search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் மீண்டும் அதிகரிக்கும் பைக் திருட்டுகள்
    X

    கோப்பு படம்.

    புதுவையில் மீண்டும் அதிகரிக்கும் பைக் திருட்டுகள்

    • போலீஸ்காரரின் புதிய பைக்கையும் ஓட்டிச்சென்ற அவலம்
    • வசர சிகிச்சை பிரிவில் மனைவியை டாக்டரிடம் காண்பித்த பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் தேவராஜ் அதிர்ச்சியடைந்தார்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து பைக் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. குறிப்பாக புதுவை-கடலூர் சாலையில் உள்ள வணிக வளாகம் எதிரே நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருடப்பட்டு வந்தன.

    மேலும் புதிய பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, புதுவை கடற்கரை சாலையில் நடைபயிற்சி செல்பவர்களின் இரு சக்கர வாகனங்கள் திருடு போகும் சம்பவங்கள் இருந்து வந்தன.

    அதோடு வீட்டு முன்பு நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களும் திருடு போய் வந்தது.

    இதையடுத்து போலீசார் அடிக்கடி தீவிர வாகன சோதனை நடத்தி மோட்டார் சைக்கிள் திருடர்களை கைது செய்ததால் இடையில் மோட்டார் சைக்கிள் திருடு இல்லாமல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் தற்போது மீண்டும் பைக் திருட்டு போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

    முத்தி ரைய ர்பா ளை யம் கோ வி ந்தன் பேட்டையை சேர்ந்த இரும்பு வியாபாரம் செய்யும் முருகன்(40) என்பவர் தனது மோட்டார் சைக்கி ளை மேட்டுப்பாளை யம் கு ண்டு சாலை ரோட்டில் உள்ள மதுக்கடை அருகே நிறுத்தி விட்டு சென்ற போது அதனை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

    அதுபோல் மின்துறை ஊழியரான வில்லியனூரை சேர்ந்த கணேசின் மனைவி சத்யா அவரது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தியிருந்த போது யாரோ அதனை திருடி சென்று விட்டனர்.

    இதுபோல் தொழிலதி பரான லாஸ்பேட்டையை சேர்ந்த ஆதிகேசவ பெருமாள் (24) என்பவர் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் தனது நிறுவனம் எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றிருந்த போது அதனை மர்ம நபர் திருடி சென்று விட்டார்.

    மேலும் பொம்மையார் பாளையத்தை சேர்ந்த தேவராஜ்(34) என்பவர் அவரது மனைவிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தார். ஆஸ்பத்திரி எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அவசர சிகிச்சை பிரிவில் மனைவியை டாக்டரிடம் காண்பித்த பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் தேவராஜ் அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

    இதேபோல் புதுவை பஜார் வீதியில் போலீஸ்காரர் ஒருவர் தான் வாங்கியிருந்த புதிய பைக்கை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று வந்தார்.திரும்பி வந்துபார்த்த போது பைக்கை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அங்குள்ள ஒரு கடைமுன்பு பொரு த்தியிருந்த கேமராவை ஆய்வு செய்த போது பைக்கை ஒருவர் திருடி சென்றது பதிவாகியிருந்தது. அவரது முகம் கேமராவில் தெரியவில்லை. புதிய பைக் திருட்டு போனதால் போலீஸ்காரர் அதிர்ச்சியில் உறைந்தார்.

    தற்போது புதுவையில் மீண்டும் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பொது இடங்களில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி செல்லவே அச்சமடைந்து வருகின்றனர்.

    Next Story
    ×