search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    6 மாதம் முன்பே சந்திரபிரியங்கா நீக்கப்பட்டிருக்க வேண்டும்
    X

    கோப்பு படம்.

    6 மாதம் முன்பே சந்திரபிரியங்கா நீக்கப்பட்டிருக்க வேண்டும்

    • கவர்னர் தமிழிசை பரபரப்பு தகவல்
    • அமைச்சர் சந்திரபிரியங்காவின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்ததால் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அவரை நீக்க பரிந்துரைத்ததாக கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா நேற்று முன்தினம் திடீரென தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் மாளிகைக்கும், முதல்-அமைச்சர் அலுவலகத்துக்கும் அனுப்பி வைத்தார்.

    தொடர்ந்து தொகுதி மக்களுக்கு நீண்ட கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் ஜாதி ரீதியாகவும், பாலின ரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளாவதை உணர்ந்ததால் ராஜினாமா செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இதனால் சந்திரபிரியங்கா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாகத்தான் தகவல் வெளியானது.

    ஆனால் அமைச்சர் சந்திரபிரியங்காவின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்ததால் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அவரை நீக்க பரிந்துரைத்ததாக கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

    மேலும், 6 மாதத்திற்கு முன்பே சந்திரபிரியங்கா நீக்கப்பட்டிருக்க வேண்டும்.

    ஆனால் தான் அதை தடுத்ததால், அவர் நீக்கப்படவில்லை. ஏனெனில் கடந்த 6 மாதம் முன்பு சந்திரபிரியங்காவின் பணியில் திருப்தியில்லை என்பதால் நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி விரும்பினார்.

    ஒரே பெண் அமைச்சர் என்பதால் அழைத்து பேசி பணியாற்ற சொல்லுங்கள் என நான் கூறினேன் என கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார். இதன்மூலம் சந்திர பிரியங்கா 6 மாதம் முன்பே முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிந்துரையின்பேரில் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×