என் மலர்
புதுச்சேரி

மீனவர்களுக்கு நலதிட்ட உதவிகளை மத்திய மந்திரி புருஷோத்தம் ரூபலா, முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வழங்கினர். அருகில் மத்திய இணை மந்திரி எல். முருகன், கவர்னர் தமிழிசை, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி. உள்ளனர்.
மத்திய திட்டங்களுக்கு புதுவை அரசு முழு ஆதரவு அளிக்கிறது
- மத்திய மந்திரி புருசோத்தம் ரூபலா பாராட்டு
- அரவிந்தர் வாழ்ந்த பூமிக்கு வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
புதுச்சேரி:
புதுவையில் மத்திய அரசு திட்டம் 100 சதவீதம் செயல்படுத்தப்படுகிறது என்று மத்திய மந்திரி புருஷோத்தம் ரூபலா கூறினார்.
புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் சாகர் பரிக்ரமா 9-வது பயணத்திட்டம், மீன வர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி, நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் கடன் அட்டை வழங்கும் விழா நடந்தது.
விழாவுக்கு முதல்-அமைச் சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். விழாவில் மத்திய மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை மந்திரி புருஷோத்தம் ரூபலா, கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன், இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மீனவர்களுக்கான உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு கடன் அட்டைகளையும் வழங்கினர். இதைத் தொடர்ந்து மீனவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடந்தது.
விழாவில் மத்திய மந்திரி புருஷோத்தம் ரூபலா பேசியதாவது:-
அரவிந்தர் வாழ்ந்த பூமிக்கு வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் பிரதமர் மோடி மீன்வளத்திற்கு தனியாக அமைச்சகத்தை உருவாக்கி அதிக நிதியையும் ஒதுக்கி, திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதையும் கண்காணிக்கவும் அறிவுறுத்த யுள்ளார்.
அதன்படி சாகர் பரிக்ரமா திட்டத்தின் கீழ் மீனவர்கள் குறைகளைக் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய இந்த பயணம் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. புதுச்சேரிக்கு வந்து உங்களை (மீனவர்களை) பார்த்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. யூனியன் பிரதேசங்களில் மத்திய அரசின் திட்டங்களை 100 சதவீதம் செயல்படுத்தவேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மத்திய அரசு முனைப்புடன் பணியாற்றி வருகிறது. அதன்படி யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மத்திய அரசின் திட்டங்களை அரசுடன் இணைந்து 100 சதவீதம் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராய ணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ. சரவணன் குமார், புதுவை மாநில பா.ஜ.க. தலைவர் செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிகாந்தன், செந்தில்குமார் மற்றும் மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில், இணை இயக்குனர் தெய்வசிகாமணி உள்பட பலர் கலந்து கொண் டனர்.
முன்னதாக மத்திய மந்திரி நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் சாகர் பரிக்ரமா கடல் பயண திட்டம் 8 ஆயிரம் கி.மீ. நடத்தப்படுகிறது. கிழக்கு, மேற்கு கடற்கரையோர மீனவ மக்களை சந்தித்து, மத்திய அரசு திட்டங்கள் விளக்கப்படு கிறது. மீனவ மக்களிடையே கடல் சுற்றுச்சூழல், பாதுகாப்பு விழிப்புணர்வும் ஏற்படுத்துகிறோம். மத்திய அரசின் மீன்வளத்துறையின் அனைத்து திட்டங்களையும் புதுவை அரசு முழு ஆதரவு அளித்து செயல்படுத்துகிறது. புதுவை முதல்-அமைச்சர் மத்திய அரசு திட்டங்களுக்கு முழு ஆதரவு அளிப்பது பாராட்டுக்குரியது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






