் நடைபெற்றது.
இப்பயிலரங்கத்தை எம்.ஐ.டி கல்லூரி தலை வர் மற்றும் நிர்வாக இயக் குனர் தனசேகரன், செய லாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர ராஜராஜன், கல்லூரி முதல்வர் மலர்க்கண் ஆகியோர் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சி யினை தொடங்கி வைத்தனர்.
பிக்ஷாம் வர வேற்றார். தொடர்ந்து இந் திய தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தின் நடவடிக்கை கள் குறித்து ராஜு விளக்கினார். மேலும் இந்திய தொலைத் தொடர்பு சேவை இயக் குனர் விநனையா மற்றும் ஸ்ரீகாந்த் சைபர் செக்யூ ரிட்டி குறித்து சிறப்புரையாற்றினர்.
இப்பயில ரங்கில் பி.எஸ்.என். எல், ஏர்டெல், ஜியோ மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் பிரதிநிதி கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் செய்திருந்தார்.
- உயில் பத்திர பதிவு புத்தகத்தில் ஆவணங்களை மாற்றி வேறு ஆவணங்களை இணைத்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.
- உயில்களின் அடிப்படையில் பதிவு செய்யப்படும் சொத்துக்களின் ஆவணங்களை உன்னிப்பாக ஆய்வு செய்யுமாறு துணை பதிவாளர்களுக்கு மாவட்டப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் 2000-ம் ஆண்டு முதல் போலி ஆவணம் மூலம் சொத்துக்களை அபகரிக்கும் சம்பவம் நடந்து வருகிறது.
பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்கள் அதிகளவில் அபகரிக்கப்பட்டது. இது சர்வதேச அளவிலான பிரச்சனையாக உருவெடுத்தது.
இதன்பின் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு நில அபகரிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் அவ்வப்போது புகார்கள் எழுந்து முறைகேடுகள் தொடர்ந்தது.
சமீபத்தில் காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள நிலம் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு வீட்டு மனைகளாக விற்பனை செய்யப்பட்ட பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில் பத்திரப்பதிவு துறையில் பதிவான உயில் சொத்துக்களில் ஆவணங்களை மாற்றி நூதன மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
உயில் பத்திர பதிவு புத்தகத்தில் ஆவணங்களை மாற்றி வேறு ஆவணங்களை இணைத்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுதொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஒரு வீடியோ ஆதாரத்தை வெளியிட்டார். இதனிடையே மாவட்ட பதிவாளர் கந்தசாமி, உயில் பத்திரங்களை ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டார். இதில் 8 உயில் பத்திரங்களில் உள்ள விரல் ரேகை பதிவு பொருந்தாமல் முரண்பாடாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து வருவாய்த்துறை மூலம் சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். இதுபோல மோசடிகளில் பத்திரப்பதிவுத்துறை ஊழியர்கள் துணையின்றி செய்திருக்க முடியாது. இதனால் பத்திரப்பதிவு துறை ஊழியர்களிடம் முழுமையான விசாரணை நடத்தவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், உயில்களின் அடிப்படையில் பதிவு செய்யப்படும் சொத்துக்களின் ஆவணங்களை உன்னிப்பாக ஆய்வு செய்யுமாறு துணை பதிவாளர்களுக்கு மாவட்டப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் துணை பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைகளின் விவரங்களை சேகரிக்கும் பணியையும் பதிவுத்துறை தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து வெளிவரும் மோசடி சம்பவங்கள் சொத்துக்கள் வைத்திருப்போரை பீதிக்கு ஆளாக்கியுள்ளது.
- பணத்தில் நிலத்தை வாங்கி புருஷோத்தமனும் அவரது மனைவி செல்வியும் அவர்களது பெயரில் பதிவு செய்து கொண்டனர்.
- பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அடியாருக்கு அடியார் புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளித்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி உழவர்கரை மூலக்குளம் பகுதியை சேர்ந்தவர் அடியாருக்கு அடியார் (வயது 40). தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி வித்யா.
இவர்களிடம் லாஸ்பேட்டை ராஜாஜி நகரை சேர்ந்த புருஷோத்தமன்-செல்வி தம்பதியினர் குடும்ப நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்நிலையில் புருஷோத்தமனும், செல்வியும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அடியாருக்கு அடியார் மற்றும் அவரது மனைவி வித்யாவிடம் ரியல் எஸ்டேட் தொழில் செய்தால் அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என்று கூறினர். இதனை நம்பிய அடியாருக்கு அடியார் தன்னுடைய சேமிப்பு பணம் மற்றும் மனைவி, மாமியார், தாயார் ஆகியோரின் நகைகளை அடகு வைத்து ரூ.1 ¼ கோடியை கொடுத்துள்ளார்.
அதே வேலையில் அடியாருக்கு அடியார் கொடுத்த பணத்தில் நிலத்தை வாங்கி புருஷோத்தமனும் அவரது மனைவி செல்வியும் அவர்களது பெயரில் பதிவு செய்து கொண்டனர். இதனை அறிந்த அடியாருக்கு அடியார் இது குறித்து புருஷோத்தமனிடம் கேட்ட போது, கூலிப்படையை ஏவி கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது.
இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அடியாருக்கு அடியார் புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து புருஷோத்தமன் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோரை தேடி வருகின்றனர்.
- அமைச்சர் லட்சுமி நாராயணன் அதிரடி பேட்டி
- அமைச்சர் பதவிகூட கந்தசாமிக்கு வழங்காததால் அவரின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
புதுச்சேரி:
புதுவை பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் இன்று நிருபர்களிடம் கூறிய தாவது:-
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 முன்னாள் முதல்-அமைச்சர்களும் நேற்றைய தினம் என்.ஆர்.காங்கிரஸ் தலித்துகளுக்கு துரோகம் செய்துவிட்டதாக கூறியுள்ளனர்.
புதுவையில் 40 ஆண்டுக்கும் மேலாக காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது. பெரும்பான்மை சமூகமான வன்னியர்க ளுக்கும், தலித்துகளுக்கும் எத்தனையோ துரோகத்தை அவர்கள் செய்துள்ளனர்.
கந்தசாமிக்கு காங்கிரஸ் தலைவர் பதவியை வழங்காதது ஏன்? அமைச்சர் பதவிகூட கந்தசாமிக்கு வழங்காததால் அவரின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
2015-ம் ஆண்டு பெரும்பான்மை சமூகத்தை கவர வேண்டும் என்ப தற்காக நமச்சிவாயத்திற்கு தலைவர் பதவி கொடுத்தனர்.
ஆனால் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அவருக்கு முதல்-அமைச்சர் பதவி கொடுத்தார்களா? திடீரென எங்கிருந்தோ முளைத்து வந்தவர்தான் முதல்-அமைச்சர் ஆனார். இதெல்லாம் துரோகம் ஆகாதா? இதற்கெல்லாம் காங்கிரசார் பதில் கூறுவார்களா?
என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் எதுவுமே செய்ய வில்லை என தொடர்ந்து ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
பட்ஜெட்டில் அறிவித்த அறிவிப்புகளை முழுமையாக செயல்படுத்தி வருகிறோம். குடும்ப தலைவிகளுக்கான ரூ.ஆயிரம் உதவித்தொகை ஒவ்வொரு தொகுதியாக வழங்கப்பட்டு வருகிறது.
அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர் மேம்படுத்தப் பட்டு வருகிறது. ஆட்சிக்கு வந்தவுடன் முதியோர் உதவித்தொகை ரூ.500 உயர்த்தப்பட்டது. 26 ஆயிரம் முதியோருக்கு புதிதாக உதவித்தொகை வழங்கி யுள்ளோம்.
கொரோனாவால் இறந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் என கடந்த ஆட்சி யில் அறிவித்த திட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். அனைத்து சமுதாயத்தினரும் பயன்படும் வகையில் மக்கள் நல்வாழ்வு திட்டங்களை நிறைவேற்றி யுள்ளோம்.
இவற்றையெல்லாம் மறைக்கும்விதமாக தொடர்ந்து இழிவான, மலிவான, சாதி ரீதியான பிரச்சினையை கையில் எடுத்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது.
கடந்த ஆட்சியில் விஜயவேணி என்ற பெண் எம்.எல்.ஏ. இருந்தார். தற்போதைய காங்கிரஸ் எம்.பி.யின் சொந்த தொகுதி யிலிருந்து வெற்றி பெற்றார். அவருக்கு பரிந்துரை செய்து அமைச்சர் பதவி கேட்டிருக்க வேண்டியதுதானே? அவருக்கு ஏன் அமைச்சர் பதவி வழங்கவில்லை? நீங்கள் நல்லது செய்தி ருந்தால் மக்கள் வாக்களித்தி ருப்பார்கள்.
பிறரை தவறாக பேசுவது நாகரீமல்ல எப்படியிருந்த நான், இப்படி ஆயிட்டேன் என்பது போல 16 எம்.எல்.ஏக்கள் இருந்த கட்சி இப்போது 2 எம்.எல்.ஏக்களாக சுருங்கி யுள்ளது. அதிலும் ஒரு எம்.எல்.ஏ. கடன் வாங்கப்பட்டவர்.
பிறரை தவறாக பேசுவது நாகரீமல்ல. மாநில அந்தஸ்து கேட்பது நாடகம் என விமர்சிக்கின்றனர்.
அகில இந்திய ரீதியில் பல்வேறு பதவிகளில் இருந்த நாராயணசாமி, மாநில அ ந்தஸ்து பெற என்ன செய்தார்? பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு நெருக்கமாக இருந்தபோது புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற நாராயண சாமியும், காங்கிரஸ் கட்சியும் என்ன நடவடிக்கை எடுத்தது? மத்திய அரசு வழக்கமாக ரூ.ஆயிரத்து 750 கோடி நிதி தரும்.
ஆனால் கடந்த 2 ஆண்டாக கூடுதலாக நிதி அளித்து வருகிறது. ஜி.எஸ்.டி. இழப்பீடு பல மாநிலங்களில் நிறுத்தப்பட்ட போதிலும், புதுவைக்கு மட்டும் வேறு வகையில் இழப்பீடு வழங்கியுள்ளனர்.
கடந்த நிதியாண்டில் ரூ.11 ஆயிரம் கோடியில் நிறைவேறிய பட்ஜெட்டில் 93 சதவீதத்தை செல விட்டுள்ளோம். திட்டங்களுக்கு செல விடாமல் வேறு எதற்கு செலவிட முடியும்? அவதூறை ஆதாரமின்றி பரப்பி வருகின்றனர்.
முதல்-அமைச்சராக இருந்தவர்கள் தங்களின் தகுதியை குறைத்துக்கொண்டு பேசுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்-அமைச்சர் விளக்கம் அளிக்க தேவையில்லை இதைத்தொடர்ந்து அமைச்சர் லட்சுமி நாராயணனிடம், சந்திர பிரியங்கா நீக்கப்பட்டது ஏன்? சாதி, பாலின ரீதியில் துன்புறுத்தப்பட்டதாக புகார் கூறியுள்ளாரே? என பலவாறாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு முதல்- அமைச்சருக்கு ஒரு அமைச்சரை நியமிக்கவும், நீக்கவும் முழு உரிமை உள்ளது. அதற்கான காரணத்தை கூற வேண்டிய அவசியம் இல்லை. சந்திர பிரியங்கா தனிப்பட்ட யார் மீதும் குற்றம் சுமத்தவில்லை.
பொத்தாம்பொதுவாக பாலினதாக்குதலுக்கு உள்ளானதாக கூறியுள்ளார். இதற்கு எப்படி பதிலளிக்க முடியும்? குறிப்பிட்ட ஒருவர் மீது குற்றம்சாட்டி னால் அதற்கு பதிலளிக்க லாம் என தெரிவித்தார்.
தொடர்ந்து நிருபர்கள், அமைச்சர்கள் சம்பாதித்த பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்ய செல்வதாக நாராயணசாமி குற்றம்சாட்டி யுள்ளாரே? என கேட்டபோது, புதுவையின் ஒட்டுமொத்த பட்ஜெட்டே ரூ.11 ஆயிரம் கோடிதான்.
25 ஆண்டுகாலமாக மத்திய அரசின் பல்வேறு பதவிகளில் இருந்த நாராயண சாமி, வெளி நாடுக்கு சென்றதில்லையா? இந்திய பணத்தை பெட்டியில் வைத்து விமான நிலையம் கொண்டுசெல்ல அனுமதிப்பார்களா? அப்படி கொண்டு செல்ல முடியுமா? எனக்கு தெரிந்து தற்போதைய முதல்-அமைச்சர் தவிர அனை வரும் வெளிநாடு சென்றுள்ளனர் என்று கூறினார்.
பேட்டியின்போது அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், எம்.எல்.ஏக்கள் கே.எஸ்.பி.ரமேஷ், லட்சுமிகாந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.
- முதல்-அமைச்சர் ரங்கசாமி தகவல்
- ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி வருகிறோம்.
புதுச்சேரி:
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் காலாப்பட்டு தொகுதியை சேர்ந்த வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கும் விழா கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. துறை இயக்குனர் முத்துமீனா வரவேற்றார்.
அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். தொகுதி எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கி புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
காலாப்பட்டு தொகுதியில் கடல் அரிப்பு பெரும் பிரச்சினையாக உள்ளது. அதை தடுக்க ரூ.56 கோடியில் கல் கொட்டும் பணி நடந்து வருகிறது. மக்கள் குறைகளை கேட்டு அதை தீர்ப்பதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. புதுவை மாநிலம் முழுவதும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக நிதி ஒதுக்கி அரசு கவனம் செலுத்தி வருகிறது.
சமூகநலத்துறை மூலம் மக்களுக்குரிய நலத்திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். சட்டசபையில் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் அடுத்த கூட்டத் தொடருக்குள் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். சட்டசபையில் எந்த அரசு உதவி பெறாத குடும்ப தலைவிக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்தோம்.
இதில் 70 ஆயிரம் பேரை கண்டறிந்து படிப்படியாக தொகுதிவாரியாக கொடுத்து வருகிறோம். கியாஸ் சிலிண்டருக்கு சிகப்பு கார்டுக்கு ரூ.300, மஞ்சள் கார்டுக்கு ரூ.150 மானியம் வழங்கும் திட்டம் அறிவித்தோம்.
இதற்காக ரூ.8 கோடி ஒதுக்கினோம். சுமார் 20 ஆயிரம் பேருக்கு கியாஸ் சிலிண்டர் மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஓரிருநாளில் 40 ஆயிரம் பேருக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.
பெண் குழந்தைகள் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டு, செலுத்தப்பட்டு வருகிறது. 200 பேருக்கு நிதி செலுத்தப்பட்டுள்ளது.
அனைவருக்கும் விபத்து காப்பீடு திட்டத்துக்கு ரூ.92 லட்சம் அரசு செலுத்தியுள்ளது. அரசு அறிவித்த 4 திட்டத்தையும் அரசு செயல்படுத்திவிட்டது.
மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்க டெண்டர் முடிவு செய்தோம். ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி வருகிறோம்.
மாதந்தோறும் அரிசிக்கு பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல திட்டங்களையும் செயல்படுத்தும். உள்கட்டமைப்பு மேம்படுத்த மத்திய அரசிடம் நிதி பெற்று திட்டங்களை நிறை வேற்றுவோம்.
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் ரூ.1600 கோடி நிதி கோரியுள்ளோம். மத்திய அரசும், பிரதமர் மோடியும் புதுவைக்க நிச்சயம் நிதி வழங்குவார்கள். இந்த ஆண்டே பணியை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சி.ஐ.டி.யூ. தீர்மானம்
- ரூ.10 லட்சம் மருத்துவ -ஆயுள் காப்பீட்டு திட்டத்தினை உருவாக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை பிரதேச ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர் சங்கம் சி.ஐ.டி.யூ. சார்பில் அனைத்து கிளை நிர்வாகிகள் கூட்டம் இன்று முதலியார் பேட்டை சி.ஐ.டி.யூ. மாநில குழு அலுவலகத்தில் நடந்தது.
சங்கத்தின் தலைவர் மணவாளன் தலைமை வகித்தார். கூட்டத்தில் உடல்நலக்குறைவால் இறந்த தொழிலாளர்கள் ஆறுமுகம், ராஜேந்திரன் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது. கூட்டத்தில், அமைப்புசார தொழிலாளர் நலவாரியத்தை நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும்.
பண்டிகை கால உதவித்தொகை ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 17-ந் தேதி சட்டசபை நோக்கி பேரணி நடத்துவது. நலவாரியத்தில் ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் மருத்துவ -ஆயுள் காப்பீட்டு திட்டத்தினை உருவாக்க வேண்டும்.
அமைப்பு சாரா நலச்சங்கத்தில் பதிவு பெற்று உயிர் இழந்த 550-க்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள இறப்பு உதவித் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். நகர பகுதியில் கியாஸ் நிரப்பும் நிலையம் அமைக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் சீனுவாசன், துணைத் தலைவர் மது, பொது செயலாளர் விஜயகுமார், பொருளாளர் துளசிங்கம், நிர்வாகிகள் பழனிபாலன், ராமு, நூர் முகமது, ஆனந்த், முருகன், சங்கர், செந்தில்குமார்,ரங்கன், ரவிக்குமார், குமரவேல்,மனோகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- கவர்னர் தமிழிசை பரபரப்பு தகவல்
- அமைச்சர் சந்திரபிரியங்காவின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்ததால் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அவரை நீக்க பரிந்துரைத்ததாக கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா நேற்று முன்தினம் திடீரென தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் மாளிகைக்கும், முதல்-அமைச்சர் அலுவலகத்துக்கும் அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து தொகுதி மக்களுக்கு நீண்ட கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் ஜாதி ரீதியாகவும், பாலின ரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளாவதை உணர்ந்ததால் ராஜினாமா செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இதனால் சந்திரபிரியங்கா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாகத்தான் தகவல் வெளியானது.
ஆனால் அமைச்சர் சந்திரபிரியங்காவின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்ததால் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அவரை நீக்க பரிந்துரைத்ததாக கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
மேலும், 6 மாதத்திற்கு முன்பே சந்திரபிரியங்கா நீக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் தான் அதை தடுத்ததால், அவர் நீக்கப்படவில்லை. ஏனெனில் கடந்த 6 மாதம் முன்பு சந்திரபிரியங்காவின் பணியில் திருப்தியில்லை என்பதால் நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி விரும்பினார்.
ஒரே பெண் அமைச்சர் என்பதால் அழைத்து பேசி பணியாற்ற சொல்லுங்கள் என நான் கூறினேன் என கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார். இதன்மூலம் சந்திர பிரியங்கா 6 மாதம் முன்பே முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிந்துரையின்பேரில் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
- மாநில அளவில் சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருக்கான விருது வழங்கப்பட்டது
- கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர்களை கல்லூரியின் துணை தலை வர் பழனி ராஜா, முதல்வர்உதயசூரியன் ஆகியோர் பாராட்டினர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் 49-வது நாட்டு நலப்பணித்திட்ட ஆண்டு விழா லாஸ்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
விழாவில் கல்வித்துறை அமை ச்சர் நமச்சிவாயம், வைத்தியநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் மற்றும் தன்னார்வல மாணவர்களுக்கு மாநில விருதுகளை வழங்கினார். இதில் வேல்ராம்பட்டு சாரதா கங்காதரன் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மரிய செல்வத்துக்கு மாநில அளவில் சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருக்கான விருது வழங்கப்பட்டது. மேலும் நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வல மாணவர்கள் பிரேம்குமார், கிஷாத் ஆகியோருக்கு மாநில அளவிலான சிறந்த தன்னார்வலர் விருது வழங்கப்பட்டது. மாநில அளவில் விருது பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர்களை கல்லூரியின் துணை தலை வர் பழனி ராஜா, முதல்வர்உதயசூரியன் ஆகியோர் பாராட்டினர்.
- பென்ஷனர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம்
- வனத்த சின்னப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர். ராகவேந்திரன் சிறப்புரை யாற்றினார். ஜெயராஜ் நன்றி கூறினார்.
புதுச்சேரி:
புதுவை பென்ஷனர்கள் சங்கத்தின் 5-ம் ஆண்டு மாநாடு அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில் நடந்தது.
சங்க தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். நமச்சிவாயம், இளங்கோ, பாலசுந்தரம், ராமஜெயம், ஜீவதாஸ், சாமுவேல், குணசேகரன், பெரியான் முன்னிலை வகித்தனர். முனீந்திரபாபு வரவேற்றார். ஜூலியானா பெர்னாண்டஸ், நடராஜன், பிரகாஷ், கொளஞ்சியப்பன், பிரேமதாசன், ராதா கிருஷ்ணன், செல்வராஜ், விட்டோபாய், ஜெயராமன், அசோகன், அந்துவான், ராமநாதன், வனத்த சின்னப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர். ராகவேந்திரன் சிறப்புரை யாற்றினார். ஜெயராஜ் நன்றி கூறினார்.
மாநாட்டில் அனைத்து மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 8-வது சம்பளக்குழுவை அமைக்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகை உடனே வழங்க வேண்டும்.
நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.






