என் மலர்
நீங்கள் தேடியது "asking for a loan"
- வில்லியனூர் அருகே மங்களம் வடக்கு வீதியைச் சேர்ந்தவர் சங்கர்
- சுமை தூக்கும் தொழிற்சங்கம் நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே மங்களம் வடக்கு வீதியைச் சேர்ந்தவர் சங்கர். இவர் சுமை தூக்கும் தொழிற்சங்கம் நடத்தி வருகிறார்.
இவரது மனைவி சுகந்தி இவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரிடம் பணம் கடனாக வாங்கி திருப்பி கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரதீப்புக்கும் சுகந்திக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று பைக்கில் வந்த சுகந்தியை வழிமறித்த பிரதீப் அவரிடம் பணத்தைக் கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் சுகந்திக்கு முகம் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது. கொலைவெறி தாக்குதல் நடத்திய பிரதீப் மீது சுகந்தி மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்தியா விசாரணை நடத்தி பிரதீப் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றார்.






