என் மலர்
புதுச்சேரி

சலங்கை பூஜை விழாவில் பங்கேற்ற மாணவிகளை நேரு எம்.எல்.ஏ. பாராட்டியகாட்சி. அருகில் கராத்தே சுந்தர்ராஜன் உள்ளார்.
முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் சலங்கை பூஜை விழா
- முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் சுந்தர நாட்டிய கேந்திர பரதநாட்டியம் மாணவர்களின் சலங்கை பூஜை விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் சுந்தர நாட்டிய கேந்திர பரதநாட்டியம் மாணவர்களின் சலங்கை பூஜை விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தின் தலைவரும் உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான நேரு கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக பாரதியார் பல்கலைக் கூட நடன துறையின் தலைவர் முனைவர் லூர்தஸ் சாந்தி மற்றும் பாரதியார் பல்கலைக்கூட நடனத்துறை யின் உதவிப் பேராசிரியர் விசித்ரா பலிக்காண்டி மற்றும் பாரதியார் பல்கலைக் கூட நடனத்துறை யின் உதவிப் பேராசிரியர் சண்முகசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு பரதநாட்டிய மாணவர்களின் சலங்கை பூஜை கலை நிகழ்ச்சியை கண்டுகளித்து மாணவிகளுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்கள்.
புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் வாழ்த்துரை வழங்கினார். பாடகர் வேல்முருகன், மிருதங்கம் வசந்த ராஜா, வயலின் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுந்தர நாட்டிய கேந்திரா குரு சுந்தரமூர்த்தி செய்திருந்தார்.
சலங்கை பூஜை விழாவில் சுமார் 400-க்கு மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.






