search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பெண்களால் எதையும் சாதிக்க முடியும்
    X

    கோப்பு படம்.

    பெண்களால் எதையும் சாதிக்க முடியும்

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி பேச்சு
    • நீங்கள் இங்கு வந்து செல்வது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் எண்ணம் நிறைவேற வேண்டும்.

    புதுச்சேரி:

    சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு தேச ஒற்றுமை, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கற்பித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தம் வகையில்

    சி.ஆர்.பி.எப். படை வீராங்க ணைகள் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்துகின்றனர்.

    50 வீராங்கணைகள் பங்கேற்றுள்ள இந்த பேரணி கடந்த 5-ந் தேதி கன்னியா குமரியில் தொடங்கியது. வருகிற 30-ந் தேதி குஜராத்தில் பேரணி நிறை வடைகிறது.

    இந்த பேரணி நேற்று இரவு புதுவைக்கு வந்தது. புதுவை மாநில எல்லையான கன்னியக்கோவிலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று காலை இந்த குழுவினர் புதுவையிலிருந்து தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.

    இவர்களுக்கு வழியனுப்பும் விழா இன்று காலை கோரிமேடு காவலர் பயிற்சி மைதானத்தில் நடந்தது. ஏ.டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ் தலைமை தாங்கினார். டி.ஐ.ஜி. பிரிஜேந்திரகுமார், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கள் நாரா.சைதன்யா, அனிதாராய் முன்னிலை வகித்த னர். முதல்- அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர், வீராங்க ணைகளுக்கு வாழ்த்து தெரிவித்து, கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தனர்.

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    தேச ஒற்றுமைக்காக இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளீர்கள். பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த பயணம் அமைந்துள்ளது. இல்லாவிட்டால் பெண்கள் மட்டும் கன்னியாகுமரியில் இருந்து குஜராத் வரை செல்வது என்பது முடியாத காரியம்.

    தேச பற்றை மக்களிடம் உருவாக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு செல்லும் உங்கள் பயணம் வெற்றி பெறட்டும்.

    இளைஞர்களிடம் தற்போதுள்ள தீய பழக்கத்தை போக்கும் நிலையை உருவாக்கும் வாய்ப்பு இப்பயணத்துக்கு உண்டு.

    சிறந்த எண்ணத்தோடு இப்பயணம் மேற்கொண்டி ருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. புதுவை சிறிய மாநிலமாக இருந்தாலும் வருகின்றவர்களை வரவேற்கும் மாநிலம்.

    சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட மிகப்பெரும் தலை வர்கள் இங்கு வாழ்ந்துள்ள னர். புதுவை மாநிலம் ஒரு ஆன்மீக பூமி, எங்கள் மாநிலம் உங்களை வரவேற்று கவுரவித்துள்ளது.

    நீங்கள் இங்கு வந்து செல்வது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் எண்ணம் நிறைவேற வேண்டும்.

    நாட்டின் ஒற்றுமை வலுப்படுத்தப்பட வேண்டும். இது மிக முக்கிய மான ஒன்று. இன்று உலகளவில் நம் நாடு சிறந்து விளங்குகிறது என்றால் நாட்டின் ஒற்றுமைதான் காரணம்.

    தேசிய ஒற்றுமை என்ற வகையில் இந்த பயணம் அமைந்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் தேசிய பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. அருள்குமார். போலீஸ் சூப்பிரண்டுகள் மாறன், பக்தவச்சலம், செல்வம், நல்லாம்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர். குஜராத் புறப்பட்ட தேசிய பாதுகாப்பு படை வீராங்கணைகளின் பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவிகளுக்காக 170 பேர் கொண்ட அதிகாரிகள், வீரர்களும் உடன் சென்றனர்.

    Next Story
    ×