என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • வில்லியனூர் அருகே மங்களம் வடக்கு வீதியைச் சேர்ந்தவர் சங்கர்
    • சுமை தூக்கும் தொழிற்சங்கம் நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே மங்களம் வடக்கு வீதியைச் சேர்ந்தவர் சங்கர். இவர் சுமை தூக்கும் தொழிற்சங்கம் நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி சுகந்தி இவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரிடம் பணம் கடனாக வாங்கி திருப்பி கொடுப்பது வழக்கம்.

    இந்நிலையில் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரதீப்புக்கும் சுகந்திக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று பைக்கில் வந்த சுகந்தியை வழிமறித்த பிரதீப் அவரிடம் பணத்தைக் கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளார்.

    இதில் சுகந்திக்கு முகம் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது. கொலைவெறி தாக்குதல் நடத்திய பிரதீப் மீது சுகந்தி மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் அடிப்படையில் மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்தியா விசாரணை நடத்தி பிரதீப் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றார்.

    • காதல் திருமணமான 3 மாதத்தில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சென்னையைச் சேர்ந்த மோனிஷா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

    புதுச்சேரி:

    காதல் திருமணமான 3 மாதத்தில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பண்ருட்டி அருகே உள்ள குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அருண். இவர் சென்னையைச் சேர்ந்த மோனிஷா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

    இருவருக்கும் திருமணம் ஆகி 3 மாதங்கள் ஆகிறது. அருண் தனது மனைவி மோனிஷாவை அழைத்துக் கொண்டு வில்லியனூரை அடுத்த வி.மணவெளி பகுதியில் உள்ள அக்கா மீனாட்சி வீட்டிற்கு வந்துள்ளார்.

    இது அருண் மனைவி மோனிஷாவிற்கு பிடிக்கவில்லை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோனிஷா சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இதில் மனம் உடைந்த அருண் அக்கா வீட்டில் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அருணின் அக்கா மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலூர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் புதுவை கடற்கரைக்கு வந்தார்.
    • மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கடற்கரையை சுற்றி பார்க்க சென்றார்.

    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி காமராஜ் சாலையை சேர்ந்தவர் சுரேஷ். சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் புதுவை கடற்கரைக்கு வந்தார். கடற்கரை சாலையில் பிரெஞ்சு தூதரக அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கடற்கரையை சுற்றி பார்க்க சென்றார்.

    பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் சுரேஷ் அதிர்ச்சியடைந்தார். யாரோ மோட்டார் சைக்கிளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.இதுகுறித்து சுரேஷ் பெரியகடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விவசாய கூட்டுறவு கடன்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தது.
    • எருமை மாட்டுக்கு மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையை ஆளும் என்.ஆர் பி.ஜே.பி கூட்டணி அரசு ஆட்சி அமைத்த போது விவசாய கூட்டுறவு கடன்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தது.

    ஆட்சி அமைந்து 2 1/2 ஆண்டு காலம் கடந்த பிறகும் இதுவரை அது குறித்த எந்த அறிவிப்பும் இல்லாததால் விவசாயிகள் மீண்டும் கடன் பெற முடியாத சூழ்நிலை உள்ளது. இதனை கண்டித்து அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு போரா ட்டங்கள் நடத்தப்பட்டது.

    கடனை தள்ளுபடி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை கண்டித்தும், விவசாய கூட்டுறவு கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க கோரியும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் எருமை மாட்டுக்கு மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காரைக்கால் கடற்கரை சாலை சிங்காரவேலர் சிலையில் இருந்து தொடங்கிய பேரணி காமராஜர் வீதி வழியாக வந்து காமராஜர் நிர்வாக வளாகத்தை வந்தடைந்தது அங்கு எருமை மாட்டுக்கு அகில இந்திய விவசாய சங்கத்தினர் மனு அளித்தனர்.

    • அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் இசை, நாட்டியம், நுண்கலை துறைகளில் இளங்கலை படிப்புகள் நடத்தப்படுகிறது.
    • இந்த ஆண்டு முதல் முதுகலை பட்டப்படிப்பை தொடங்க புதுவை பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் இசை, நாட்டியம், நுண்கலை துறைகளில் இளங்கலை படிப்புகள் நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டு முதல் முதுகலை பட்டப்படிப்பை தொடங்க புதுவை பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது. முதுகலை படிப்பில் சேர பல்கலைக்கூட அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 12-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விருப்பம் உள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கூட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • தலித், பெண் என இரு பெருமைகளோடு இருந்த எனக்கு அதுதான் மற்றவர்களின் உறுத்தல் என்பது தெரியாமல் போனது.
    • சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

    புதுச்சேரி:

    புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் முதலமைச்சர் ரங்கசாமி உட்பட 4 அமைச்சர்கள் உள்ளனர்.

    அவர்களில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த சந்திரபிரியங்கா போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார்.

    இவரிடம் போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலம், வீட்டுவசதி, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, கலைப்பண்பாடு, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகள் இருந்தன.

    இந்த நிலையில் அமைச்சர் சந்திர பிரியங்கா இன்று திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    தனது ராஜினாமா தொடர்பான அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    என்னைச் சுற்றி பின்னப்பட்டுள்ள வலையில் சிக்கியுள்ள நிலையில் நான் இக்கடிதத்தினை எழுதுகிறேன். ஒரு சட்டப்பேரவை உறுப்பினராக மாநில அமைச்சராக என் பணியினை மனத் திருப்தியுடனும் மக்களின் ஆதரவுடனும் இந்த நிமிடம்வரை ஓயாமல் செய்து வருகிறேன்.

    தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்தும் பெண்களும் அரசியலுக்கு வந்தால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என பொதுவாக கூறுவார்கள்.

    ஆனால் கடின உழைப்பும், மன தைரியமும் இருந்தால் இதைப்பற்றி கவலைப்படாமல் களத்தில் நீந்தலாம் என்பதற்கான பல முன்னுதாரணங்கள் வரலாற்றில் உள்ளதை பார்த்து களமிறங்கி கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி மக்களுக்காக இரவு பகலென ஓடி ஓடி உழைத்து வருகிறேன்.

    மக்கள் செல்வாக்கு மூலம் மன்றம் நுழைந்தாலும் சூழ்ச்சி அரசியலிலும், பணம் என்ற பெரிய பூதத்தின் முன்னும் போராடுவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்து கொண்டேன்.

    தலித், பெண் என இரு பெருமைகளோடு இருந்த எனக்கு அதுதான் மற்றவர்களின் உறுத்தல் என்பது தெரியாமல் போனது. தொடர்ந்து சாதிய ரீதியிலும் பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்ந்தேன்.

    சொந்தப் பிரச்சினைகளை ஆணாதிக்க கும்பல் கையில் எடுத்து காய் நகர்த்துதல் நாகரிகமல்ல. ஆனால் தொடர்ந்து குறிவைக்கப்பட்டேன். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள இயலாதல்லவா?

    கண்மூடித்தனமாக அமைச்சராக என் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்பவர்களுக்கு நான் அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் என் துறைகளில் என்னென்ன மாற்றங்கள், முன்னேற்றங்கள் சீர்பாடுகள் செய்துள்ளேன் என்பதை விரைவில் பட்டியலாக சமர்ப்பிக்கிறேன் என உறுதியளிக்கிறேன்.

    சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்க இயலாது என்பதை உணர்ந்து எனது அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன்.

    இதற்காக எனது தொகுதி மக்களிடம் நான் மனமார்ந்த மன்னிப்பினை கேட்டுக்கொள்கிறேன். மேலும் என் மக்களுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினராக என் பணியினை தொடர்ந்து ஆற்றுவேன் என உறுதி அளிக்கிறேன்.

    எனக்கு இப்பதவியினைக் கொடுத்த முதலமைச்சருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவருக்கு எனது ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன் வைக்கிறேன்.

    புதுச்சேரியில் பெரும்பான்மையாக உள்ள இரு சமூகங்கள் வன்னியர் மற்றும் தலித். இச்சமூகங்களில் இருந்து வந்துள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் தம் மக்களுக்காக அயராது பாடுபட்டு வருகிறார்கள்.

    அச்சமூகங்கள் மேலும் மேம்பட காழ்ப்புணர்ச்சியில்லாத அரசியலை உறுதி செய்ய காலியாகும் இந்த அமைச்சர் பதவியை வன்னியர், தலித் அல்லது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு அளித்து நியாயம் செய்ய வேண்டும்.

    மக்கள் பின்புலம் இல்லாவிட்டாலும் பணத் திமிரினாலும் அதிகார மட்டத்தில் உள்ள செல்வாக்கினாலும் பதவிக்கு வந்துவிட துடிப்பவர்களுக்கு இப்பதவியினை கொடுத்து பெரும்பான்மையாக உள்ள வன்னியர், தலித் மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம்.

    எனக்கு வாக்களித்து என்னை சட்டமன்ற உறுப்பினராக்கிய அரசுக்கு முழு ஆதரவு அளித்துவரும் என் மக்களுக்கு எவ்வித இடைஞ்சலும் அளிக்காமல் தாழ்த்தப்பட்ட தொகுதியான எனது நெடுங்காடு தொகுதிக்கு மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டுகிறேன்.

    இதுநாள் வரையில் அமைச்சர் பணியினை திறம்பட செய்வதற்கு உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும், எனக்கு உறுதுணையாக இருக்கும் எனது தொகுதி மக்களுக்கும், என் நலன் விரும்பிகளுக்கும் குறிப்பாக என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து அம்மாக்கள், சகோதரிகள், தோழிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை இரு கரம் கூப்பி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இறுதியாக, பெண்களுக்கான முன்னுரிமை, அதிகாரத்தில் பங்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு என மேடைகளில் மட்டுமே முழங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்ளவும் விரும்புகிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    அமைச்சர் சந்திர பிரியங்கா கடந்த 6 மாத காலமாக தனது துறைகளில் செயல்படவில்லை என்று குற்றச்சாட்டு இருந்தது. இது தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமியிடம் புகார்களும் சென்றது. அவர் சந்திர பிரியங்காவை அழைத்து அறிவுரையும் கூறினார்.

    ஆனால், அவரது நடவடிக்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இதனிடையே நேற்று முன்தினம் முதலமைச்சர் ரங்கசாமி கவர்னர் தமிழிசையை ராஜ்நிவாஸில் சந்தித்தார். அப்போது கவர்னர் தமிழிசையிடம், அமைச்சர் சந்திர பிரியங்கா செயல்பாடு பற்றி அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

    அவரை நீக்கவும் திட்டமிட்டதாகவும் தெரிகிறது. இதனால், பதவியை பறிக்கும் முன்பு, அமைச்சர் சந்திர பிரியங்கா முன்கூட்டியே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    • மாணவ- மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி கிழக்கு கடற்கரை சாலை கனகசெட்டிகுளம் முதல் காலாப்பட்டு வரை நடைபெற்றது.
    • கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி தலைமை வகித்தார்.

    புதுச்சேரி

    பிம்ஸ் மருத்துவமனையில் உலக மன நல வாரத்தை முன்னிட்டு மாணவ- மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி கிழக்கு கடற்கரை சாலை கனகசெட்டிகுளம் முதல் காலாப்பட்டு வரை நடைபெற்றது.

    முன்னதாக பிம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி தலைமை வகித்தார்.

    மனநல மருத்துவ துறை தலைவர் டாக்டர் பிரதீப் திலகன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக டாக்டர் வித்யா ராம்குமார் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

    விழிப்புணர்வு பேரணியில் செவிலியர் கல்லூரி மற்றும் மருத்துவம் சார்ந்த பாராமெடிக்கல் கல்லூரியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பீட்டர் மனோகரன்,மனநல மருத்துவர் சூசன்சாலமன் செவிலியர் கல்லூரி முதல்வர் மோனி உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர் கல்லூரி துணை பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதற்க்கான ஏற்பாடுகளை மனநல மருத்துவதுறை சமூக சேவகர் மெல்பின் செய்திருந்தார்.

    • முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் சுந்தர நாட்டிய கேந்திர பரதநாட்டியம் மாணவர்களின் சலங்கை பூஜை விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் சுந்தர நாட்டிய கேந்திர பரதநாட்டியம் மாணவர்களின் சலங்கை பூஜை விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தின் தலைவரும் உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான நேரு கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    சிறப்பு விருந்தினர்களாக பாரதியார் பல்கலைக் கூட நடன துறையின் தலைவர் முனைவர் லூர்தஸ் சாந்தி மற்றும் பாரதியார் பல்கலைக்கூட நடனத்துறை யின் உதவிப் பேராசிரியர் விசித்ரா பலிக்காண்டி மற்றும் பாரதியார் பல்கலைக் கூட நடனத்துறை யின் உதவிப் பேராசிரியர் சண்முகசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு பரதநாட்டிய மாணவர்களின் சலங்கை பூஜை கலை நிகழ்ச்சியை கண்டுகளித்து மாணவிகளுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்கள்.

    புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் வாழ்த்துரை வழங்கினார். பாடகர் வேல்முருகன், மிருதங்கம் வசந்த ராஜா, வயலின் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுந்தர நாட்டிய கேந்திரா குரு சுந்தரமூர்த்தி செய்திருந்தார்.

    சலங்கை பூஜை விழாவில் சுமார் 400-க்கு மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

    • புதுவை மாநில ஒருங்கிணைந்த கராத்தே சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.
    • 3 பிரிவுகளாக டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில ஒருங்கிணைந்த கராத்தே சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு பொதுச் செயலாளர் வளவன் தலைமை தாங்கினார். தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிர்வாகிகள் மூர்த்தி, வாசு, சுந்தர்ராஜன், திருநாவுக்கரசு, பாலச்சந்தர், செந்தில்வேல், அசோக், மதிஒளி, செல்வம், சுரேஷ்,சுரேஷ், ராமதாஸ், வெங்கடாஜலபதி, அழகப்பன், பழனிவேல், பாலமுரளி, குமரன், இளையராஜா, ஹரி, ஜெயக்குமார், எழிலரசன், குமார், ஆளவந்தார் உள்ளிட்டவர்களும், மூத்த பயிற்சியாளர்களும் , கராத்தே நடுவர்களும் பங்கு பெற்றனர்.

    கூட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான எஸ்.ஜி.எப்.ஐ. போட்டிகள் 14 வயதுக்கு குறைவான 17 வயதுக்கு குறைவான மற்றும் 19 வயதுக்கு குறைவான என 3 பிரிவுகளாக டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற உள்ளது.

    அந்தப் போட்டிக்கான கராத்தே வீரர்கள், வீராங்கனைகள் தேர்வுகள் நாளை உப்பளம் ராஜீவ் காந்தி உள் விளையாட்டு அரங்கத்தில் பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்பட உள்ளது.

    அந்த வீரர்கள் வீராங்கனைகள் தேர்வை சிறப்பாக நடத்தி முடிக்க கராத்த வீரரும், உடற்கல்வி ஆசிரியருமான செல்வகுமாருடன் இணைந்து உதவுவது, இந்த மாத இறுதியில் மாநில அளவிலான கராத்தே போட்டியை நடத்துவது மற்றும் நடுவர்கள் பயிற்சி முகாம் நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் சங்கத் துணைத் தலைவர் ராஜ் நன்றி கூறினார்.

    • ஆன்லைன் வியாபாரம் மூலம் முதலீடு செய்த பணத்திற்கு மாதந்தோறும் 20 முதல் 30 சதவீதம் வரை வட்டி அல்லது லாபம் வழங்கப்படும்.
    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே போல் குழு தொடங்கப்பட்டு ரூ.2 கோடி மோசடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி குரும்பாபேட் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் வாட்ஸ்-அப் செயலிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு குறுஞ்செய்தி வந்தது.

    அதில் குழுவாக சேர்ந்து முதலீடு செய்தால் ஆன்லைன் வியாபாரம் மூலம் முதலீடு செய்த பணத்திற்கு மாதந்தோறும் 20 முதல் 30 சதவீதம் வரை வட்டி அல்லது லாபம் வழங்கப்படும்.

    மேலும் புதிய நபர்களை சேர்த்தால் அவர்களுக்கு ரூ.500 போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதனை நம்பி குரும்பாபேட் பகுதியை சேர்ந்த 20 பேர் அந்த குழுவில் சேர்ந்தனர். அந்த குழுவில் பலர் நிர்வாகிகளாக இருந்தனர். அவர்கள் அடிக்கடி ஆன்லைன் மூலம் கூட்டம் நடத்தி, தொழில் தொடர்பாக ஆலோசித்து வந்தனர்.

    இதனை நம்பிய 20 பேரும் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். அவர்களுக்கு முதல் மாதம் முடிவடைந்த உடன் முதலீடு செய்த பணத்தில் 30 சதவீதம் வரை வட்டி வழங்கப்பட்டது.

    புதிய உறுப்பினர்களை ஆன்லைன் வியாபாரத்தில் சேர்த்து விட்டால் அவர்களுக்கு போனஸ் தொகை ரூ.500-ம் வழங்கப்பட்டது.

    இதனை நம்பிய அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் வாட்ஸ்-அப் குழுவில் இணைந்தனர்.

    அவர்கள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 லட்சம் வரை ஆன்லைன் மூலம் முதலீடு செய்தனர். இவ்வாறு மொத்தம் 38 பெண்கள் ரூ.42 லட்சம் வரை பணம் செலுத்தியுள்ளனர்.

    இந்தநிலையில் ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் அந்த வாட்ஸ்-அப் குழு திடீரென கலைக்கப்பட்டது.

    உடனே அவர்கள் அந்த வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி அதில் நிர்வாகிகளாக இருந்தவர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை.

    இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த குரும்பாபேட் பகுதியை சேர்ந்த லட்சுமி புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து 38 பெண்களிடம் ரூ.42 லட்சம் கைவரிசை காட்டிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே போல் குழு தொடங்கப்பட்டு ரூ.2 கோடி மோசடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • மத்திய மந்திரி புருசோத்தம் ரூபலா பாராட்டு
    • அரவிந்தர் வாழ்ந்த பூமிக்கு வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் மத்திய அரசு திட்டம் 100 சதவீதம் செயல்படுத்தப்படுகிறது என்று மத்திய மந்திரி புருஷோத்தம் ரூபலா கூறினார்.

    புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் சாகர் பரிக்ரமா 9-வது பயணத்திட்டம், மீன வர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி, நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் கடன் அட்டை வழங்கும் விழா நடந்தது.

     விழாவுக்கு முதல்-அமைச் சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். விழாவில் மத்திய மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை மந்திரி புருஷோத்தம் ரூபலா, கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன், இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மீனவர்களுக்கான உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு கடன் அட்டைகளையும் வழங்கினர். இதைத் தொடர்ந்து மீனவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடந்தது.

    விழாவில் மத்திய மந்திரி புருஷோத்தம் ரூபலா பேசியதாவது:-

    அரவிந்தர் வாழ்ந்த பூமிக்கு வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் பிரதமர் மோடி மீன்வளத்திற்கு தனியாக அமைச்சகத்தை உருவாக்கி அதிக நிதியையும் ஒதுக்கி, திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதையும் கண்காணிக்கவும் அறிவுறுத்த யுள்ளார்.

    அதன்படி சாகர் பரிக்ரமா திட்டத்தின் கீழ் மீனவர்கள் குறைகளைக் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய இந்த பயணம் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. புதுச்சேரிக்கு வந்து உங்களை (மீனவர்களை) பார்த்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. யூனியன் பிரதேசங்களில் மத்திய அரசின் திட்டங்களை 100 சதவீதம் செயல்படுத்தவேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

    இதற்காக யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மத்திய அரசு முனைப்புடன் பணியாற்றி வருகிறது. அதன்படி யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மத்திய அரசின் திட்டங்களை அரசுடன் இணைந்து 100 சதவீதம் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராய ணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ. சரவணன் குமார், புதுவை மாநில பா.ஜ.க. தலைவர் செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிகாந்தன், செந்தில்குமார் மற்றும் மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில், இணை இயக்குனர் தெய்வசிகாமணி உள்பட பலர் கலந்து கொண் டனர்.

    முன்னதாக மத்திய மந்திரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசின் சாகர் பரிக்ரமா கடல் பயண திட்டம் 8 ஆயிரம் கி.மீ. நடத்தப்படுகிறது. கிழக்கு, மேற்கு கடற்கரையோர மீனவ மக்களை சந்தித்து, மத்திய அரசு திட்டங்கள் விளக்கப்படு கிறது. மீனவ மக்களிடையே கடல் சுற்றுச்சூழல், பாதுகாப்பு விழிப்புணர்வும் ஏற்படுத்துகிறோம். மத்திய அரசின் மீன்வளத்துறையின் அனைத்து திட்டங்களையும் புதுவை அரசு முழு ஆதரவு அளித்து செயல்படுத்துகிறது. புதுவை முதல்-அமைச்சர் மத்திய அரசு திட்டங்களுக்கு முழு ஆதரவு அளிப்பது பாராட்டுக்குரியது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பொதுப்பணித்துறை மூலம் வடிகால்கள் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
    • தலைமை பொறியாளர் பழனியப்பன், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், செயற்பொறியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித்துறை அமை ச்சர் லட்சுமிநாராயணன் இன்று காலை ஆலோச னைக்கூட்டம் நடத்தினர்.

    வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், மக்களுக்கு ஏற்படும் இடர்களை களைவது குறித்து ஆலோ சிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை மூலம் வடிகால்கள் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

    வெள்ள நீரை வெளியேற்ற மோட்டார், பொக்லைன் எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தி னார். அதிகாரிகள் அனைவரும் 24மணி நேரமும் பணியில் இருந்து வெள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை செயலர் மணிகண்டன், 

    ×