search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தேசிய ஜனநாயக கூட்டணி ஓட்டை விழுந்த படகு போல் பயணிக்கிறது
    X

    கோட்டகுப்பத்தில் நடந்த வெல்லும் ஜனநாயகம் மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டத்தில் ரவிக்குமார் எம்.பி பேசினார்.

    தேசிய ஜனநாயக கூட்டணி ஓட்டை விழுந்த படகு போல் பயணிக்கிறது

    • ரவிக்குமார் எம்.பி. கடும் தாக்கு
    • வரும் ஜனவரி மாதத்தில் தெலுங்கானா, மிசோரம், மத்தியபிரதேசம் உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது.

    புதுச்சேரி:

    கோட்டகுப்பத்தில் வெல்லும் ஜனநாயக மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கோட்டகுப்பம் நகர செயலாளர் திருவழகன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் பொன்னிவளவன் தலைமை தாங்கினார்.

    நாகப்பட்டினம் எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் கலந்து கொண்டு பேசினார். சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி யிலிருந்து ஒவ்வொ ருவராக வெளியேறி வருகின்றனர். தமிழகத்தில் அ.தி.மு.க. அந்த கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான கட்சியும் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறது.

    பா.ஜனதாவிற்கு கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள மாநில கட்சிகள் யாரும் கூட்டணியில் இல்லை. கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சியை இழந்து காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று தற்போது ஆட்சி புரிந்து வருகிறது.

    தென்னிந்திய மாநிலங்களைப் பொறுத்தவரையில் பா.ஜனதாவை கட்சிகள் புறக்கணித்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி ஓட்டை விழுந்த படகு போல சவாரி செய்து கொண்டிருக்கிறது. விரைவில் அந்த கூட்டணி மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிரா மற்றும் தென்னிந்திய மாநிலங்களில்

    பா.ஜனதா 20 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது என சர்வே வெளியாகி உள்ளது. பா.ஜனதா வலிமையாக இருப்பதாக கூறப்படும் பாஜக ஆளும் உத்திர பிரதேச மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாடி கட்சியிடம் தோல்வி யடைந்துள்ளது. இது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாகும். வரும் ஜனவரி மாதத்தில் தெலுங்கானா, மிசோரம், மத்தியபிரதேசம் உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது.

    இதில் பா.ஜ.க. தோல்வியடையும். இவ்வாறு அவர் பேசினார்.

    பொதுக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமரன் வி.சி.க. தேர்தல் பணி குழு துணை செயலாளர் வள்ளுவன் ஆகியோர் பேசினர். இதில், மண்டல செயலாளர் செல்வம், ஆற்றலரசு அய்யாகரிகாலன், இரணியன், பால்வண்ணன், அன்பரசு, தமிழ் ஒளி, தமிழ்பாவலன், கவுன்சிலர் பேராசிரியர் கல்பனா, பிரபாகரன், கமல்தாஸ், முபாரக் ஆறுமுகம், காளிதாஸ், சிறுத்தை செரீப், ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டனர். நகர செய லாளர் சபீர் அகமது நன்றி கூறினார்.

    Next Story
    ×