என் மலர்
புதுச்சேரி

காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.
காங்கிரசால் தான் புதுவையை காப்பாற்ற முடியும்-நாராயணசாமி ஆவேசம்
- மோடியும், அமித்ஷாவும் இணைந்து நாட்டை பாழ்படுத்தி வருகின்றனர்.
- மோடியும், அமித்ஷாவும் இணைந்து நாட்டை பாழ்படுத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை இழிவுபடுத்தும் வகையில் 10 தலை ராவணனாக சித்தரித்து பா.ஜனதா சார்பில் போஸ்டர் வெளியிடப்பட்டது.
இதை கண்டித்து புதுவை மாநில காங்கிரஸ் சார்பில் இந்திராகாந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
மோடியும், அமித்ஷாவும் இணைந்து நாட்டை பாழ்படுத்தி வருகின்றனர். ராகுல்காந்தி பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டி நாடு முழுவதும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். மோடி ஆட்சியின் அவலங்களை ராகுல் மட்டுமே தட்டிக்கேட்கிறார்.
இதனால் அவரை திட்டமிட்டு தாக்குகின்றனர். பாராளுமன்ற தேர்தலில் மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என இண்டியா கூட்டணி தலைவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது தேர்தல் அறிவித்துள்ள 5 மாநிலத்தில் 4 மாநிலத்தில் காங்கிரஸ்தான் வெற்றி பெறும். புதுவையில் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
கருத்துவேறுபாடுகளை களைந்து கட்சி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். யார் வேட்பாளர் என்பது முக்கியமல்ல, காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். புதுவையில் செயல்படாத அரசுக்கு முதல்-அமைச்சராக ரங்கசாமி உள்ளார். அறிவித்த எந்த திட்டத்தை யும் நிறைவேற்றவில்லை.
பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்வது மாநில அந்தஸ்துக்காக என்றார். தற்போது மாநில அந்துஸ்து இல்லை என மத்திய அரசு கைவிரித்துவிட்டடது. இன்னும் ஏன் முதல்-அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை? ஏன் பா.ஜனதாவை கூட்டணியிலிருந்து வெளியேறவில்லை.
பா.ஜனதாவும், ரங்கசாமியும் கூட்டு கொள்ளை அடிக்கின்றனர். 2024-ல் மத்தியில் கா ங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரெய்டு வரும் என்பதால் புதுவை பா.ஜனதா அமைச்சர்கள் தங்கள் பணத்தை துபாய், மலேசியா போன்ற வெளி நாடுகளில் வைப்பதாக தகவல் வருகிறது. அதற்கான போட்டோவும் வந்துள்ளது. ரங்கசாமி ஆட்சியில் புதுவையை சுரண்டிவிட்டு சென்றுவிடுவார்கள். காங்கிரஸ் வெற்றி பெற்றால்தான் புதுவையை காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாகி எம்.எல்.ஏ. ரமேஷ்பரம்பத், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்த ராமன், கார்த்திகேயன், செயல் தலைவர் நீலகங்கா தரன், சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், பொதுச்செ யலாளர் அப்துல்ரகுமான், தனுசு, செயலாளர் சூசைராஜ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு, மகிளா காங்கிரஸ் தலைவி பஞ்சகாந்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






