search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மின்பற்றாக்குறையை போக்க புதிய மின்மாற்றிகள்
    X

    மின் துறை அதிகாரிகளுடன் சிவா எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்திய காட்சி.

    மின்பற்றாக்குறையை போக்க புதிய மின்மாற்றிகள்

    • அதிகாரிகளிடம் எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்
    • போதிய மின்கம்பங்கள் அமைத்து மின்விளக்குள் பொருத்து தல், தொகுதி முழுவதும் உள்ள குழல் விளக்குகளை மாற்றி எல்.இ.டி. விளக்குகளாக பொருத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 7 வார்டுகளில் உள்ள ஊர்களில் இருக்கின்ற மின்துறை பிரச்சினைகள் குறித்து தொகுதி எம்.எல்.ஏ.வும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமையில் மின்துறை தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.

    கூட்டத்தில் மின்துறை முதன்மைப் பொறியாள ர்கள் சண்முகம், முரளிதரன், செயற்பொறி யாளர்கள் கலிவரதன் , ராமநாதன், உதவிப் பொறியாளர்கள் முருகேசன், கில்பர்ட் ஜேம்ஸ், இளநிலைப் பொறி யாளர்கள் செல்வநாதன், பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வில்லியனூர் தொகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள மின் பற்றாக்குறையை போக்குவதற்கு உரிய இடங்களில் மின்மாற்றிகள் அமைத்தல், ஒருமுனை மின்சார இணைப்பை மும்முனை மின்சார இணைப்பாக தொகுதி முழுவதும் மாற்றுதல், தாழ்வாக செல்லும் பல மின்கம்பிகளை உயர்த்திக் கட்டுவதோடு, போதிய மின்கம்பங்கள் அமைத்து மின்விளக்குள் பொருத்து தல், தொகுதி முழுவதும் உள்ள குழல் விளக்குகளை மாற்றி எல்.இ.டி. விளக்குகளாக பொருத்த வேண்டும்.

    பழைய மின்மாற்றிகளின் திறனை உயர்த்த வேண்டும், உயரழுத்த மின் கம்பிகள் போட முடியாத இடத்தில் மின் புதைவட கம்பிகளை அமைத்து மின்சப்ளை வழங்க வேண்டும், வருங்காலத்தில் அதிக மின்திறன் கொண்ட எல்.இ.டி. விளக்குகளை தெருவிளக்காக பயன்படு த்துகின்ற நடைமுறையை கொண்டுவர வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடந்தது. இந்த பணிகளை 3 மாத காலத்திற்குள் செய்து முடிப்பதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    தி.மு.க தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் தர்மராஜன், மாநில இலக்கிய அணி அமைப்பா ளர் சீனு. மோகன்தாசு, தொகுதி துணைச் செயலா ளர்கள் ஜெகன்மோகன், அரிகிருஷ்ணன், கழக முன்னோடிகள் அங்காளன், குலசேகரன், லட்சுமணன், இரமணன், ரபீக், வேதாச்சலம், கார்த்திகேயன், சரவணன், மிலிட்டரி முருகன், ஜனா, பாலகுரு மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×