என் மலர்
புதுச்சேரி

கூட்டத்தில் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பேசிய காட்சி.
கோவில் சொத்தை மீட்டு ஒப்படைக்காதபுதுவை அரசுக்கு அ.தி.மு.க. கண்டனம்
- பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்காத அரசையும், சட்டமன்ற உறுப்பினரையும் கண்டித்து தொகுதி மக்களை ஒன்று திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
- மாநில துணைச் செயலாளர் எம். நாகமணி, வி.கே.மூர்த்தி, எஸ். கிருஷ்ணமூர்த்தி, குமுதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை, காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் செயல்வீரர்கள் வீராங்கனை களின் ஆலோ சனைக் கூட்டம் செந்தில் மஹாலில் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு அ.தி.மு.க. தொகுதி செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். முன்னாள் கவுன்சிலர் பி. கணேசன், மாநில துணை செயலாளர் எம்.ஏ.கே. கருணாநிதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
காமாட்சியம்மன் கோவில் சொத்தை மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும், அத்தீர்ப்பின் மீது நடவடிக்கை எடுக்காத ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.
இதே நிலை நீடித்தால் கட்சி தலைமையின் அனுமதி பெற்று அ.தி.மு.க. சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும். காமராஜர் நகர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதியிலும் மாசு கலந்த குடிநீர் வருவதை தடுத்து நிறுத்தி சுகாதாரமான முறையில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்காத அரசையும், சட்டமன்ற உறுப்பினரையும் கண்டித்து தொகுதி மக்களை ஒன்று திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநில அவை தலைவர் அன்பானந்தம், மாநில ஜெ. பேரவை செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாஸ்கர், மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராஜாராமன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் மகாதேவி, ஆர்.வி.திருநாவுக்கரசு, மாநில துணை செயலாளர்கள் உமா, குணசேகரன், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணைச் செயலாளர் எம். நாகமணி, வி.கே.மூர்த்தி, எஸ். கிருஷ்ணமூர்த்தி, குமுதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






