என் மலர்
நீங்கள் தேடியது "Former Chief Minister Narayanasamy"
- முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்
- ஒரு பெண் அமைச்சர் மனம் எவ்வளவு புண்பட்டிருந்தால் இப்படி அறிக்கை கொடுத்திருப்பார்?
புதுச்சேரி:
புதுவை மாநில முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
ரங்கசாமி முதல்- அமைச்சராகி 2 1/2 ஆண்டாகிறது. மாநில அந்தஸ்து பெற பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ளேன் என ரங்கசாமி கூறினார்.
புதுவைக்கு வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றார். இதில் யார் குற்றவாளி? பிரதமர் எத்தனை முறை டெல்லிக்கு சென்றார்? மாநில அந்தஸ்து தர முடியாது என மத்திய அரசு கூறியபிறகு, எதிர்கட்சிகள் மீது பழிபோடுகிறார். புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறும் எண்ணம் ரங்கசாமிக்கும் இல்லை, வழங்கும் எண்ணம் மத்திய பா.ஜனதா அரசுக்கும் இல்லை. ரங்க சாமி சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார்.
ஒரு பெண் அமைச்சர் பதவியை ராஜி னாமா செய்துள்ளார். 4 நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் ரங்க சாமி, கவர்னரை சந்தித்து அமைச்சர் சந்திர பிரியங்காவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். திருமுருகனை அமைச்சராக்க வேண்டும் என கடிதம் அளித்துள்ளார்.
அந்த கடிதம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்த கடிதம் ஏற்கப்பட்டு, புதுவை அரசுக்கு வந்துள்ளது. பெண் அமைச்சரை அசிங்கப்படுத்தி உள்ளனர். அமைச்சர்கள், முதல்-அமைச்சரின் செயல்பாடு கள் சரியாக உள்ளதா? ஒரு பெண் அமைச்சர் மனம் எவ்வளவு புண்பட்டிருந்தால் இப்படி அறிக்கை கொடுத்திருப்பார்? மன வேதனையோடு அந்த கடிதத்தை எழுதியுள்ளார். ஆண் அதிகார வர்க்கம் என்னை செயல்படவிடாமல் தடுத்துள்ளது.
தனிப்பட்ட பிரச்சினையை முன்வைத்து பழிவாங்குகின்றனர். சாதி, பாலின ரீதியில் அழுத்தம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா சுயரூபத்தை அமைச்சரின் கடிதம் காட்டுகிறது. இது மிகப்பெரும் குற்றச்சாட்டு. இதுகுறித்து தலித் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் பெண்கள் விரோத ஆட்சி நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
- முதல்-அமைச்சர் பரிந்துரையை அனுப்ப வேண்டியது என் கடமை என தமிழிசை கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
என்ஆர்.காங்கிரஸ் அமைச்சர் சந்திரபிரியங்கா தனது ராஜினாமாவை கவர்னருக்கு அனுப்பியுள்ளார். முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கடிதம் கொடுத்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து சர்ச்சை நிலவுகிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் பதவியிலிருந்து சந்திரபிரியங்காவை நீக்கிவிட்டு, திருமுருகனை அமைச்சர் பதவியில் நியமிக்க கவர்னரிடம் பரிந்துரை கொடுத்தார்.
அதற்கான ஒப்புதல் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து வந்துள்ளது. இதையறிந்த சந்திரபிரியங்கா தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் என நான் கூறியிருந்தேன். சந்திரபிரியங்காவை கலந்து பேசாமல், அவரிடம் ராஜினாமா கடிதத்தை பெறாமல், அவரை டிஸ்மிஸ் செய்யவும், அந்த இடத்தில் திருமுருகனை அமைச்சராக நியமிக்கவும் பரிந்துரையை கவர்னர் தமிழிசை மூலம் முதல்-அமைச்சர் ரங்கசாமி அனுப்பினார்.
சந்திரபிரியங்கா தகுதிநீக்கம் தொடர்பாக புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கமும், நானும் பேட்டியளித்தோம். அதற்கு கவர்னர் தமிழிசை பதிலளித்துள்ளார். 6 மாதம் முன்பு சந்திரபிரியங்கா அமைச்சர் செயல்பாடுகளில் முதல்-அமைச்சர் அதிருப்தி தெரிவித்தார்.
அதை அவரிடம் கூறினேன். 6 மாதமாக அவர் திறமையாக செயல்படாததால் பதவிநீக்கம் செய்ய கோப்பை முதல அமைச்சர் கொடுத்தார், உள்துறை அமைச்சகத்துக்கு நான் அனுப்பினேன். முதல்-அமைச்சர் பரிந்துரையை அனுப்ப வேண்டியது என் கடமை என தமிழிசை கூறியுள்ளார்.
தமிழிசை புதுவையின் பொறுப்பு கவர்னராக பதவிப்பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்துள்ளார். முதல்-அமைச்சருக்கும், கவர்னருக்கும் நடந்த உரையாடல்கள், முதல்-அமைச்சர் அளித்த கடிதம் போன்றவற்றை கவர்னர் தமிழிசை வெளியில் சொல்வது ரகசிய காப்பு பிரமாணம் எடுத்துக்கொ ண்டதற்கு எதிரானது, முரண்பாடானது.
முதல்-அமைச்சர் அனுப்பிய கோப்பை டெல்லிக்கு அனுப்பி ஒப்புதல் வந்த பிறகு அதுதொடர்பான அறிவிப்பை மட்டுமே மாநில அரசிதழில் வெளியிட வேண்டும். இதுதொடர்பாக பேட்டி அளிப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ரகசியகாப்பு பிரமாண த்திற்கு எதிரானது.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சந்திரபிரியங்கா ராஜினாமா செய்யும் முன்பே முதல்- அமைச்சர் அவரை பதவிநீக்கம் செய்து விட்டார் என சொல்கிறார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் இதுவரை வாய் திறக்கவில்லை. அமைச்சர் பதவி நீக்கமா? ராஜினாமா? என்பது மர்மமாக உள்ளது. நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






