search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு ரூ.1600 கோடி நிதி கோரியுள்ளோம்
    X

    கோப்பு படம்.

    கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு ரூ.1600 கோடி நிதி கோரியுள்ளோம்

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி தகவல்
    • ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி வருகிறோம்.

    புதுச்சேரி:

    மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் காலாப்பட்டு தொகுதியை சேர்ந்த வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கும் விழா கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. துறை இயக்குனர் முத்துமீனா வரவேற்றார்.

    அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். தொகுதி எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கி புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    காலாப்பட்டு தொகுதியில் கடல் அரிப்பு பெரும் பிரச்சினையாக உள்ளது. அதை தடுக்க ரூ.56 கோடியில் கல் கொட்டும் பணி நடந்து வருகிறது. மக்கள் குறைகளை கேட்டு அதை தீர்ப்பதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. புதுவை மாநிலம் முழுவதும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக நிதி ஒதுக்கி அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    சமூகநலத்துறை மூலம் மக்களுக்குரிய நலத்திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். சட்டசபையில் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் அடுத்த கூட்டத் தொடருக்குள் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். சட்டசபையில் எந்த அரசு உதவி பெறாத குடும்ப தலைவிக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்தோம்.

    இதில் 70 ஆயிரம் பேரை கண்டறிந்து படிப்படியாக தொகுதிவாரியாக கொடுத்து வருகிறோம். கியாஸ் சிலிண்டருக்கு சிகப்பு கார்டுக்கு ரூ.300, மஞ்சள் கார்டுக்கு ரூ.150 மானியம் வழங்கும் திட்டம் அறிவித்தோம்.

    இதற்காக ரூ.8 கோடி ஒதுக்கினோம். சுமார் 20 ஆயிரம் பேருக்கு கியாஸ் சிலிண்டர் மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஓரிருநாளில் 40 ஆயிரம் பேருக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.

    பெண் குழந்தைகள் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டு, செலுத்தப்பட்டு வருகிறது. 200 பேருக்கு நிதி செலுத்தப்பட்டுள்ளது.

    அனைவருக்கும் விபத்து காப்பீடு திட்டத்துக்கு ரூ.92 லட்சம் அரசு செலுத்தியுள்ளது. அரசு அறிவித்த 4 திட்டத்தையும் அரசு செயல்படுத்திவிட்டது.

    மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்க டெண்டர் முடிவு செய்தோம். ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி வருகிறோம்.

    மாதந்தோறும் அரிசிக்கு பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல திட்டங்களையும் செயல்படுத்தும். உள்கட்டமைப்பு மேம்படுத்த மத்திய அரசிடம் நிதி பெற்று திட்டங்களை நிறை வேற்றுவோம்.

    கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் ரூ.1600 கோடி நிதி கோரியுள்ளோம். மத்திய அரசும், பிரதமர் மோடியும் புதுவைக்க நிச்சயம் நிதி வழங்குவார்கள். இந்த ஆண்டே பணியை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×