என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விழிப்புணர்வு மாரத்தான் நடைபயணம்
    X

    விழிப்புணர்வு மாரத்தான் நடைபயணத்தை நகர்மன்றத் தலைவர் ஜெயமூர்த்தி தொடங்கி வைத்த காட்சி.

    விழிப்புணர்வு மாரத்தான் நடைபயணம்

    • நகர்மன்றத் தலைவர் ஜெயமூர்த்தி தொடங்கி வைத்தார்
    • தூய்மை பணியாளர்கள் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

    புதுச்சேரி

    கோட்டக்குப்பத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2095 குறித்த விழிப்பு ணர்வு மாரத்தான் இன்று காலை நடந்தது.

    கோட்டகுப்பம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் ஜெயமூர்த்தி, நகராட்சி ஆணையர் புகேந்திரி ஆகியோர் கொடியசைத்து மாரத்தான் நடைபயணத்தை தொடங்கி வைத்தனர்.

    நகராட்சி ஊழியர்கள், மஸ்தூர் ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

    நிகழ்ச்சியில் 14-வது நகர் மன்ற உறுப்பினர் ஸ்டாலின் சுகுமார், நகராட்சி மேலாளர் லட்சுமி, பெரிய முதலியார் சாவடி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடாசலம், நகராட்சி சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி, தூய்மை மேற்பார்வையாளர் சங்கர், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் ஜாஹிதா பர்வீன், பள்ளி மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×