என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இலவச கண் பரிசோதனை முகாம்
    X

    இலவச கண் பரிசோதனை முகாம்  நடைபெற்ற காட்சி.

    இலவச கண் பரிசோதனை முகாம்

    • டாக்டர் சுகந்தி பிரபாகர் தலைமையில் மருத்துவ குழுவினர் கண்களை பரிசோதனை செய்தனர்.
    • 200-க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்கள் கண் சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை கிராப்ட் பவுண்டேஷன் சார்பில் கை வினை கலைஞர்களுக்கான சிறப்பு இலவச கண் மருத்துவ முகாம் முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் நடத்தினர்.

    முகாமில் டாக்டர் சுகந்தி பிரபாகர் தலைமையில் மருத்துவ குழுவினர் கண்களை பரிசோதனை செய்தனர். முகாமை மாவட்ட தொழில் இயக்க மேலாளர் ஜெயராமன், கைவினை கலைஞர்கள கிராம மேலாளர் பாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். புதுவை கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஹரிபத்திரி குமரன், சரவணன், சண்முகம், ராஜமூர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை வில்லியனூர் கிராப்ட் பவுண்டேஷன் தலைவர் பத்மஸ்ரீ முனுசாமி செய்திருந்தார். முகாமில் 200-க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்கள் கண் சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றனர்.

    Next Story
    ×