search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    எம்.ஐ.டி. கல்லூரியில் 2 நாள் கருத்தரங்கம்
    X

    மேம்படுத்தப்பட்ட உலோகங்களின் தொழில் நுட்ப வளர்ச்சி, தன்மை மற்றும் பயன்பாடுகள்’ குறித்த 2 நாள் கருத்தரங்கம் எம்.ஐ.டி. கல்லூரியில் நடந்தது.

    எம்.ஐ.டி. கல்லூரியில் 2 நாள் கருத்தரங்கம்

    • அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார்.
    • இந்திய பொறியாளர் அமைப்பின் மாநில கவுரவ செயலாளர் சீனு திருஞானம் நன்றி கூறினார்.

    புதுச்சேரி:

    இந்திய பொறியாளர் அமைப்பு, புதுச்சேரி மாநில மையம் மற்றும் மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லுாரி இயந்திரவியல் துறை இணைந்து அகில இந்திய அளவிலான 2 நாள் கருத்தரங்கம் நடந்தது. மேம்படுத்தப்பட்ட உலோகங்களின் தொழில் நுட்ப வளர்ச்சி, தன்மை மற்றும் பயன்பாடுகள்' என்ற தலைப்பில் கல்லூரி கருத்தரங்க கூடத்தில் நடந்தது. அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர்.

    கல்லூரி முதல்வர் மலர்கண் வாழ்த்தி பேசினார். இந்திய பொறியாளர் அமைப்பின் புதுச்சேரி மாநிலத் தலைவர் ராஜாராமன் வரவேற்றார். இந்திய பொறியாளர் அமைப்பு மெட்டலர்ஜிக்கல் மெட்டீரியல்ஸ் பொறியியல் பிரிவு அகில இந்திய தலைவர் புவனேஸ்வர், தலைமை விஞ்ஞானி பாக்யத்தார் போய் ஆகியோர் பசுமை இரும்பு உலோக உற்பத்தி குறித்து பேசினர்.

    கருத்தரங்கில் புதுச்சேரி பல்கலை கழக இயற்பியல் துறை உதவி பேராசிரியர் முத்துக்குமார், நானோ சயின்ஸ் துறை பேராசிரியர் சுப்ரமணியா, வெங்க டேஸ்வரா பொறியியல் கல்லுாரி முதல்வர் பிரதீப் தேவநேயன், புதுச்சேரி தொழில்நுட்ப பலகலைக் கழக இயந்திரவியல் துறை பேராசிரியர் செந்தில்வேலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி முதல்வர் வெங்கடாசலபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்திய பொறியாளர் அமைப்பின் மாநில கவுரவ செயலாளர் சீனு திருஞானம் நன்றி கூறினார்.

    Next Story
    ×