என் மலர்
புதுச்சேரி
- அசாதாரண சூழ்நிலையால் பொதுமக்கள், வணிகர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
- . அப்போது ஒரு கட்டத்தில் பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
புதுச்சேரி:
கோட்டக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2012 -ம் ஆண்டு முதல் சீரான மின்சாரம் வழங்கப்படாததால் ஏற்படும் அசாதாரண சூழ்நிலையால் பொதுமக்கள், வணிகர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று வருவாய்த்துறை, மின்துறை, நகராட்சி, காவல்துறை அதிகாரிகள் மற்றும் வணிகர்கள் பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நகராட்சி அருகே உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் நடந்த கூட்டத்தில், கோட்டக்குப்பம் நகர் மன்ற தலைவர் ஜெயமூர்த்தி, ஆணையர் புகேந்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது பேசிய பொதுமக்கள் கோட்டகுப்பத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஏற்படும் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்ப ட்டுள்ளனர் என்றனர்.
இதையடுத்து நகர் மன்ற தலைவர் ஜெயமூர்த்தி பேசும் போது, கோட்டக்குப்பம் பகுதியில் ஏற்படும் தொடர் மின்வெட்டிற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் துணை மின் நிலையம் அமைக்க சின்னக்கோ ட்டக்குப்பம் பகுதியில் உள்ள ஆரோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான 1 3/4 ஏக்கர் நிலம் ஆரோவில் நிர்வாகம் அனுமதியோடு கையகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். விரைவில் வருவாய் துறையினர் துணையோடு இடம் கையகப்படுத்தப்பட்டு அங்கு துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது என்று கூறினார். அப்போது ஒரு கட்டத்தில் பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதைத்தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் பாதியி லேயே எழுந்து சென்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- ரவிக்குமார் எம்.பி. கடும் தாக்கு
- வரும் ஜனவரி மாதத்தில் தெலுங்கானா, மிசோரம், மத்தியபிரதேசம் உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது.
புதுச்சேரி:
கோட்டகுப்பத்தில் வெல்லும் ஜனநாயக மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கோட்டகுப்பம் நகர செயலாளர் திருவழகன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் பொன்னிவளவன் தலைமை தாங்கினார்.
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் கலந்து கொண்டு பேசினார். சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி யிலிருந்து ஒவ்வொ ருவராக வெளியேறி வருகின்றனர். தமிழகத்தில் அ.தி.மு.க. அந்த கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான கட்சியும் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறது.
பா.ஜனதாவிற்கு கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள மாநில கட்சிகள் யாரும் கூட்டணியில் இல்லை. கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சியை இழந்து காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று தற்போது ஆட்சி புரிந்து வருகிறது.
தென்னிந்திய மாநிலங்களைப் பொறுத்தவரையில் பா.ஜனதாவை கட்சிகள் புறக்கணித்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி ஓட்டை விழுந்த படகு போல சவாரி செய்து கொண்டிருக்கிறது. விரைவில் அந்த கூட்டணி மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிரா மற்றும் தென்னிந்திய மாநிலங்களில்
பா.ஜனதா 20 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது என சர்வே வெளியாகி உள்ளது. பா.ஜனதா வலிமையாக இருப்பதாக கூறப்படும் பாஜக ஆளும் உத்திர பிரதேச மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாடி கட்சியிடம் தோல்வி யடைந்துள்ளது. இது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாகும். வரும் ஜனவரி மாதத்தில் தெலுங்கானா, மிசோரம், மத்தியபிரதேசம் உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது.
இதில் பா.ஜ.க. தோல்வியடையும். இவ்வாறு அவர் பேசினார்.
பொதுக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமரன் வி.சி.க. தேர்தல் பணி குழு துணை செயலாளர் வள்ளுவன் ஆகியோர் பேசினர். இதில், மண்டல செயலாளர் செல்வம், ஆற்றலரசு அய்யாகரிகாலன், இரணியன், பால்வண்ணன், அன்பரசு, தமிழ் ஒளி, தமிழ்பாவலன், கவுன்சிலர் பேராசிரியர் கல்பனா, பிரபாகரன், கமல்தாஸ், முபாரக் ஆறுமுகம், காளிதாஸ், சிறுத்தை செரீப், ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டனர். நகர செய லாளர் சபீர் அகமது நன்றி கூறினார்.
- நகர்மன்றத் தலைவர் ஜெயமூர்த்தி தொடங்கி வைத்தார்
- தூய்மை பணியாளர்கள் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
புதுச்சேரி
கோட்டக்குப்பத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2095 குறித்த விழிப்பு ணர்வு மாரத்தான் இன்று காலை நடந்தது.
கோட்டகுப்பம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் ஜெயமூர்த்தி, நகராட்சி ஆணையர் புகேந்திரி ஆகியோர் கொடியசைத்து மாரத்தான் நடைபயணத்தை தொடங்கி வைத்தனர்.
நகராட்சி ஊழியர்கள், மஸ்தூர் ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
நிகழ்ச்சியில் 14-வது நகர் மன்ற உறுப்பினர் ஸ்டாலின் சுகுமார், நகராட்சி மேலாளர் லட்சுமி, பெரிய முதலியார் சாவடி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடாசலம், நகராட்சி சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி, தூய்மை மேற்பார்வையாளர் சங்கர், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் ஜாஹிதா பர்வீன், பள்ளி மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
- போலீஸ்காரரின் புதிய பைக்கையும் ஓட்டிச்சென்ற அவலம்
- வசர சிகிச்சை பிரிவில் மனைவியை டாக்டரிடம் காண்பித்த பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் தேவராஜ் அதிர்ச்சியடைந்தார்.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து பைக் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. குறிப்பாக புதுவை-கடலூர் சாலையில் உள்ள வணிக வளாகம் எதிரே நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருடப்பட்டு வந்தன.
மேலும் புதிய பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, புதுவை கடற்கரை சாலையில் நடைபயிற்சி செல்பவர்களின் இரு சக்கர வாகனங்கள் திருடு போகும் சம்பவங்கள் இருந்து வந்தன.
அதோடு வீட்டு முன்பு நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களும் திருடு போய் வந்தது.
இதையடுத்து போலீசார் அடிக்கடி தீவிர வாகன சோதனை நடத்தி மோட்டார் சைக்கிள் திருடர்களை கைது செய்ததால் இடையில் மோட்டார் சைக்கிள் திருடு இல்லாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் பைக் திருட்டு போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
முத்தி ரைய ர்பா ளை யம் கோ வி ந்தன் பேட்டையை சேர்ந்த இரும்பு வியாபாரம் செய்யும் முருகன்(40) என்பவர் தனது மோட்டார் சைக்கி ளை மேட்டுப்பாளை யம் கு ண்டு சாலை ரோட்டில் உள்ள மதுக்கடை அருகே நிறுத்தி விட்டு சென்ற போது அதனை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
அதுபோல் மின்துறை ஊழியரான வில்லியனூரை சேர்ந்த கணேசின் மனைவி சத்யா அவரது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தியிருந்த போது யாரோ அதனை திருடி சென்று விட்டனர்.
இதுபோல் தொழிலதி பரான லாஸ்பேட்டையை சேர்ந்த ஆதிகேசவ பெருமாள் (24) என்பவர் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் தனது நிறுவனம் எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றிருந்த போது அதனை மர்ம நபர் திருடி சென்று விட்டார்.
மேலும் பொம்மையார் பாளையத்தை சேர்ந்த தேவராஜ்(34) என்பவர் அவரது மனைவிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தார். ஆஸ்பத்திரி எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அவசர சிகிச்சை பிரிவில் மனைவியை டாக்டரிடம் காண்பித்த பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் தேவராஜ் அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.
இதேபோல் புதுவை பஜார் வீதியில் போலீஸ்காரர் ஒருவர் தான் வாங்கியிருந்த புதிய பைக்கை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று வந்தார்.திரும்பி வந்துபார்த்த போது பைக்கை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அங்குள்ள ஒரு கடைமுன்பு பொரு த்தியிருந்த கேமராவை ஆய்வு செய்த போது பைக்கை ஒருவர் திருடி சென்றது பதிவாகியிருந்தது. அவரது முகம் கேமராவில் தெரியவில்லை. புதிய பைக் திருட்டு போனதால் போலீஸ்காரர் அதிர்ச்சியில் உறைந்தார்.
தற்போது புதுவையில் மீண்டும் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பொது இடங்களில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி செல்லவே அச்சமடைந்து வருகின்றனர்.
- முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடர்ந்து மாநில அந்தஸ்து கோரி வருகிறார்.
- பிரதமர், உள்துறை மந்திரி, மத்திய மந்திரிகளை அனைத்து எம்.எல்.ஏ.க்களோடு முதல்-அமைச்சர் தலைமையில் சந்தித்து மாநில அந்தஸ்தை வலியுறுத்துவோம்.
புதுச்சேரி:
யூனியன் பிரதேசமான புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது.
புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி ஏற்கனவே 13 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை மாநில அந்தஸ்து கிடைக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும் மாநில அந்தஸ்து பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
புதுவையில் பா.ஜனதா-என்ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மத்திய ஆட்சியாளர்களோடு இணக்கமான ஆட்சி புதுவையில் நடந்து வருவதால் இந்த காலக்கட்டத்தில் மாநில அந்தஸ்து கிடைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலிலும் மாநில அந்தஸ்து பெறுவோம் என அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்குறுதி அளித்தன.
கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு 14-வது முறையாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் கடந்த ஜூலை மாதம் கவர்னர் தமிழிசை ஒப்புதலோடு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் புதுவை அரசின் தீர்மானத்திற்கு மத்திய அரசு கடிதம் மூலம் பதிலளித்துள்ளது.
இந்த கடிதத்தில் தற்போதைய நிலையே புதுவையில் தொடரும் என குறிப்பிட்டுள்ளது. இதனால் யூனியன் பிரதேசமாகவே புதுவை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது புதுவை அரசியல் கட்சிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சட்டசபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
மாநில அந்தஸ்து வழங்க முடியாது என மத்திய அரசு தெரிவிக்கவில்லை. தற்போதைய நிலையே தொடரும் என தெரிவித்துள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அனுப்பப்பட்ட தீர்மானங்களை பற்றி மத்திய அரசு தெரிவிக்கவில்லை. 2022-23-ம் ஆண்டில் புதுவை சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மாநில அந்தஸ்தை வலியுறுத்திய அரசு தீர்மானத்தின் மீது மத்திய அரசு பதிலளித்துள்ளது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடர்ந்து மாநில அந்தஸ்து கோரி வருகிறார். மீண்டும் சட்டசபையில் மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் கொண்டு வரப்படும். பிரதமர், உள்துறை மந்திரி, மத்திய மந்திரிகளை அனைத்து எம்.எல்.ஏ.க்களோடு முதல்-அமைச்சர் தலைமையில் சந்தித்து மாநில அந்தஸ்தை வலியுறுத்துவோம்.
நிதி கமிஷனில் புதுவையை சேர்க்க வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது. நிதி கமிஷனில் முதலில் புதுவை சேர்க்கப்படும். பின்னர் மாநில அந்தஸ்து கோரிக்கை வலுப்பெறும். சிலவற்றில் மட்டும்தான் மத்திய அரசு புதுவையை யூனியன் பிரதேசமாக கருதுகிறது. மற்ற அனைத்து விஷயங்களிலும் மாநிலமாகவே கருதுகிறது. அதன்படி புதுவையிலேயே உள்ள அதிகாரத்தை பயன்படுத்திக்கொள்ள மத்திய உள்துறை தெரிவிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கோவில் நிர்வா கம் சார்பில் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் வரவேற்றார்
- கோவில் நிர்வாக அதிகாரி அருண கிரிநாதன் உடன் இருந்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட் டத்தில், நேற்று மாலை நடைபெற்ற அரசு விழாக்க ளில் கலந்து கொண்ட மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபலா காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இன்று காலை குடும்பத்தோடு சாமி தரி சனம் செய்தார்.
முன்னதாக மத்திய மந்திரிக்கு கோவில் நிர்வா கம் சார்பில் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் வரவேற்றார். தொடர்ந்து விநாயகர், முருகர் சண்டி கேஸ்வரர், உள்ளிட்ட சாமிகளை தரிசனம் செய்து விட்டு, சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தரிசனம் செய்தார். இந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் முருகன், புதுச்சேரி மாநில அமைச்சர் கள் லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா, கோவில் நிர்வாக அதிகாரி அருண கிரிநாதன் உடன் இருந்தனர்.
- கவர்னர் தமிழிசை அறிவிப்பு
- மீனவர்களின் பாதுகாப்பிற்காக ஸ்மார்ட் போன் தருவதற்கான அத்தனை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சொன்னேன்.
புதுச்சேரி:
காரைக்கால் மீன்பிடி துறைமுக வளாகத்தில் நடந்த மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-
ஐதராபாத் மீன் வளத்துறை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் ஆராய்ச்சி விண்வெளி, பாதுகாப்பு நிறுவனங்களோடும் இணைந்து சுனாமி, புயல், கடல் சீற்றம் போன்ற பேரிடர்கள் நிகழ்வதை முன்கூட்டியே தெரிந்து மீனவர்களுக்கு 'ஸ்மார்ட் மொபைல் போன்' மூலம் தெரியப்படுத்த ஆலோசனை சொன்னார்கள்.
மீனவர்களிடம் ஸ்மார்ட் போன் இருக்கிறதா?" என்று நான் கேட்டேன். அவர்கள் "தெரியாது" என பதிலளிக்க, "இந்த தொழில்நுட்பத்தை நீங்கள் சிறப்பாக வடிவமைத்து கொடுத்தால் புதுவையில் மீனவர்களின் பாதுகாப்பிற்காக ஸ்மார்ட் போன் தருவதற்கான அத்தனை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சொன்னேன். ஏனென்றால், இது மீனவர்களின் பாதுகாப்புக்கு மிகவும் உகந்தது.
மீனவர்களுக்கு மீன்பிடிப்பது மட்டுமல்லாது அவர்களின் குழந்தைகளை படிக்க வைப்பது அவர்களின் தொழிலை தொழில் நுட்பங்கள் மூலம் மேம்படுத்த இது போன்ற உதவிகளை அரசு செய்ய வேண்டும். மீனவர்கள் தொழில் நுட்பத்தோடு அவர்களின் தொழில் வளர திறன் மேம்படுத்தப்பட வேண்டும்,
மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு ஒரு வேண்டுகோள். விருந்தி னர்களை சிறப்பு செய்ய பொன்னாடை களுக்கு பதிலாக கைத்தறி ஆடைகளை கொடுத்தால் நெசவாளர்கள் வாழ்க்கை மேம்படும். இதனை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் பொருளாதாரம் மீன் பிடிப்பதில் இருப்பதைப் போல கைத்தறி ஆடைகளை நெய்வதிலும் பொருளா தாரம் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்டமாக அமர்ந்து மது அருந்தி ெகாண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.
- இதையடுத்து இவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் ெபாது இடத்தில் மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பலர் அதனை மீறி பொது மக்கள் கூடும் இடங்களிலேயே மது அருந்தி வருகின்றனர்.
குறிப்பாக புதுவை- கடலூர் சாலையில் உள்ள ரோடியர் மில் திடலில் மாலை பொழுதானதும் கூட்டம் கூட்டமாக இரவு முழுவதும் பலர் மது அருந்துகின்றனர்.
இதனால் அருகில் குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் முகம் சுளித்து செல்கின்றனர்.
தொடர்ந்து இது போன்று பல புகார்கள் வந்ததால் நேற்று இரவு உருளையன்பேட்டை போலீசார் ரோடியர் மில் திடலில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு கூட்டமாக அமர்ந்து மது அருந்தி ெகாண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் நயினார்மண்டபம் துளுக்கானத்தம்மன் நகரை சேர்ந்த ஆனந்த்(42), மூலக்குளம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சுரேஷ்(30), தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த விஜய்(27) மற்றும் புதுவை பூமியான்பேட்டை ஜவகர் நகரை சேர்ந்த பிரசாத்(33), கோரிமேடு காமராஜர் நகரை சேர்ந்த தமிழ்வண்ணன்(37) என்பது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
- அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் தொடங்கி வைத்தார்
- புதுவை அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை அமெச்சூர் நெட்பால் விளையாட்டுக்கழகம் சார்பில் 5-வது சிறுவர், சிறுமிகளுக்கான மாநிலஅளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகள் திலாசுப்பேட்டை வீமன் நகர் மந்தைவெளி திடலில் 2 நாட்கள் நடக்கிறது.
இதில் புதுவை பிராந்தியத்தில் உள்ள 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இதன் தொடக்கவிழாவுக்கு நெட்பால் சங்க செயலாளர் அனிதா வரவேற்றார். புதுவை அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார்.
முனுசாமி, நாகரத்தினம், நெட்பால் சங்க துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், உழவர்கரை நகராட்சி பொறியாளர்கள் மலைவாசன், முத்தையன், பாலையா, கதிரேசன், பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த 20 ஆண்டு காலமாக நடந்த கல்லூரியின் சிறப்பு குறித்து புத்தகம் வெளியிடப்பட்து.
- பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் செவிலியர் கல்லூரி துணை முதல்வர் சுமதி நன்றி கூறினார்.
புதுச்சேரி:
பிள்ளையார்குப்பம் பாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழகத்தின் அங்கமான கஸ்தூரிபா காந்தி செவிலியர் கல்லூரியின் 20ம் ஆண்டு விழா கொண்டா டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் புனிதா ஜோஸ்பின்வரவேற்றார். பல்கலைக் கழக துணைவேந்தர் நிகார் ரஞ்சன் பிஸ்வாஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு செவிலியர் மற்றும் மருத்துவச்சிகள் பேரவையின் பதிவாளர்
ஆனாகிரேஸ் கலைமதி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பேராசிரியர் கிருபா ஏஞ்சலன் கல்லூரியின் 20 வருட முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். மேலும், கடந்த 20 ஆண்டு காலமாக நடந்த கல்லூரியின் சிறப்பு குறித்து புத்தகம் வெளியிடப்பட்து.
தொடர்ந்து நீண்ட காலம் பணியாற்றிய ஆசிரியர்கள், சேவையாற்றிய மாணவர்களுக்கும் விருது, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி மருத்துவமனை சுகாதாரம் மற்றும் அவுட் ரீச் சேவை பிரிவு இயக்குனர் பேராசிரியர் நிர்மல்குமார், மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி முதல்வர் கோஷ், பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் செவிலியர் கல்லூரி துணை முதல்வர் சுமதி நன்றி கூறினார்.
- திருமண மண்டபத்தில் இருந்து திருமலை திருப்பதிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.
- புதுவை மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
புதுவை வெங்கடேச பெருமாள் பக்தஜனசபையினர் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் திருமலை திருப்பதி பாத யாத்திரை செல்கின்றனர்.
31-வது ஆண்டு பாதயாத்திரைக்கு கடந்த மாதம் புரட்டாசி 1-ந் தேதி மாலை அணிந்து விரதம் இருந்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) பக்தர்கள் பாதயாத்திரை புறப்பட்டனர்.
காலை 5 மணியளவில் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு டி.பி.ஆர். திருமண மண்டபத்தில் இருந்து திருமலை திருப்பதிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.
யாத்திரையில் புதுவை மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
வெங்கடேச பெருமாள் பக்த ஜனசபை தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். பக்தஜனசபை நிர்வாகிகள் ஸ்ரீசைலேசன், பூபதி, கணபதி, ஏழுமலை, ஜெயகாந்தன், கண்ணன், தட்சணாமூர்த்தி, ராமானுஜதாசன், கணபதி, சிவராமன், செந்தில், அன்பழகன், ஜெயமூர்த்தி, சிவராஜ், பாவாடை, ரமேஷ், பாகவதர்சம்பந்தம், பாலாஜி சிவகலைபாரதி, அருண், அருண்பிரசாத், பிரகாஷ், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- அனிபால் கென்னடி எம்.எல்.ஏ வழங்கினார்
- தி.மு.க. நிர்வாகிகள் தங்கவேல், சக்திவேல், அரிகிருஷ்ணன், ராஜி, விநாயகமூர்த்தி, செல்வம், ராகேஷ், ரகுராமன், மணி, ராம் ஆகியோர் உடன் இருந்தனர்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு புதுச்சேரி அரசு ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடி நலத்துறை மூலம் தொடர் நோய் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி உப்பளம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.
இதில் தொகுதி எம்.எல்.ஏ.வும் மாநில தி.மு.க. துணை அமைப்பாளருமான அனிபால் கென்னடி கலந்து கொண்டு தொடர் நோய் பயனாளிகளுக்கு உதவித் தொகைக்கான அரசாணை யினை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. நிர்வாகிகள் தங்கவேல், சக்திவேல், அரிகிருஷ்ணன், ராஜி, விநாயகமூர்த்தி, செல்வம், ராகேஷ், ரகுராமன், மணி, ராம் ஆகியோர் உடன் இருந்தனர்.






