என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
பண்டிகை உதவித்தொகை ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்
- சி.ஐ.டி.யூ. தீர்மானம்
- ரூ.10 லட்சம் மருத்துவ -ஆயுள் காப்பீட்டு திட்டத்தினை உருவாக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை பிரதேச ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர் சங்கம் சி.ஐ.டி.யூ. சார்பில் அனைத்து கிளை நிர்வாகிகள் கூட்டம் இன்று முதலியார் பேட்டை சி.ஐ.டி.யூ. மாநில குழு அலுவலகத்தில் நடந்தது.
சங்கத்தின் தலைவர் மணவாளன் தலைமை வகித்தார். கூட்டத்தில் உடல்நலக்குறைவால் இறந்த தொழிலாளர்கள் ஆறுமுகம், ராஜேந்திரன் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது. கூட்டத்தில், அமைப்புசார தொழிலாளர் நலவாரியத்தை நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும்.
பண்டிகை கால உதவித்தொகை ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 17-ந் தேதி சட்டசபை நோக்கி பேரணி நடத்துவது. நலவாரியத்தில் ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் மருத்துவ -ஆயுள் காப்பீட்டு திட்டத்தினை உருவாக்க வேண்டும்.
அமைப்பு சாரா நலச்சங்கத்தில் பதிவு பெற்று உயிர் இழந்த 550-க்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள இறப்பு உதவித் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். நகர பகுதியில் கியாஸ் நிரப்பும் நிலையம் அமைக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் சீனுவாசன், துணைத் தலைவர் மது, பொது செயலாளர் விஜயகுமார், பொருளாளர் துளசிங்கம், நிர்வாகிகள் பழனிபாலன், ராமு, நூர் முகமது, ஆனந்த், முருகன், சங்கர், செந்தில்குமார்,ரங்கன், ரவிக்குமார், குமரவேல்,மனோகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






