என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
பொது இடத்தில் ரகளை செய்த 6 பேர் கைது
- பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்து கொண்டிருந்தனர்.
- கடலூர் பகுதியை சேர்ந்த ராஜா(40) என்பவரை பாகூர் போலீசாரும் கைது செய்தனர்.
புதுச்சேரி:
தவளக்குப்பம் போலீசார் நேற்று மாலை டி.என்.பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மைதானத்தில் 2 வாலிபர்கள் நின்று கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த நிதீஷ்(19) மற்றும் வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்த ஸ்ரீநாத்(25) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
இதுபோல் புதுவை 100 ரோட்டில் தனியார் மதுபான கடை அருகே குடித்து விட்டு ரகளை செய்த வில்லியனூர் கோபாலன் கடை அம்மா நகரை சேர்ந்த அலெக்ஸ்(43), சாரம் பாலாஜி நகரை சேர்ந்த விஜயகுமார்(44) ஆகிய 2 பேரையும் உருளையன்பேட்டை போலீசாரும், கன்னியகோவில் பகுதியில் பொது இடத்தில் ரகளை செய்த கடலூர் சொத்திக்குப்பத்தை சேர்ந்த ஆகாஷ்(22) என்பவரை கிருமாம்பாக்கம் போலீசார், பாகூர் கொமந்தான்மேடு பகுதியில் ரகளை செய்த கடலூர் பகுதியை சேர்ந்த ராஜா(40) என்பவரை பாகூர் போலீசாரும் கைது செய்தனர்.






