search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மது போதையில் வாய்க்காலில் தவறிவிழுந்த அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பலி
    X

    கோப்பு படம்.

    மது போதையில் வாய்க்காலில் தவறிவிழுந்த அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பலி

    • மது குடித்து விட்டு வீட்டின் அருகில் உள்ள வாய்க்கால் கட்டையில் அமர்வது வழக்கம்.
    • தலையில் பலத்த காயமடைந்த அவரை புதுவை அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை முத்திரையர் பாளையம் கோவிந்தன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 63 ) இவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    சுந்தரத்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.

    இவர் அவ்வப்போது மது குடித்து விட்டு வீட்டின் அருகில் உள்ள வாய்க்கால் கட்டையில் அமர்வது வழக்கம். அதுபோல் சம்பவத்தன்று சுந்தரம் மது குடித்து விட்டு வாய்க்கால் கட்டையில் அமர்ந்திருந்தார்.

    அப்போது குடிபோதை யில் எதிர்பாராதவிதமாக வாய்க்காலில் தவறி விழுந்தார்.

    உடனே அங்கிருந்தவர்கள் சுந்தரத்தின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். குடும்பத்தினர் விரைந்து வந்து சுந்தரத்தை மீட்டு வீட்டில் சுத்தம் செய்து நாற்காலியில் அமர வைத்தனர். அப்போது மீண்டும் நாற்காலியில் இருந்து சுந்தரம் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை புதுவை அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சுந்தரம் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    இது குறித்து அவரது மகன் சிவசங்கர் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×