என் மலர்
புதுச்சேரி
- மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
- தனியார் மருத்துவ கல்லூரிகளில் 2 இடங்களும் என மொத்தம் 6 இடங்கள் காலியாக உள்ளன.
புதுச்சேரி:
புதுவை மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா புதுவை கவர்னருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் என். ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் உள்ள 22 இடங்களில் 9 இடங்கள் நிரப்பப்பட்டு ள்ளது. இதில் காலியாக உள்ள 13 இடங் களை அரசு ஒதுக்கீடாக அறிவிக்க வேண்டும்.
2-ம் கட்ட கலந்தாய்வு மூலம் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கு இடங்களை பெற்று மாணவர்கள் கல்லூரியில் சேரும் தேதி நேற்றுடன் நிறைவடை ந்துவிட்டது. இதன்பிறகு காலியாக உள்ள இடங்கள் குறித்த விவரம் தெரியவரும்.
ஏற்கனவே புதுவை அரசு ஒதுக்கீட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரியில் உள்ள 370 மருத்துவ இடங்களில் தகு தியான மாணவர்கள் இல் லாததால் அரசு மருத்துவ கல்லூரியில் 4 இடங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் 2 இடங்களும் என மொத்தம் 6 இடங்கள் காலியாக உள்ளன.
இதனால் இளநிலை மருத்துவ படிப் புக்கான 3-ம் கட்ட மாப்- அப் கலந்தாய்வை வருகிற 20-ந் தேதி நடத்தி மாண வர் சேர்க்கையை முடிக்க வேண்டும். அதற்குமேல் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த மருத்துவ கலந் தாய்வு கமிட்டி அனுமதிக் காதது. எனவே, புதுவை அரசு, சுகாதாரத்துறை மற்றும் சென்டாக் நிர்வாகம் ஒன்றி ணைந்து மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தா ய்வை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- மது குடித்து விட்டு வீட்டின் அருகில் உள்ள வாய்க்கால் கட்டையில் அமர்வது வழக்கம்.
- தலையில் பலத்த காயமடைந்த அவரை புதுவை அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதித்தனர்.
புதுச்சேரி:
புதுவை முத்திரையர் பாளையம் கோவிந்தன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 63 ) இவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
சுந்தரத்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.
இவர் அவ்வப்போது மது குடித்து விட்டு வீட்டின் அருகில் உள்ள வாய்க்கால் கட்டையில் அமர்வது வழக்கம். அதுபோல் சம்பவத்தன்று சுந்தரம் மது குடித்து விட்டு வாய்க்கால் கட்டையில் அமர்ந்திருந்தார்.
அப்போது குடிபோதை யில் எதிர்பாராதவிதமாக வாய்க்காலில் தவறி விழுந்தார்.
உடனே அங்கிருந்தவர்கள் சுந்தரத்தின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். குடும்பத்தினர் விரைந்து வந்து சுந்தரத்தை மீட்டு வீட்டில் சுத்தம் செய்து நாற்காலியில் அமர வைத்தனர். அப்போது மீண்டும் நாற்காலியில் இருந்து சுந்தரம் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை புதுவை அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சுந்தரம் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இது குறித்து அவரது மகன் சிவசங்கர் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இந்திய அளவில் 15 துக்கும் மேற்பட்ட பல்வேறு கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- மாணவர்கள் பங்கு பெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றது.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் அரியூரில் உள்ள வெங்கடே ஸ்வரா பிசியோதெரபி கல்லூரியில் சர்வதேச அளவிலான 2 நாட்கள் கருத்தரங்கம் கல்லூரியில் உள்ள சாய் அரங்கில் நடைபெற்றது.
அரியூர் ஸ்ரீ ராமச்சந்திரா கல்வி குழுமத்தின் தலைவர் ராமச்சந்திரன் வழிகாட்டு தலின்படி நடைபெற்ற இந்த கருத்தரங்கில் கல்வி குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி டாக்டர் வித்யா, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரத்தினசாமி, கல்வி குழுமத்தின் கல்வி ஆலோசகர் டாக்டர்.வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்து கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தனர்.
கருத்தரங்கத்தில் இந்திய அளவில் 15 துக்கும் மேற்பட்ட பல்வேறு கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
உலக அளவில் ஆராய்ச்சி யை மேற்கொள்ளும் பிசியோ தெரபி மருத்துவர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டு தங்களது ஆரா ய்ச்சிக்கான முடிவினை விளக்கமாக கூறினார்கள்.
கல்லூரியின் துணை முதல்வர்கள் டாக்டர். பரணிதரன், டாக்டர்.ஆனந்த் பாபு, பேராசிரி யர்கள், மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு தங்களது ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து பேசினார்கள்.
பிசியோதெரபி கல்லூரி முதல்வர் டாக்டர் கணேஷ்குமார் அனைவரை யும் வரவேற்று பேசினார்.
கருத்தரங்கில் இயன் முறை மருத்துவத்தில் உள்ள சமீபத்திய ஆய்வு கட்டுரைகள், ஆராய்ச்சி விளக்கங்கள், சுவரொட்டி விளக்கக் காட்சியும் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டி ருந்தது.
மேலும் மாணவர்கள் பங்கு பெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
முடிவில் பிசியோதெரபி இணை பேராசிரியர் டாக்டர் பால்ராஜ் நன்றி கூறினார்.
- ஆலோசனை கூட்டம் அரியாங்குப்பம் காமராஜர் திருமண நிலையத்தில் நடந்தது.
- ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது சம்பந்தமாக பிற்படுத்தப்பட்டோர் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து உட்பட்ட 14 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 110 வார்டுகளில் இந்த பணிகள் நடந்து வருகிறது. வாக்காளர் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் அரியாங்குப்பம் காமராஜர் திருமண நிலையத்தில் நேற்று நடந்தது.
இந்தக் கூட்டத்திற்கு அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர் ஓய்வு பெற்ற புதுச்சேரி மாவட்ட நீதிபதி ராமபத்ரன், கலந்துகொண்டு அங்கன்வாடி ஊழிய ர்களிடம் கருத்துகளை கேட்டும், ஆலோசனை களையும் வழங்கினார்.
அதில் கொம்யூன் பஞ்சாயத்து மேனேஜர் வீரம்மாள், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அரியாங்குப்பம் திட்ட அதிகாரி செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் செழியன் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
- உணவு தரகட்டுப்பாட்டு துறையின் மூலம் அங்கீகார சான்றிதழ் பெற்று "நெய்தல்" என்ற பெயரில் விற்பனை செய்கின்றனர்.
- பெண்கள் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் என அனைத்து வயதினரும் உட்கொள்ளக்கூடிய ஒரு உணவாகும்.
புதுச்சேரி:
குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவண ன்குமார் தலைமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் இயங்கும் அனைத்து திட்டங்களின் வளர்ச்சி குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:-
ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் கீழ் செயல்படும் உணவு, ஊட்டச்சத்துக்கள், ஆரோக்கியம் மற்றும் சுத்தம் திட்டத்தின் மூலம் அரியாங்குப்பம், வில்லி யனூர், காரைக்கால் ஆகிய மூன்று வட்டாரங்களில் உள்ள 40 சுய உதவிக்குழு கிராமப்புறபெண்களுக்கு, தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் மூலம் 3 நாட்கள் பயிற்சி பெற்று தற்பொழுது அவர்களை தொழில் குழுக்களாக மாற்றி முறையாக உணவு தரகட்டுப்பாட்டு துறையின் மூலம் அங்கீகார சான்றிதழ் பெற்று "நெய்தல்" என்ற பெயரில் விற்பனை செய்கின்றனர்.
மக்கள் அனைவரும் சிறுதானிய உணவை அதிகமாக பயன்படுத்த வேண்டும். ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்க இது மிகவும் பயனுள்ள ஒரு பொருளாக திகழ்கின்றது.
அனைத்து வயதினரும் சிறுதானிய உணவை உட்கொ ள்ளலாம். பெரும்பாலும் கர்ப்பிணி பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள் பெண்கள் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் என அனைத்து வயதினரும் உட்கொள்ளக்கூடிய ஒரு உணவாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அரசு செயலர் நெடுஞ்செழியன், திட்ட இயக்குனர் சத்தியமூர்த்தி, ஊரக வளர்ச்சித்துறை, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
- சந்திர பிரியங்கா தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு துறைகளில் திருப்திகரமாக செயல்படாததால்தான் நீக்கப்பட்டதாக கவர்னர் தெரிவித்துள்ளார்.
- கோவையில் நடந்த ஒய் 20 மாநாட்டில் பங்கேற்ற புதுவை கவர்னர், நான் சிறப்பாக செயல்பட்டு வருவதாக மேடையிலேயே பாராட்டி பேசி சான்றளித்தார்.
புதுச்சேரி:
புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சந்திர பிரியங்கா தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு துறைகளில் திருப்திகரமாக செயல்படாததால்தான் நீக்கப்பட்டதாக கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார். சந்திர பிரியங்கா ராஜினாமா செய்தது முதலில் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய துறைகளை வகித்திருந்த சந்திர பிரியங்கா முதலமைச்சருக்கு திருப்தி அளிக்கும் வகையில் செயல்படாததால் அவரை நீக்க எனக்கு பரிந்துரைத்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சந்திர பிரியங்கா தனது துறைகளில் செய்த வளர்ச்சிப்பணிகள், சாதனைகள், மாற்றங்கள் ஆகியவற்றை பட்டியலிட்டு 9 பக்க கடிதத்தை இன்று வெளியிட்டுள்ளார். அதில் ஒவ்வொரு துறைகளிலும், தான் செய்த வளர்ச்சி, மாற்றங்களை தனித்தனியாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசில் நான் அமைச்சராக பொறுப்பேற்றது முதல் எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட துறைகள் சார்ந்து நான் மேற்கொண்ட பணிகளில் சிலவற்றை பொதுமக்கள் பார்வைக்கும், அமைச்சராக என் செயல்பாடுகள் குறித்து விமர்சிப்பவர்களின் கவனத்திற்கும் கொண்டுவர கடமைப்பட்டுள்ளேன்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கோவையில் நடந்த ஒய் 20 மாநாட்டில் பங்கேற்ற புதுவை கவர்னர் தமிழிசை, நான் சிறப்பாக செயல்பட்டு வருவதாக மேடையிலேயே பாராட்டி பேசி சான்றளித்தார்.
புதுவை அரசு துறைகளில் சிறப்பாக செயல்படும் ஒரு துறைக்கு வழங்கப்படும் விருதும் கடந்த 2022-ம் ஆண்டு சிறப்பாக நிர்வாகம் செய்யப்பட்ட துறை என எனது தொழிலாளர் துறைக்கு கிடைத்தது என கூறியுள்ளார்.
இதுதவிர ஒவ்வொரு துறையையும் குறிப்பிட்டு, அதில் தான் செய்த மாற்றங்கள், வளர்ச்சி திட்டங்கள் ஆகியவற்றை பட்டியலிட்டுள்ளார்.
- அமைச்சர்களையும், இலாக்காக்களையும் முடிவு செய்வது முதலமைச்சரின் பொறுப்பு.
- கலை பண்பாட்டுத் துறையை அமைச்சர் லட்சுமி நாராயணனுக்கு கூடுதலாக ஒதுக்கும் வாய்ப்பும் உள்ளது.
புதுச்சேரி:
புதுவை அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த என்.ஆர்.காங்கிரஸ் பெண் அமைச்சர் சந்திரபிரியங்கா நீக்கப்பட்டார்.
புதிய அமைச்சராக காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த திருமுருகன் நியமிக்கப்பட உள்ளார். அவர் விரைவில் அமைச்சராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி அமைச்சர்களின் இலாக்காக்களை மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நீக்கப்பட்ட அமைச்சர் சந்திரபிரியங்காவிடம் போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலன், வீட்டு வசதி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, கலை பண்பாட்டுத்துறை, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகள் இருந்தது.
மரபாக ஆதிதிராவிடர் நலத்துறை அந்த சமூகத்தை சேர்ந்த அமைச்சர்களுக்கு வழங்கப்படும்.
தற்போது ஆதிதிராவிட சமூகத்தை சேராத திருமுருகன் புதிய அமைச்சராக பதவியேற்க உள்ளார். இதனால் ஆதி திராவிடர் நலத்துறையை அவருக்கு ஒதுக்காமல், அதே சமூகத்தை சேர்ந்த பா.ஜனதா அமைச்சர் சாய்.சரவணக்குமாருக்கு ஒதுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர்களையும், இலாக்காக்களையும் முடிவு செய்வது முதலமைச்சரின் பொறுப்பு. இருப்பினும் கூட்டணி அமைச்சரவை என்பதால் பா.ஜனதா தலைமையிடம் தெரிவித்து, இலாக்காக்களை மாற்றம் செய்ய வேண்டும். அப்படி மாற்றம் செய்யும் பட்சத்தில் சாய்.ஜெ.சரவணன் குமாரிடம் உள்ள ஒரு துறையை புதிய அமைச்சருக்கு ஒதுக்க வேண்டும்.
இல்லாதபட்சத்தில் முதலமைச்சர் தன்வசமே ஆதிதிராவிடர் நலத்துறையை வைத்துக் கொள்ளலாம்.
இதுமட்டுமின்றி, சுற்றுலாத்துறை என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர் லட்சுமிநாராயணன் வசம் உள்ளது. சுற்றுலாவுடன் கலை பண்பாட்டுத்துறையும் இருந்தால் சுற்றுலா வளர்ச்சி மேம்பாடுகளை செய்வது எளிதாக இருக்கும் என்ற கருத்தும் உள்ளது.
இதனால் கலை பண்பாட்டுத் துறையை அமைச்சர் லட்சுமி நாராயணனுக்கு கூடுதலாக ஒதுக்கும் வாய்ப்பும் உள்ளது. மேலும், என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்களின் ஒரு சில துறைகளை மாற்றி அமைக்கவும் முதலமைச்சர் ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த இலாக்கா மாற்றம் புதிய அமைச்சர் பதவியேற்ற நாளில்தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
- சந்திர பிரியங்கா ராஜினாமா செய்ததற்கு சாதி, பாலின தாக்குதலே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
- புதுச்சேரியில் புதிய அமைச்சர் பதவி ஏற்க இருப்பது தொடர்பாக எனக்கு எந்த தகவலும் வரவில்லை.
புதுவையில் 40 ஆண்டுக்கு பிறகு பெண் எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதற்கு சாதி, பாலின தாக்குதலே காரணம் என அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அரசியல் கட்சியினர் அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சராக இருந்த சந்திர பிரியங்காவின் துறை பணிகளில் தொய்வு இருந்ததால் முதலமைச்சர் அவரை நீக்க கோரினார் என துணை நிலை ஆளுநர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
சந்திர பிரியங்காவிற்கு பிரச்சினைகள் ஏதும் இருந்திருந்தால் என்னை சந்தித்து இருக்கலாம்.
சந்திர பிரியங்கா கூறியுள்ள காரணங்கள் வருத்தம் அளிக்கிறது. சாதி ரீதியான பிரச்சினை எதுவும் கிடையாது.
அமைச்சராக இருந்த சந்திர பிரியங்காவின் துறை பணிகளில் தொய்வு இருந்தால் முதலமைச்சர் அவரை நீக்க கோரினார்.
புதுச்சேரியில் புதிய அமைச்சர் பதவி ஏற்க இருப்பது தொடர்பாக எனக்கு எந்த தகவலும் வரவில்லை.
அமைச்சரவையில் இருந்து தான் நீக்கப்பட உள்ளதை அறிந்த சந்திர பிரியங்கா ராஜினாமா செய்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இரவு நேரத்தில் தடாலடியாக சிலையை அகற்றுவதில் நோக்கம் அரசியல் கொண்டதாக உள்ளது என அன்பழகன் வாக்குவாதம் செய்தார்.
- அகற்றப்பட்ட எம்.ஜி.ஆர். சிலை வில்லியனூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள வருவாய்த்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
சேதராப்பட்டு:
புதுவை-விழுப்புரம் சாலை வில்லியனூரில் இருந்து பெரம்பை செல்லும் சாலையின் புறவழிச்சாலையின் மையப் பகுதியில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். சிலை இருந்தது.
1998-ம் ஆண்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த நடராஜன் எம்.ஜி.ஆர். சிலையை நிறுவினார்.
வில்லியனூர் பகுதியில் புதுவை-விழுப்புரம் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. விபத்தை தடுக்க சாலை நடுவே பல கிலோ மீட்டர் தூரம் வரையில் சென்டர் மீடியன் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வில்லியனூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையை அகற்றாமல் சாலையை விரிவுப்படுத்த முடியாது என்ற நிலையில் எம்.ஜி.ஆர். சிலையை அகற்ற நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில் நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் சப்-கலெக்டர் முரளிதரன் தலைமையில் வருவாய்த் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் எம்.ஜி.ஆர். சிலையை அகற்றினர்.
இதனை கேள்விப்பட்டு அங்கு வந்த அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமையிலான அ.தி.மு.க.வினர் யாரை கேட்டு சிலையை அகற்றி இருக்கிறீர்கள் என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிலையை அகற்ற அரசு அனுமதி கொடுத்திருந்தாலும் சிலையை அகற்றுவது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கு ஏன் தகவல் தெரிவிக்கப்படவில்லை. சொல்லியிருந்தால் அ.தி.மு.க.வினரே சிலையை அகற்றி கொடுத்திருப்போம்.
இரவு நேரத்தில் தடாலடியாக சிலையை அகற்றுவதில் நோக்கம் அரசியல் கொண்டதாக உள்ளது என அன்பழகன் வாக்குவாதம் செய்தார்.
அகற்றப்பட்ட எம்.ஜி.ஆர். சிலை வில்லியனூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள வருவாய்த்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
ஏற்கனவே சிலை இருந்த இடத்திலிருந்து சுமார் 20 மீட்டர் தூரத்தில் சாலையின் ஓரத்தில் எம்.ஜி.ஆர். சிலை வைக்கப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகள் கூறினர். வருவாய்த்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். சிலை அதிகாரிகள் வைக்கப் போவதாக சொன்ன இடத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அப்போது பேசிய அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன், அகற்றப்பட்ட சிமெண்டால் ஆன எம்.ஜி.ஆர். சிலை வெண்கல சிலையாக மாற்றி வைப்பதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார். விரைவில் அரசு வெண்கல சிலையை அமைக்க வேண்டுமென கூறினார்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் கலைந்து சென்றனர். இன்று சாலை விரிவாக்க நடந்து வரும் நிலையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு
- அமைச்சர் பதவி நீக்கம் குறித்து முதல்-அமைச்சர் ஏன் பதில் கூறவில்லை? ஏன் மவுனமாக உள்ளார்?
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறிய தாவது:-
புதுவை முதல்- அமைச்ச ருக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் எந்த அக்கறையும் இல்லை. சமூக தலைவர்களிடம் பேசும்போது மாநில அந்தஸ்தை முன்னாள் முதல்- அமைச்சர்கள் எதிர்க்கின்ற னர் என கூறியுள்ளார். நானோ, நாராயணசாமியோ மாநில அந்தஸ்தை எதிர்க்க வில்லை.
மாநில அந்தஸ்து விவகாரத்தில் முதல்-அமைச்சர் நிலைப்பாடு என்ன? என தெரியவில்லை. புதுவை அரசு சார்பில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், சபாநாயகர் டெல்லிக்கு செல்லவில்லை?
தற்போது மத்திய அரசு மாநில அந்தஸ்து வழங்க வில்லை என கூறிய பிறகு டெல்லிக்கு செல்வோம் என்கின்றனர். இன்னும் 2 ஆண்டிலாவது மாநில அந்தஸ்து பெறுவார்களா? இல்லையா? என தெரிவிக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. ஆனால் பா.ஜனதா கூட்டணி ஆட்சி யில் ஒரு பெண் அமைச்சரை நீக்குகின்றனர்.
இந்த பதவிநீக்கம் ஆணாதிக்கத்தின் செயல்பாடு. ஆணாதிக்க ஆட்சியாகவே இதை பார்க்கிறோம். பா.ஜனதா 33 சதவீதம் என சொல்வதே ஏமாற்று வேலை என்பதற்கு இது உதாரணம்.
பெண்களையும், மக்களையும் திசை திருப்பி பழி வாங்கும் வகையில் புதுவையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது. அதிகாரம் இல்லை என கூறும் முதல்-அமைச்சர், தனது அதிகாரத்தை பகிர்ந்து தர மறுக்கிறார். எந்த அமைச்சர்களுக்கும் அதிகாரம் தருவது கிடையாது.
இவர் மட்டுமே முதல்-அமைச்சராக முழு அதிகா ரத்தையும் வைத்துக் கொண்டுள்ளார். அதுவும் போதாது என மாநில அந்தஸ்து அதிகாரம் வேண்டும் என கேட்கிறார். பெண் அமைச்சரிடம் பதவியை பறித்து பண முதலாளிக்கு தர முதல்-அமைச்சர் நினைக்கிறார்.
இந்த வியாபாரத்தின் மூலம் தனது வசதியை பெருக்கிக்கொள்ள நினைக்கிறார். இது வன்மை யாக கண்டிக்கத்தக்கது.
பெண் உரிமை பேசும் பெண் கவர்னர், ஒரு பெண்ணின் பதவியை பறிப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம். இதை வன்மையாக கண்டிக்கிறோம். அமைச்சர் பதவிநீக்கம் குறித்த காரணத்தை முதல்-அமைச்சர் வெளிப்படை யாக தெரிவிக்க வேண்டும். அமைச்சர் பதவி நீக்கம் குறித்து முதல்-அமைச்சர் ஏன் பதில் கூறவில்லை? ஏன் மவுனமாக உள்ளார்?
முதல்-அமைச்சர் ஆண் ஆதிக்கம் செலுத்துபவர். பெண்களுக்கு சம உரிமை தருவதில் அவருக்கு எந்த ஒப்புதலும் கிடையாது.
மாநில அந்தஸ்து வேண்டுமென்றால் புதுவை அரசிடம் இருந்து கோரிக்கைகள் மத்திய அரசுக்கு செல்ல வேண்டும். எம்.பி.க்கள் தானாக கேட்க முடியாது. புதுவை அரசிடம் இருந்து கோரிக்கைகள் அனுப்பினால்தான் மத்தியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் வலியுறுத்தி பெற முடியும்.
புதுவையில் முழுமையாக பா.ஜனதா ஆட்சிதான் நடக்கிறது. அமைச்சர் ஒரு பெண் என்பதால் அவரின் உரிமைக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்
- ஒரு பெண் அமைச்சர் மனம் எவ்வளவு புண்பட்டிருந்தால் இப்படி அறிக்கை கொடுத்திருப்பார்?
புதுச்சேரி:
புதுவை மாநில முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
ரங்கசாமி முதல்- அமைச்சராகி 2 1/2 ஆண்டாகிறது. மாநில அந்தஸ்து பெற பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ளேன் என ரங்கசாமி கூறினார்.
புதுவைக்கு வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றார். இதில் யார் குற்றவாளி? பிரதமர் எத்தனை முறை டெல்லிக்கு சென்றார்? மாநில அந்தஸ்து தர முடியாது என மத்திய அரசு கூறியபிறகு, எதிர்கட்சிகள் மீது பழிபோடுகிறார். புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறும் எண்ணம் ரங்கசாமிக்கும் இல்லை, வழங்கும் எண்ணம் மத்திய பா.ஜனதா அரசுக்கும் இல்லை. ரங்க சாமி சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார்.
ஒரு பெண் அமைச்சர் பதவியை ராஜி னாமா செய்துள்ளார். 4 நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் ரங்க சாமி, கவர்னரை சந்தித்து அமைச்சர் சந்திர பிரியங்காவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். திருமுருகனை அமைச்சராக்க வேண்டும் என கடிதம் அளித்துள்ளார்.
அந்த கடிதம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்த கடிதம் ஏற்கப்பட்டு, புதுவை அரசுக்கு வந்துள்ளது. பெண் அமைச்சரை அசிங்கப்படுத்தி உள்ளனர். அமைச்சர்கள், முதல்-அமைச்சரின் செயல்பாடு கள் சரியாக உள்ளதா? ஒரு பெண் அமைச்சர் மனம் எவ்வளவு புண்பட்டிருந்தால் இப்படி அறிக்கை கொடுத்திருப்பார்? மன வேதனையோடு அந்த கடிதத்தை எழுதியுள்ளார். ஆண் அதிகார வர்க்கம் என்னை செயல்படவிடாமல் தடுத்துள்ளது.
தனிப்பட்ட பிரச்சினையை முன்வைத்து பழிவாங்குகின்றனர். சாதி, பாலின ரீதியில் அழுத்தம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா சுயரூபத்தை அமைச்சரின் கடிதம் காட்டுகிறது. இது மிகப்பெரும் குற்றச்சாட்டு. இதுகுறித்து தலித் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் பெண்கள் விரோத ஆட்சி நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
- புதுவைக்கு உரிய அதிகாரம் வேண்டும் என ஐகோர்ட்டு, சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
புதுச்சேரி:
புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி 14-வது முறையாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, தற்போதைய நிலையிலேயே புதுவை தொடரும் என தெரிவித்துள்ளது. இதனால் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியாது என தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை புதுவையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
பல்வேறு அரசியல் கட்சியினரும், பா.ஜனதா கூட்டணியிலிருந்து என்ஆர்.காங்கிரஸ் விலக வேண்டும். அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும். எம்.எல்.ஏ.க்களோடு டெல்லிக்கு சென்று பிரதமரை வலியுறுத்தி மாநில அந்தஸ்து பெற வேண்டும்.
புதுவை மக்கள் போராட்டம் நடத்த முதல்-அமைச்சர் அழைப்பு விட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. முதல்-அமைச்சர் ரங்கசாமி, மத்திய அரசின் இந்த முடிவு நிலையா னது அல்ல, டெல்லிக்கு சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு அனுப்பிய கடிதத்தின் பொருள், தற்போதைய நிலையே தொடரும் என்பதுதான். அதற்கு மாநில அந்தஸ்து மறுப்பு என கருத்தில் கொள்ளக்கூடாது. ஒவ்வொரு கட்சியினரும் அவர்களுக்கு தெரிந்த வகையில் எடுத்துக்கொள்கின்றனர். 'புதுவைக்கு உரிய அதிகாரம் வேண்டும் என ஐகோர்ட்டு, சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
அப்போது புதுவைக்கு மாநில அந்தஸ்து இல்லை என ஐகோர்ட்டு, சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பளித்து விட்டது. இது சட்டரீதியாக மறுக்கப்பட்ட விஷயம். இதை அரசியல் ரீதியாக எடுத்துச்செல்ல வேண்டும்.
1954-ம் ஆண்டு முதல் மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி இருந்த போது மாநில அந்தஸ்து பெற்றிருக்க வேண்டிய வர்கள், அதை செய்ய தவறியதால் மிகப்பெரிய பளுவை புதுவை அரசு சுமந்து கொண்டிருக்கிறது.
நிர்வாகத்திற்கு வெளி மாநிலத்திலிருந்து வரும் அதிகாரிகள், கோப்புகளுக்கு காலதாமதம் செய்வது வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.






