என் மலர்
புதுச்சேரி
- மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் வலியுறுத்தல்
- பாலின ரீதியாகவும் தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்த அந்த பண முதலை யார் என்பதை அமைச்சர் சந்திரபிரியங்காவிடம் விசாரணை செய்து கண்டுபிடித்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில மக்கள் பாதுகாப்பு பேரியக்கத் தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிகையில் கூறியிருப்பதாவது:-
அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜினாமா செய்திருப்பது அவரது சொந்த விருப்பம் என்றாலும், ஆனால் அதற்காக அவர் கூறிய காரணங்களை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர் கடுமை யான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
சாதி ரீதியாகவும், பாலின ரீதியாகவும் அவர் துன்பு றுக்கப்பட்டு ள்ளதாகவும் மேலும் பணத்திமிர் பிடித்தவர்களுக்கு எதிராக அவரால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறியிருப்பது மாநிலத்திற்கு பெரிய அவமானமாக உள்ளது. ஒரு பெண் அமைச்சருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உண்மையாக இருக்குமானால் அதற்கு இந்த அரசு முழுவதுமாக பொறுப்பேற்க வேண்டும்.
மேலும் அவரது ராஜினாமாவை இது தொடர்பான விசாரணை முழு அளவில் முடிவு வரும் வரை இந்த அரசு ஏற்க கூடாது, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் முழு அளவில் விசாரணை செய்து அவருக்கு சாதிய ரீதியாகவும் , பாலின ரீதியாகவும் தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்த அந்த பண முதலை யார் என்பதை அமைச்சர் சந்திரபிரியங்காவிடம் விசாரணை செய்து கண்டுபிடித்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
33 சதவீத பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்ட நிலையில் இருக்கின்ற ஒரு பெண் அமைச்சரை நீக்காமல் தொடர்ந்து பணியாற்ற அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்.
- முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் அறிக்கை
- சிலையை சுற்றி ரவுண்டானா அமைத்து சிலையை பராமரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன்
புதுச்சேரி:
முன்னாள் எம்.எல்.ஏ. ஒம்சக்தி சேகர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை வில்லியனுரில் எம்.ஜி.ஆர். சிலை அகற்றம் அவரது கோடான கோடி தொண்டர்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது.
ஏற்கனவே எம்.ஜி.ஆர். சிலை அகற்றப்பட உள்ளதாக கடந்த ஆண்டு செய்தி வெளிவந்தவுடன் நான் உடனடியாக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து சிலையை அகற்றக் கூடாது என்று கோரிக்கை வைத்தேன். மேலும் சிலையை சுற்றி ரவுண்டானா அமைத்து சிலையை பராமரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன்
முதல்-அமைச்சரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.ஆனால் நேற்றைய தினம் இரவோடு இரவாக சிலை அகற்றப் பட்டுள்ளது எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் இடையே மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே புதுவை அரசு கலந்து பேசி அதே பகுதியில் எம்.ஜி.ஆர். சிலையை சிறப்பாக அமைத்து தர உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- டாக்டர் சுகந்தி பிரபாகர் தலைமையில் மருத்துவ குழுவினர் கண்களை பரிசோதனை செய்தனர்.
- 200-க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்கள் கண் சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றனர்.
புதுச்சேரி:
புதுவை கிராப்ட் பவுண்டேஷன் சார்பில் கை வினை கலைஞர்களுக்கான சிறப்பு இலவச கண் மருத்துவ முகாம் முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் நடத்தினர்.
முகாமில் டாக்டர் சுகந்தி பிரபாகர் தலைமையில் மருத்துவ குழுவினர் கண்களை பரிசோதனை செய்தனர். முகாமை மாவட்ட தொழில் இயக்க மேலாளர் ஜெயராமன், கைவினை கலைஞர்கள கிராம மேலாளர் பாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். புதுவை கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஹரிபத்திரி குமரன், சரவணன், சண்முகம், ராஜமூர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை வில்லியனூர் கிராப்ட் பவுண்டேஷன் தலைவர் பத்மஸ்ரீ முனுசாமி செய்திருந்தார். முகாமில் 200-க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்கள் கண் சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றனர்.
- சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்தில் உயிர் பூச்சிக்கொல்லிகள் உற்பத்தி பயிற்சி நடைபெற உள்ளது.
- கிராம அறிவு மையத்தை அணுகி பயிற்சிக்கான விண்ணப்பத்தை பெறலாம்.
புதுச்சேரி:
புதுவை மா. சா. சுவாமி நாதன் ஆராய்ச்சி நிலை யத்தின் வளர்ச்சி ஒருங்கிணை ப்பாளர் கிரிஜா வெளியிட்டு ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-
மத்திய அரசின் விவசாய விரிவாக்க திட்டத்தின் கீழ் புதுவை காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வில்லியனூர் பகுதி பிள்ளையார்குப்பம் மா. சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்தில் உயிர் பூச்சிக்கொல்லிகள் உற்பத்தி பயிற்சி நடைபெற உள்ளது.
இதில் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம். பயிற்சி 6 நாட்கள் நடக்கும். பயிற்சியில் தசகாவியம், அக்னி அஸ்திரம், பிர ம்மாஸ்திரம், கற்பூரகரை சல், வேப்பங்கொட்டை கரைசல், மீன் அமினோ அமிலம், ஐந்திலை கரைசல், இதுபோன்ற பல உயிர் பூச்சிக்கொல்லிகள் உற்பத்தி பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியில் சேர 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆதார் நகலுடன் ஆராய்ச்சி நிலையம் மற்றும் கிராம அறிவு மையத்தை அணுகி பயிற்சிக்கான விண்ண ப்பத்தை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருமுருகன் வன்னியர், தலித், சிறுபான்மை அல்லாத சமூகத்தை சேர்ந்தவர்.
- காரைக்காலில் முதலமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளுக்கு பேனர் வைப்பதில் சந்திரபிரியங்கா, திருமுருகன் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
புதுச்சேரி:
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சந்திர பிரியங்கா தொகுதி மக்களுக்கு ஒரு கடிதம் வெளியிட்டார்.
அந்த கடிதத்தில், மறைமுகமாக காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில், முதலமைச்சருக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோளை வைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
புதுவையில் பெரும்பான்மையாக உள்ள 2 சமூகங்களான வன்னியர், தலித் சமூகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள், புதுவை மக்களுக்காக அயராது பாடுபட்டு வருகின்றனர்.
அச்சமூகங்கள் மேலும் மேம்பட காழ்ப்புணர்ச்சி இல்லாத அரசியலை உறுதி செய்ய காலியாகும் அமைச்சர் பதவியை வன்னியர், தலித் அல்லது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வுக்கு அளித்து நியாயம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும், மக்கள் பின்புலம் இல்லாவிட்டாலும் பணத்திமிராலும், அதிகார மட்டத்தில் உள்ள செல்வாக்காலும் பதவிக்கு வந்துவிட துடிப்பவர்களுக்கு அமைச்சர் பதவியை கொடுத்து பெரும்பான்மையாக உள்ள வன்னியர், தலித் சமூகங்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம் என்றும் கூறியிருந்தார். இதன்மூலம் காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கக்கூடாது என அவர் உறுதிபட தெரிவித்து உள்ளார்.
ஏனெனில் திருமுருகன் வன்னியர், தலித், சிறுபான்மை அல்லாத சமூகத்தை சேர்ந்தவர். சமீபத்தில் காரைக்காலில் முதலமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளுக்கு பேனர் வைப்பதில் சந்திரபிரியங்கா, திருமுருகன் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் திருமுருகன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதலமைச்சர் ரங்கசாமி கவர்னர் தமிழிசையை அவரின் மாளிகையில் இரவில் சந்தித்தார்.
- புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் புதிய அமைச்சரை நியமிக்க மத்திய உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.
புதுச்சேரி:
புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அமைச்சரவை நடக்கிறது.
என்.ஆர்.காங்கிரசுக்கு முதலமைச்சர் ரங்கசாமி உட்பட 4 அமைச்சர்களும், பா.ஜனதாவுக்கு 2 அமைச்சர்களும் உள்ளனர். இதில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.
இவர் நேற்று தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். தான் தலித் என்பதாலும், பெண் என்பதால் பாலின ரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளானதாக தொகுதி மக்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
அதோடு, தனது பணி தொகுதி மக்களுக்கு தொடரும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் மாளிகைக்கும், முதலமைச்சர் ரங்கசாமிக்கும் தனித்தனியாக அமைச்சர் சந்திர பிரியங்கா அனுப்பியுள்ளார்.
புதுவையில் 40 ஆண்டுக்கு பிறகு புதுவை சட்டமன்றத்தில் ஒரு பெண் அமைச்சராக இருந்தார்.
அதோடு கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே பெண் எம்.எல்.ஏ.வும் சந்திர பிரியங்காதான். அவரும் ராஜினாமா செய்துள்ளது பெண்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளது.
இதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதலமைச்சர் ரங்கசாமி கவர்னர் தமிழிசையை அவரின் மாளிகையில் இரவில் சந்தித்தார். சுமார் 10 நிமிடம் பேசிவிட்டு அவர் திரும்பி விட்டார்.
அப்போதே ரங்கசாமி, தனது அமைச்சரவையை மாற்றுவதற்கு கடிதம் எழுதி கொடுத்துள்ளார். இதில் சந்திர பிரியங்காவுக்கு பதிலாக காரைக்கால் வடக்கு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகனை அமைச்சராக்க பரிந்துரை செய்துள்ளார்.
புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் புதிய அமைச்சரை நியமிக்க மத்திய உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும். இதற்காக கவர்னர் தமிழிசை மத்திய உள்துறைக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அதே நேரத்தில் 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. இதனால் கவர்னர் தமிழிசை தேர்தல் நடைபெறும் தெலுங்கானா சென்றுவிட்டார். திருமுருகன் அமைச்சர் ஆவதற்கு மத்திய உள்துறையிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கவர்னர் தமிழிசை இன்று சென்னைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) மாலை திருமுருகன் அமைச்சராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.
புதுவை மாநிலம் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் என 4 பிராந்தியமாக உள்ளது. இதில் மாகி, ஏனாமில் தலா ஒரு எம்.எல்.ஏ. உள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் 5 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
இதில் என்.ஆர்.காங்கிரசுக்கு காரைக்கால் வடக்கு தொகுதியில் திருமுருகனும், நெடுங்காடு தனி தொகுதியில் சந்திரபிரியங்காவும் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். காரைக்கால் புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் காரைக்கால் பகுதியை சேர்ந்த அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். காரைக்கால் மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது.
இதனிடையே திருமுருகன் நேற்று மாலை கோரிமேடு அப்பா பைத்தியம் சாமி கோவிலுக்கு வந்திருந்தார். அப்போது முதலமைச்சர் ரங்கசாமி கோவிலில் பூஜை செய்த பிரசாதத்தை திருமுருகனுக்கு வழங்கினார்.
- இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா கடந்த 4-ந் தேதி சுதர்சன ஹோமம் திருமஞ்சனத்துடன் தொடங்கியது.
- இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்
புதுச்சேரி:
புதுவையை அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரமோற்சவ விழா நடைபெறும். அப்போது திருப்பதியில் நடப்பது போன்று சிறப்பு பூஜையும், அர்ச்சனையும் நடக்கும். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா கடந்த 4-ந் தேதி சுதர்சன ஹோமம் திருமஞ்சனத்துடன் தொடங்கியது.
விழாவில் தினமும் சாமிக்கு திருப்பதி ஏழுமலையானுக்கு நடப்பது போன்று பூஜையும், தினம் ஒரு வாகனத்தில் வீதியுலாவும் நடக்கிறது. இந்த நிலையில் 7-ம் நாளான நேற்று இரவு வரதராஜப்பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து வீதி உலாவும் நடைபெற்றது இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்
- அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார்.
- இந்திய பொறியாளர் அமைப்பின் மாநில கவுரவ செயலாளர் சீனு திருஞானம் நன்றி கூறினார்.
புதுச்சேரி:
இந்திய பொறியாளர் அமைப்பு, புதுச்சேரி மாநில மையம் மற்றும் மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லுாரி இயந்திரவியல் துறை இணைந்து அகில இந்திய அளவிலான 2 நாள் கருத்தரங்கம் நடந்தது. மேம்படுத்தப்பட்ட உலோகங்களின் தொழில் நுட்ப வளர்ச்சி, தன்மை மற்றும் பயன்பாடுகள்' என்ற தலைப்பில் கல்லூரி கருத்தரங்க கூடத்தில் நடந்தது. அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் மலர்கண் வாழ்த்தி பேசினார். இந்திய பொறியாளர் அமைப்பின் புதுச்சேரி மாநிலத் தலைவர் ராஜாராமன் வரவேற்றார். இந்திய பொறியாளர் அமைப்பு மெட்டலர்ஜிக்கல் மெட்டீரியல்ஸ் பொறியியல் பிரிவு அகில இந்திய தலைவர் புவனேஸ்வர், தலைமை விஞ்ஞானி பாக்யத்தார் போய் ஆகியோர் பசுமை இரும்பு உலோக உற்பத்தி குறித்து பேசினர்.
கருத்தரங்கில் புதுச்சேரி பல்கலை கழக இயற்பியல் துறை உதவி பேராசிரியர் முத்துக்குமார், நானோ சயின்ஸ் துறை பேராசிரியர் சுப்ரமணியா, வெங்க டேஸ்வரா பொறியியல் கல்லுாரி முதல்வர் பிரதீப் தேவநேயன், புதுச்சேரி தொழில்நுட்ப பலகலைக் கழக இயந்திரவியல் துறை பேராசிரியர் செந்தில்வேலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி முதல்வர் வெங்கடாசலபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்திய பொறியாளர் அமைப்பின் மாநில கவுரவ செயலாளர் சீனு திருஞானம் நன்றி கூறினார்.
- அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- கிராமங்களில் உள்ள 4,000 குடும்பத்தினர் பயனடைவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுச்சேரி:
மண்ணாடிப்பட்டு கொம்யூன் திருபுவனை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சன்னியாசிக்குப்பம் மற்றும் பிடாரிக்குப்பம் கிராமங்களில் தற்போது நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்காக சமுதாய நலக்கூடம் அருகில் பொதுப்பணித்துறை மூலமாக ரூ.14.60 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான பணிகளை திருபுவனை தொகுதியின் அங்காளன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்துபணியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பழனியப்பன், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், கிராமக் குடிநீர் திட்ட உதவி பொறியாளர் பீனாராணி, இளநிலை பொறியாளர் சுதர்சனம், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்
எழில்ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர் பாஸ்கர், மற்றும் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் புதியதாக அமைக்கக்கூடிய ஆழ்துளை கிணற்றின் மூலமாக சன்னியாசிக்குப்பம் மற்றும்
பிடாரிக்குப்பம் கிராமங்களில் உள்ள 4,000 குடும்பத்தினர் பயனடைவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மின் நிறுத்தம் நடைபெறுகிறது.
- உயர் மின் தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
குரும்பாபேட் துணைமின் நிலையத்தில் அளவு திருத்தப் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணியிலிருந்து பகல் 2 மணி வரை மேட்டுபாளையம் டிரக் முனையம் போக்குவரத்து நகரம், ஹரி நமோ நகர் ஒரு பகுதி, பிரியதர்ஷினி நகர், ராஜாஅண்ணாமலை நகர், சிவாஜி நகர், காமராஜ் நகர், குரு நகர், ராஜீவ் நகர், ஆதிகேசவர் நகர், கோரிமேடு காவலர் குடியிருப்பு ஒரு பகுதி, இந்திரா நகர், இஸ்ரவேல் நகர், பல் மருத்துவ கல்லூரி, மதர்தெரசா நர்சிங் கல்லுாரி, தொலைக்காட்சி நிலையம், புதுபேட் ஒரு பகுதி, ராஜாஜி நகர் ஒரு பகுதி,
லாஸ்பேட் ஒரு பகுதி, நெருப்புகுழி, நவாற்குளம், அன்னிபெசன்ட் நகர், கணபதி நகர், சின்னகண்ணு நகர், அன்னை நகர், மோதிலால் நகர், அகத்தியர் நகர், வாசன் நகர், பொதிகை நகர், குறிஞ்சி நகர் விரிவாக்கம், செவாலியர் சீனிவாசன் நகர், தில்லைகன்னு அம்மா நகர், அசோக் நகர், இலாசுபேட் அரசு ஊழியர் குடியிருப்பு, நேருவில் நகர், அவ்வை நகர் ஒரு பகுதி, சாந்தி நகர், வள்ளலார் நகர், கலைவாணி நகர், ஆனந்தா நகர், நெசவாளர் நகர், லஷ்மி நகர்,
லஷ்மிநகர் விரிவாக்கம், வரதராஜாபிள்ளை நகர், மேயர் நாராயணசாமி நகர், சப்தகிரி நகர், இடையன்சா வடிரோடு, லாஸ்பேட் கல்வி நிறுவனங்கள், மற்றும் உயர் மின் அழுத்தநுகர்வோர்கள் (பிப்மேட் அலுவலகம், ஏர்போர்ட்) மற்றும் அதனைசார்ந்தபகுதிகள் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைச்செய்யப்படுகிறது.
அதேபோல் தொண்ட மாநத்தம்-வில்லியனூர் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் பத்துக்கண்ணு, கூடப்பாக்கம், கோனேரிகுப்பம், உயர் மின் தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
- அமைச்சர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானது. அவரின் குற்றச்சாட்டுகள் அரசியல் ஜனநாயகத்திற்கு இழுக்கு.
- பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் சக பெண் அமைச்சருக்கு எதிராக எவ்வளவு கொடுமையை செய்துள்ளது என்பதை நாடு அறிகிறது.
புதுச்சேரி:
புதுவையில் 40 ஆண்டுக்கு பிறகு பெண் எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கு சாதி, பாலின தாக்குதலே காரணம் என அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அரசியல் கட்சியினர் அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் மீது ஊழல் புகார் ஏதும் இல்லை. அவர் வகித்த துறைகளுக்கு நியமிக்கப்பட்ட செயலர்கள், தலைவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என முதலமைச்சர், எம்.எல்.ஏ.க்களிடம் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். எதற்காக அமைச்சர் பதவியிலிருந்து அவர் நீக்கப்படுகிறார் என முதலமைச்சர் தெரிவிக்க வேண்டும்.
இது காரைக்காலுக்கான பிரதிநிதித்துவத்தை குறைத்துவிட்டது. பட்டியலின அமைச்சர் பதவியை வேறு யாருக்கு கொடுக்கப் போகிறார்கள்? முதலமைச்சர் பெண் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தார் என்ற பெருமை கிடைத்திருந்தது. எனவே இதை சிந்தித்து பார்த்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம்:-
அமைச்சர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானது. அவரின் குற்றச்சாட்டுகள் அரசியல் ஜனநாயகத்திற்கு இழுக்கு. தலித் பெண் என்ற காரணத்தால் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளேன். ஆதிக்க சக்திகளின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளேன். இதனால் அமைச்சராக தொடர முடியவில்லை என கூறியுள்ளது.
என்ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசுக்கு பெரும் அவமானம். 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வருகிறோம் என பிரதமர் மோடி வாய்ச் சவடால் விடுகிறார். பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் சக பெண் அமைச்சருக்கு எதிராக எவ்வளவு கொடுமையை செய்துள்ளது என்பதை நாடு அறிகிறது.
சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்ட ஒரே பெண் எம்.எல்.ஏ.வுக்கும் வழங்கி அமைச்சர் பதவியை என்ஆர். காங்கிரஸ், பா.ஜனதா அரசு அதிகார பீடத்திலிருந்து இறக்கியுள்ளது. இது பெண் சமூகத்திற்கு எதிரான ஆணாதிக்க மன நிலையை பிரதிபலிக்கிறது. அமைச்சருக்கு ஏற்பட்ட அநீதி.
இந்திய தேசிய மாதர் சம்மேளன தலைவர் தசரதா:-
ஒரு பெண் அமைச்சருக்கே இப்படிப்பட்ட நெருக்கடிகள் கொடுக்கப்படுகிறது என்றால் சாதாரண பெண்கள் நிலை என்ன? பாராளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு நிறைவேற்றப்பட்ட நேரத்தில் புதுவையில் 40 ஆண்டுக்கு பின் அமைச்சராக ஒரு பெண் இருப்பதை ஏற்க முடியாத ஆணாதிக்க அரசியல்வாதிகள் வெட்கித்தலைகுனிய வேண்டும்.
அமைச்சர் சந்திரபிரியங்காவின் ராஜினாமாவுக்கு காரணமான என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம்
- மோடியும், அமித்ஷாவும் இணைந்து நாட்டை பாழ்படுத்தி வருகின்றனர்.
- மோடியும், அமித்ஷாவும் இணைந்து நாட்டை பாழ்படுத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை இழிவுபடுத்தும் வகையில் 10 தலை ராவணனாக சித்தரித்து பா.ஜனதா சார்பில் போஸ்டர் வெளியிடப்பட்டது.
இதை கண்டித்து புதுவை மாநில காங்கிரஸ் சார்பில் இந்திராகாந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
மோடியும், அமித்ஷாவும் இணைந்து நாட்டை பாழ்படுத்தி வருகின்றனர். ராகுல்காந்தி பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டி நாடு முழுவதும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். மோடி ஆட்சியின் அவலங்களை ராகுல் மட்டுமே தட்டிக்கேட்கிறார்.
இதனால் அவரை திட்டமிட்டு தாக்குகின்றனர். பாராளுமன்ற தேர்தலில் மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என இண்டியா கூட்டணி தலைவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது தேர்தல் அறிவித்துள்ள 5 மாநிலத்தில் 4 மாநிலத்தில் காங்கிரஸ்தான் வெற்றி பெறும். புதுவையில் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
கருத்துவேறுபாடுகளை களைந்து கட்சி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். யார் வேட்பாளர் என்பது முக்கியமல்ல, காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். புதுவையில் செயல்படாத அரசுக்கு முதல்-அமைச்சராக ரங்கசாமி உள்ளார். அறிவித்த எந்த திட்டத்தை யும் நிறைவேற்றவில்லை.
பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்வது மாநில அந்தஸ்துக்காக என்றார். தற்போது மாநில அந்துஸ்து இல்லை என மத்திய அரசு கைவிரித்துவிட்டடது. இன்னும் ஏன் முதல்-அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை? ஏன் பா.ஜனதாவை கூட்டணியிலிருந்து வெளியேறவில்லை.
பா.ஜனதாவும், ரங்கசாமியும் கூட்டு கொள்ளை அடிக்கின்றனர். 2024-ல் மத்தியில் கா ங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரெய்டு வரும் என்பதால் புதுவை பா.ஜனதா அமைச்சர்கள் தங்கள் பணத்தை துபாய், மலேசியா போன்ற வெளி நாடுகளில் வைப்பதாக தகவல் வருகிறது. அதற்கான போட்டோவும் வந்துள்ளது. ரங்கசாமி ஆட்சியில் புதுவையை சுரண்டிவிட்டு சென்றுவிடுவார்கள். காங்கிரஸ் வெற்றி பெற்றால்தான் புதுவையை காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாகி எம்.எல்.ஏ. ரமேஷ்பரம்பத், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்த ராமன், கார்த்திகேயன், செயல் தலைவர் நீலகங்கா தரன், சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், பொதுச்செ யலாளர் அப்துல்ரகுமான், தனுசு, செயலாளர் சூசைராஜ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு, மகிளா காங்கிரஸ் தலைவி பஞ்சகாந்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






