என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசு பள்ளி மாணவர்கள் ஊர்வலம்- ஆர்ப்பாட்டம்
    X

    அரசு பள்ளி மாணவர்கள் ஊர்வலம்- ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.

    அரசு பள்ளி மாணவர்கள் ஊர்வலம்- ஆர்ப்பாட்டம்

    • அரசு பள்ளிகளுக்கு தனியார் நிறுவனத்தின் மூலம் மதிய உணவு வழங்கப்படுகிறது.
    • தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.

    புதுச்சேரி:

    இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் நகர பகுதியில் உள்ள வ.உ.சி. பள்ளியிலிருந்து ஊர்வலமாக வந்து சட்டசபை அருகே ஆம்பூர் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் பிரவீன்குமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கோபி, சத்தியா மற்றும் பள்ளி மாணவர்கள் பலர் இதில் பங்கேற்றனர்.

    புதுவையில் அரசு பள்ளிகளுக்கு தனியார் நிறுவனத்தின் மூலம் மதிய உணவு வழங்கப்படுகிறது.

    இந்த உணவு தரமற்றதாக உள்ளதால், ஒப்பந்தத்தை ரத்து செய்து அரசே முட்டையுடன் மதிய உணவு வழங்க வேண்டும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    புதுவையில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.

    Next Story
    ×