search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பெண்களை பழிவாங்கும் வகையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது
    X

    கோப்பு படம்.

    பெண்களை பழிவாங்கும் வகையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது

    • வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு
    • அமைச்சர் பதவி நீக்கம் குறித்து முதல்-அமைச்சர் ஏன் பதில் கூறவில்லை? ஏன் மவுனமாக உள்ளார்?

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறிய தாவது:-

    புதுவை முதல்- அமைச்ச ருக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் எந்த அக்கறையும் இல்லை. சமூக தலைவர்களிடம் பேசும்போது மாநில அந்தஸ்தை முன்னாள் முதல்- அமைச்சர்கள் எதிர்க்கின்ற னர் என கூறியுள்ளார். நானோ, நாராயணசாமியோ மாநில அந்தஸ்தை எதிர்க்க வில்லை.

    மாநில அந்தஸ்து விவகாரத்தில் முதல்-அமைச்சர் நிலைப்பாடு என்ன? என தெரியவில்லை. புதுவை அரசு சார்பில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், சபாநாயகர் டெல்லிக்கு செல்லவில்லை?

    தற்போது மத்திய அரசு மாநில அந்தஸ்து வழங்க வில்லை என கூறிய பிறகு டெல்லிக்கு செல்வோம் என்கின்றனர். இன்னும் 2 ஆண்டிலாவது மாநில அந்தஸ்து பெறுவார்களா? இல்லையா? என தெரிவிக்க வேண்டும்.

    நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. ஆனால் பா.ஜனதா கூட்டணி ஆட்சி யில் ஒரு பெண் அமைச்சரை நீக்குகின்றனர்.

    இந்த பதவிநீக்கம் ஆணாதிக்கத்தின் செயல்பாடு. ஆணாதிக்க ஆட்சியாகவே இதை பார்க்கிறோம். பா.ஜனதா 33 சதவீதம் என சொல்வதே ஏமாற்று வேலை என்பதற்கு இது உதாரணம்.

    பெண்களையும், மக்களையும் திசை திருப்பி பழி வாங்கும் வகையில் புதுவையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது. அதிகாரம் இல்லை என கூறும் முதல்-அமைச்சர், தனது அதிகாரத்தை பகிர்ந்து தர மறுக்கிறார். எந்த அமைச்சர்களுக்கும் அதிகாரம் தருவது கிடையாது.

    இவர் மட்டுமே முதல்-அமைச்சராக முழு அதிகா ரத்தையும் வைத்துக் கொண்டுள்ளார். அதுவும் போதாது என மாநில அந்தஸ்து அதிகாரம் வேண்டும் என கேட்கிறார். பெண் அமைச்சரிடம் பதவியை பறித்து பண முதலாளிக்கு தர முதல்-அமைச்சர் நினைக்கிறார்.

    இந்த வியாபாரத்தின் மூலம் தனது வசதியை பெருக்கிக்கொள்ள நினைக்கிறார். இது வன்மை யாக கண்டிக்கத்தக்கது.

    பெண் உரிமை பேசும் பெண் கவர்னர், ஒரு பெண்ணின் பதவியை பறிப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம். இதை வன்மையாக கண்டிக்கிறோம். அமைச்சர் பதவிநீக்கம் குறித்த காரணத்தை முதல்-அமைச்சர் வெளிப்படை யாக தெரிவிக்க வேண்டும். அமைச்சர் பதவி நீக்கம் குறித்து முதல்-அமைச்சர் ஏன் பதில் கூறவில்லை? ஏன் மவுனமாக உள்ளார்?

    முதல்-அமைச்சர் ஆண் ஆதிக்கம் செலுத்துபவர். பெண்களுக்கு சம உரிமை தருவதில் அவருக்கு எந்த ஒப்புதலும் கிடையாது.

    மாநில அந்தஸ்து வேண்டுமென்றால் புதுவை அரசிடம் இருந்து கோரிக்கைகள் மத்திய அரசுக்கு செல்ல வேண்டும். எம்.பி.க்கள் தானாக கேட்க முடியாது. புதுவை அரசிடம் இருந்து கோரிக்கைகள் அனுப்பினால்தான் மத்தியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் வலியுறுத்தி பெற முடியும்.

    புதுவையில் முழுமையாக பா.ஜனதா ஆட்சிதான் நடக்கிறது. அமைச்சர் ஒரு பெண் என்பதால் அவரின் உரிமைக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×