search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரூ.17 லட்சம் செலவில் வாய்க்கால் தூர்வாரும் பணி
    X

    ரூ.17 லட்சம் செலவில் வாய்க்கால் தூர்வாரும் பணியை செந்தில்குமார் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்.

    ரூ.17 லட்சம் செலவில் வாய்க்கால் தூர்வாரும் பணி

    • செந்தில்குமார் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்
    • பரிக்கல்பட்டு தாங்கள் வாய்க்காலை தூர்வாரி சுத்தப்படுத்திட ரூ.6.62 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பொதுப் பணித்துறை நீர் பாசன கோட்டம் சார்பில் குருவிநத்தம் சித்தேரி 2-ம் நிலை பாசன வாய்க்கால், மேல் பரிக்கல்பட்டு ஏரி வாய்க்கால், ஆராய்ச்சிக்குப்பம் ஏரி வாய்க்கால், சடக்குளம் தாங்கள் வாய்க்கால், உச்சிமேடு தாங்கள், பரிக்கல்பட்டு தாங்கள் வாய்க்காலை தூர்வாரி சுத்தப்படுத்திட ரூ.6.62 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் குருவிநத்தம் சித்தேரி முதல் மணப்பட்டு ஏரி வரை உள்ள வாய்க்காலை ரூ. 5.98 லட்சம் செலவிலும், பாகூர் ஏரியிலிருந்து செல்லும் குடியிருப்பு பாளையம் மதுரை வாய்க்கால் சேரி மதுக்கு வாய்க்கால் காட்டுக்குப்பம் ஏரி வரத்து வாய்க்காலை தூர்வாரி சுத்தப்படுத்த ரூ.4.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

    இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு பூமி பூஜை செய்து வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட உதவிப் பொறியாளர் ராஜன், இளநிலை பொறியாளர்கள் ஜெயராமணன், நடராஜன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தலைவர் மஞ்சினி, திமுக பிரமுகர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×