என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கராத்தே சங்க பொது குழுக்கூட்டம்
    X

    கராத்தே சங்க பொது குழுக்கூட்டம் நடைபெற்ற காட்சி.

    கராத்தே சங்க பொது குழுக்கூட்டம்

    • புதுவை மாநில ஒருங்கிணைந்த கராத்தே சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.
    • 3 பிரிவுகளாக டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில ஒருங்கிணைந்த கராத்தே சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு பொதுச் செயலாளர் வளவன் தலைமை தாங்கினார். தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிர்வாகிகள் மூர்த்தி, வாசு, சுந்தர்ராஜன், திருநாவுக்கரசு, பாலச்சந்தர், செந்தில்வேல், அசோக், மதிஒளி, செல்வம், சுரேஷ்,சுரேஷ், ராமதாஸ், வெங்கடாஜலபதி, அழகப்பன், பழனிவேல், பாலமுரளி, குமரன், இளையராஜா, ஹரி, ஜெயக்குமார், எழிலரசன், குமார், ஆளவந்தார் உள்ளிட்டவர்களும், மூத்த பயிற்சியாளர்களும் , கராத்தே நடுவர்களும் பங்கு பெற்றனர்.

    கூட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான எஸ்.ஜி.எப்.ஐ. போட்டிகள் 14 வயதுக்கு குறைவான 17 வயதுக்கு குறைவான மற்றும் 19 வயதுக்கு குறைவான என 3 பிரிவுகளாக டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற உள்ளது.

    அந்தப் போட்டிக்கான கராத்தே வீரர்கள், வீராங்கனைகள் தேர்வுகள் நாளை உப்பளம் ராஜீவ் காந்தி உள் விளையாட்டு அரங்கத்தில் பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்பட உள்ளது.

    அந்த வீரர்கள் வீராங்கனைகள் தேர்வை சிறப்பாக நடத்தி முடிக்க கராத்த வீரரும், உடற்கல்வி ஆசிரியருமான செல்வகுமாருடன் இணைந்து உதவுவது, இந்த மாத இறுதியில் மாநில அளவிலான கராத்தே போட்டியை நடத்துவது மற்றும் நடுவர்கள் பயிற்சி முகாம் நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் சங்கத் துணைத் தலைவர் ராஜ் நன்றி கூறினார்.

    Next Story
    ×