என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • அன்பழகன் குற்றச்சாட்டு
    • மாநில அந்தஸ்தை மத்திய பா.ஜனதா அரசு வழங்காது என முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கும் தெரியும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலஅ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்க ளிடம் கூறிய தாவது:-

    புதுவைக்கு மாநில அந்தஸ்து பெரும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் நாடகம் நடத்துகிறது.

    மத்தியில் காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுக்கும் மேலாக ஆட்சியில் இருந்தபோது புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கவில்லை.

    பிரதமருக்கு நெருக்க மான இணை மந்திரியாக பதவியில் இருந்த நாராயண சாமி நினைத்திருந்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றிருக்கலாம். மத்தியிலும், மாநிலத்திலும் 10 ஆண்டாக ஆட்சியில் இருந்த காங்கிரசும், தி.மு.க. வும் நினைத்திருந்தால் எப்போதோ மாநில அந்தஸ்து பெற்றிருக்கலாம்.

    ஆனால் இதை செய்யமால், இண்டியா கூட்டணி கட்சிகள் தற்போது கபடநாடகம் ஆடுகின்றன.

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய பா.ஜனதா அரசு வழங்காது என முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கும் தெரியும். இப்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மீண்டும் தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டு மத்திய அரசை அனுகுவோம் என்கிறார். சபாநாயகர் இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறார்.

    புதுச்சேரி மாநில பா.ஜனதாவின் நிலைபாடு என்ன? என தெளிவாக கூற வேண்டும். மாநில அந்தஸ்துக்கு தேவையான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்னெடுத்து செல்ல வேண்டும்.

    அனைத்து க்கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும். காவிரி நீரை பெறவும் முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கேடு நினைப்பவர் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி.

    தமிழகத்தில் கடந்த மாதம் அ.தி.மு.க. பொதுக்குழுவில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றி னோம். வேறு எந்த கட்சிகளும் இதுபோன்று நிறைவேற்றியது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது சுத்துக்கேணி பாஸ்கரன், மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி பேச்சு
    • நீங்கள் இங்கு வந்து செல்வது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் எண்ணம் நிறைவேற வேண்டும்.

    புதுச்சேரி:

    சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு தேச ஒற்றுமை, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கற்பித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தம் வகையில்

    சி.ஆர்.பி.எப். படை வீராங்க ணைகள் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்துகின்றனர்.

    50 வீராங்கணைகள் பங்கேற்றுள்ள இந்த பேரணி கடந்த 5-ந் தேதி கன்னியா குமரியில் தொடங்கியது. வருகிற 30-ந் தேதி குஜராத்தில் பேரணி நிறை வடைகிறது.

    இந்த பேரணி நேற்று இரவு புதுவைக்கு வந்தது. புதுவை மாநில எல்லையான கன்னியக்கோவிலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று காலை இந்த குழுவினர் புதுவையிலிருந்து தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.

     இவர்களுக்கு வழியனுப்பும் விழா இன்று காலை கோரிமேடு காவலர் பயிற்சி மைதானத்தில் நடந்தது. ஏ.டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ் தலைமை தாங்கினார். டி.ஐ.ஜி. பிரிஜேந்திரகுமார், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கள் நாரா.சைதன்யா, அனிதாராய் முன்னிலை வகித்த னர். முதல்- அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர், வீராங்க ணைகளுக்கு வாழ்த்து தெரிவித்து, கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தனர்.

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    தேச ஒற்றுமைக்காக இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளீர்கள். பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த பயணம் அமைந்துள்ளது. இல்லாவிட்டால் பெண்கள் மட்டும் கன்னியாகுமரியில் இருந்து குஜராத் வரை செல்வது என்பது முடியாத காரியம்.

    தேச பற்றை மக்களிடம் உருவாக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு செல்லும் உங்கள் பயணம் வெற்றி பெறட்டும்.

    இளைஞர்களிடம் தற்போதுள்ள தீய பழக்கத்தை போக்கும் நிலையை உருவாக்கும் வாய்ப்பு இப்பயணத்துக்கு உண்டு.

    சிறந்த எண்ணத்தோடு இப்பயணம் மேற்கொண்டி ருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. புதுவை சிறிய மாநிலமாக இருந்தாலும் வருகின்றவர்களை வரவேற்கும் மாநிலம்.

    சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட மிகப்பெரும் தலை வர்கள் இங்கு வாழ்ந்துள்ள னர். புதுவை மாநிலம் ஒரு ஆன்மீக பூமி, எங்கள் மாநிலம் உங்களை வரவேற்று கவுரவித்துள்ளது.

    நீங்கள் இங்கு வந்து செல்வது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் எண்ணம் நிறைவேற வேண்டும்.

    நாட்டின் ஒற்றுமை வலுப்படுத்தப்பட வேண்டும். இது மிக முக்கிய மான ஒன்று. இன்று உலகளவில் நம் நாடு சிறந்து விளங்குகிறது என்றால் நாட்டின் ஒற்றுமைதான் காரணம்.

    தேசிய ஒற்றுமை என்ற வகையில் இந்த பயணம் அமைந்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் தேசிய பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. அருள்குமார். போலீஸ் சூப்பிரண்டுகள் மாறன், பக்தவச்சலம், செல்வம், நல்லாம்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர். குஜராத் புறப்பட்ட தேசிய பாதுகாப்பு படை வீராங்கணைகளின் பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவிகளுக்காக 170 பேர் கொண்ட அதிகாரிகள், வீரர்களும் உடன் சென்றனர்.

    • 40 பேர் கைது
    • குருவிநத்தம் பெண்கள் கிளை செயலா ளர் வளர்மதி உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பாகூர் கொம்யூன் சார்பில் பாகூர் மின் இளநிலை பொறியாளர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு கட்சியின் கொம்யூன் செய லாளர் சரவணன் தலைமை தாங்கினார், பாகூர் கமிட்டி உறுப்பினர் அரிதாஸ், வடிவேலு ஆகியோர் முன்னி லை வகித்தனர், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், தமிழ்ச்செல்வன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    போராட்டத்தில் பாகூர் கமிட்டி உறுப்பினர் கலைச்செல்வன், கிளை செயலாளர் முருகையன், சோரியங்குப்பம் கிளை செயலாளர் வெங்கடாசலம், பூங்காவனம், குருவிநத்தம் பெண்கள் கிளை செயலா ளர் வளர்மதி உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    மின்துறை தனியார்மயம், ப்ரீபெய்டு மீட்டர், ஸ்மார்ட் மீட்டர்திட்டத்தை கைவிட்டு, அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் மின் கட்டணத்தை பாதியாக குறைக்க கோரி இந்த போராட்டம் நடந்தது. இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 40 பேர் கைது செய்யப்பட்ட னர்.

    • கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • மாநில சட்டமன்றத்தால் நிறைவேற் றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பி இருக்கிறது

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி

    எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

     புதுச்சேரி மாநிலம் முன் எப்போதும் இல்லாத வகையில் பல நெருக்கடி களை சந்தித்து வருகிறது. மாநிலத்தில் நிலவுகின்ற பல்வேறு முக்கியமான பிரச்சினைகளை உடனுக் குடன் தீர்ப்பதற்கு நமக்கு நிதி அதிகாரமும், நிர்வாக அதிகாரமும் இல்லை. இதனை உணர்ந்துதான் மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி நமது மாநிலத்திற்கு முழு அதி காரம் வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசினை வலியுறுத்தி வந்தார்.

    இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத் தொட ரின்போது சட்டசபையில் அனைத்து கட்சி ஆதரவுடன் 14-வது முறையாக மாநில அந்தஸ்து தீர்மானம் ஒரு மனதாக நிறை வேற்ற ப்பட்டது.

    அந்தத் தீர்மானத்தை கவர்னர் காலம் கடந்து அனுப்பி வைத்தார். இந்த நிலையில் மாநில சட்டமன்றத்தால் நிறைவேற் றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பி இருக்கிறது. இது புதுச்சேரி மாநில மக்களை அவமா னப்படுத்தும் வித மாக உள்ளது.

    புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வேண்டுமென்று கடந்த 1996-2000-ம் ஆண்டில் அமைந்த தி.மு.க. கூட்டணி ஆட்சியில் முதல்வராக இருந்த ஜானகிராமன் அப்போதைய ஒன்றிய உள்துறை அமைச்சர்கள் இந்திரஜித் குப்தா மற்றும் எல்.கே. அத்வானி உள்ளிட்ட அமைச்சர்களை அனைத்துக் கட்சி பிரதி நிதிகளோடு சந்தித்து, புது வைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இதைப்போல் உடன டியாக முதல்-அமைச்சர் ரங்கசாமி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அது மட்டு மல்லாமல் உடனடியாக சட்டமன்றத்தில் சிறப்பு கூட்டத்தை கூட்டி, புதுச் சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வேண்டுமென்று சிறப்பு தீர்மானத்தை நிறை வேற்ற வேண்டும். அந்த தீர்மானத்தோடு பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி ஆகியோரை சந்தித்து முறையிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர் அறிக்கை
    • அ.தி.மு.க. வெளியேறி விட்டதால் சிறுபான்மையின இனத்தவர்களும், ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    அ.தி.மு.க. இளைஞர்-இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் தமிழ் என்ற தமிழ்வேந்தன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    புதுச்சேரியில் கிழக்கு - மேற்கு என இரு பிரிவாக செயல்பட்டு வந்த அ.தி.மு.க. ஒருங்கி ணைக்கப்பட்டு புதுச்சேரி மாநில செயலாளராக அன்பழகன் நியமிக்கப்பட் டுள்ளார். இதனால் இரு பிரிவாக செயல்பட்டு வந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஒரே தலைமையின் கீழ் பணியாற்ற தொடங்கி உள்ளனர்.

    மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறி விட்டதால் சிறுபான்மையின இனத்தவர்களும், ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன் தலைவர்கள் தற்போது அ.தி.மு.க. பக்கம் வர தொடங்கி விட்டனர். இதனால் அ.தி.மு.க. பலம் வாய்ந்த சக்தியாக மாறியுள்ளது.

    மேலும் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பிறந்தநாள் நாளை(10-ந்தேதி)கொண்டாடப்பட உள்ளது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் தொண்டர்கள் இந்தாண்டு அவரது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாட தொடங்கி விட்டனர்.

    மாநில செயலாளரின் வேண்டுகோளை ஏற்று பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பேனர்கள், பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதுவும் தொண்டர்களி டையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • துறை அலுவலர்களுக்கு அரசு உத்தரவு
    • அரசியல் கட்சியினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் போலி பத்திரம் மூலம் நிலங்கள் அபகரிப்பு தொடர்கிறது.

    அரசுக்கு சொந்தமான இடங்கள், கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது என பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது.

    அரசியல் கட்சியினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் புதுவை அரசின் அனைத்து துறை அலுவலர்களுக்கும், தலைமை செயலரின் சிறப்பு பணி அலுவலர் பங்கஜ்குமார் ஜா ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    அனைத்து துறை தலைவர்களும் தங்கள் துறையின் கீழ் உள்ள அனைத்து அரசு நிலங்களின் இருப்பு விபரங்கள், ஆக்கிரமிப்பு இருந்தால் அதன் விபரங்களை அளிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை, தற்போதைய நிலை ஆகியவற்றை திட்டம், ஆராய்ச்சித்துறை பரிந்துரைத்த விண்ணப் பத்தில் சமர்பிக்க வேண்டும். தேவையான விபரங்களை வரும் 13 தேதிக்குள் திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறையில் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முத்தியால்பேட்டை அ.தி.மு.க. தீர்மானம்
    • மத்திய அரசு புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியாது என உறுதியாக தெரிவித்துவிட்டது.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை தொகுதி அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் இன்று தொகுதி அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

    அதிமுக மாநில துணை செயலாளர்வையாபுரி மணிகண்டன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அ.தி.மு.க. ஆண்டு விழாவை கொண்டாடுவது குறித்தும், பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமனம் செய்வது குறித்தும் ஆலோசனை நடந்தது.

    கூட்டத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் மாநில அந்தஸ்து வழங்காத கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன், மாநில அந்தஸ்து கிடைக்கா விட்டால் சட்டமன்ற தேர்தலையே புறக் கணிப்பேன் என முதல்- அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

    ஆனால், தற்போது மத்திய அரசு புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியாது என உறுதியாக தெரிவித்துவிட்டது.

    எனவே மாநில அந்தஸ்தை மறுத்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்.உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை

    வேற்றப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில் மாநில இணை செயலாளர் காசிநாதன், தொகுதி செயலாளர் பழனிசாமி, மாநில இளைஞரணி செயலாளர் விக்னேஷ் காசிநாதன், கட்சியின் மூத்த நிர்வாகி வில்லியனூர் மணி, கஜேந்திரன், உழவர்கரை நகர செயலாளர் பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர் செல்வம், மோகன்,





    • செந்தில்குமார் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்
    • பரிக்கல்பட்டு தாங்கள் வாய்க்காலை தூர்வாரி சுத்தப்படுத்திட ரூ.6.62 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பொதுப் பணித்துறை நீர் பாசன கோட்டம் சார்பில் குருவிநத்தம் சித்தேரி 2-ம் நிலை பாசன வாய்க்கால், மேல் பரிக்கல்பட்டு ஏரி வாய்க்கால், ஆராய்ச்சிக்குப்பம் ஏரி வாய்க்கால், சடக்குளம் தாங்கள் வாய்க்கால், உச்சிமேடு தாங்கள், பரிக்கல்பட்டு தாங்கள் வாய்க்காலை தூர்வாரி சுத்தப்படுத்திட ரூ.6.62 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் குருவிநத்தம் சித்தேரி முதல் மணப்பட்டு ஏரி வரை உள்ள வாய்க்காலை ரூ. 5.98 லட்சம் செலவிலும், பாகூர் ஏரியிலிருந்து செல்லும் குடியிருப்பு பாளையம் மதுரை வாய்க்கால் சேரி மதுக்கு வாய்க்கால் காட்டுக்குப்பம் ஏரி வரத்து வாய்க்காலை தூர்வாரி சுத்தப்படுத்த ரூ.4.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

    இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு பூமி பூஜை செய்து வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட உதவிப் பொறியாளர் ராஜன், இளநிலை பொறியாளர்கள் ஜெயராமணன், நடராஜன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தலைவர் மஞ்சினி, திமுக பிரமுகர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்து கொண்டிருந்தனர்.
    • கடலூர் பகுதியை சேர்ந்த ராஜா(40) என்பவரை பாகூர் போலீசாரும் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் போலீசார் நேற்று மாலை டி.என்.பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மைதானத்தில் 2 வாலிபர்கள் நின்று கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த நிதீஷ்(19) மற்றும் வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்த ஸ்ரீநாத்(25) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

    இதுபோல் புதுவை 100 ரோட்டில் தனியார் மதுபான கடை அருகே குடித்து விட்டு ரகளை செய்த வில்லியனூர் கோபாலன் கடை அம்மா நகரை சேர்ந்த அலெக்ஸ்(43), சாரம் பாலாஜி நகரை சேர்ந்த விஜயகுமார்(44) ஆகிய 2 பேரையும் உருளையன்பேட்டை போலீசாரும், கன்னியகோவில் பகுதியில் பொது இடத்தில் ரகளை செய்த கடலூர் சொத்திக்குப்பத்தை சேர்ந்த ஆகாஷ்(22) என்பவரை கிருமாம்பாக்கம் போலீசார், பாகூர் கொமந்தான்மேடு பகுதியில் ரகளை செய்த கடலூர் பகுதியை சேர்ந்த ராஜா(40) என்பவரை பாகூர் போலீசாரும் கைது செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 5 ஆண்டும் மாநில அந்தஸ்து பெறுவோம் என கூறியே முதல்- அமைச்சர் தனது ஆட்சியை நடத்துவார்.
    • மாநில அந்தஸ்து என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி ரங்கசாமி ஆட்சி நடத்துகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவோம் என என்.ஆர்.காங்கிரஸ் மக்களிடம் தெரிவித்து தேர்தலை சந்தித்தது தேர்தல் நேரத்தில் புதுவைக்கு வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவோம் என கூறியிருந்தார்.

    ஆனால் இவை இரண்டுமே நடைபெறவில்லை. 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டுவரை முதல்-அமைச்சர்கள் மாநாட்டிலும், பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திக்கும்போதும், தொடர்ந்து புதுவைக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என நான் வலியுறுத்தினேன்.

    சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பினோம். மத்திய உள்துறை அமைச்சகம் இந்த கோப்பை கிடப்பில் போட்டது.

    மாநில அந்தஸ்து கொடுத்தால், காங்கிரஸ் அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்பதற்காகவும், களங்கம் விளைவிக்கும் எண்ணத்தோடும் தீர்மானத்தை ஏற்கவில்லை.

    இப்போது மத்தியிலும், மாநிலத்திலும் இணக்கமான ஆட்சிதானே நடக்கிறது. இவர்களால் ஏன் மாநில அந்தஸ்து பெற முடியவில்லை. இதிலிருந்து தெள்ளத்தெளிவாக பிரதமர் மோடி, புதுவை மாநில மக்களை பழிவாங்குகிறார் என தெரிகிறது. பா.ஜனதா புதுவை மக்களை உதாசீனப்படுத்துகிறது.

    மாநில அந்தஸ்து வழங்க முடியாது என மத்திய அரசு கைவிரித்துள்ள நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, கூட்டணியிலிருந்து வெளியே வர தயாரா? பா.ஜனதாவின் அடிமை ஆட்சியை முதல்-அமைச்சர் ரங்கசாமி நடத்துகிறார்.

    5 ஆண்டும் மாநில அந்தஸ்து பெறுவோம் என கூறியே முதல்- அமைச்சர் தனது ஆட்சியை நடத்துவார். அவரால் மாநில அந்தஸ்து பெற முடியாது. மாநில அந்தஸ்து என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி ரங்கசாமி ஆட்சி நடத்துகிறார்.

    இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.

    • அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்
    • நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் மெய்வழி ரவிக்குமார் வரவேற்புரை ஆற்றினார்.

    புதுச்சேரி:

    புளு ஸ்டார்ஸ் மேல்நிலைப்பள்ளியின் திருவள்ளுவர் வளாகத்தில் பள்ளி அளவிலான மாஸ் எக்ஸ்போ - 2023 கண்காட்சி நடந்தது.

    2 நாட்கள் நடந்த கண்காட்சியை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றியும், ரிப்பன் வெட்டியும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் மெய்வழி ரவிக்குமார் வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் முதல்வர் வரலட்சுமி ரவிக்குமார் சிறப்புரை ஆற்றினார்.

    இதில் நடுவர்களாக கணித ஆசிரியை டாக்டர் ஜெலதீஸ்வரி, அறிவியல் பேராசிரியர் ராஜகுரு மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர் சுகுமாறன் கலந்து கொண்டனர். பள்ளியின் துணை முதல்வர் சாலை சிவசெல்வம் நன்றி கூறினார்.

    2-ம் நாள் நடைபெற்ற கண்காட்சியின் நிறைவு விழாவில் உழவர்கரை ெதாகுதி எம்.எல்.ஏ. சிவசங்கர் பங்கேற்று மாண வர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.

    • பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்காத அரசையும், சட்டமன்ற உறுப்பினரையும் கண்டித்து தொகுதி மக்களை ஒன்று திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
    • மாநில துணைச் செயலாளர் எம். நாகமணி, வி.கே.மூர்த்தி, எஸ். கிருஷ்ணமூர்த்தி, குமுதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை, காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் செயல்வீரர்கள் வீராங்கனை களின் ஆலோ சனைக் கூட்டம் செந்தில் மஹாலில் இன்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு அ.தி.மு.க. தொகுதி செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். முன்னாள் கவுன்சிலர் பி. கணேசன், மாநில துணை செயலாளர் எம்.ஏ.கே. கருணாநிதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    காமாட்சியம்மன் கோவில் சொத்தை மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும், அத்தீர்ப்பின் மீது நடவடிக்கை எடுக்காத ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இதே நிலை நீடித்தால் கட்சி தலைமையின் அனுமதி பெற்று அ.தி.மு.க. சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும். காமராஜர் நகர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதியிலும் மாசு கலந்த குடிநீர் வருவதை தடுத்து நிறுத்தி சுகாதாரமான முறையில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்காத அரசையும், சட்டமன்ற உறுப்பினரையும் கண்டித்து தொகுதி மக்களை ஒன்று திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாநில அவை தலைவர் அன்பானந்தம், மாநில ஜெ. பேரவை செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாஸ்கர், மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராஜாராமன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் மகாதேவி, ஆர்.வி.திருநாவுக்கரசு, மாநில துணை செயலாளர்கள் உமா, குணசேகரன், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணைச் செயலாளர் எம். நாகமணி, வி.கே.மூர்த்தி, எஸ். கிருஷ்ணமூர்த்தி, குமுதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×