என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
திருக்கனூர் தீயனைப்பு நிலையத்தில் 3 நாட்களாக இயங்காத டெலிபோன்
- அவசர தேவைகளுக்கு தொடர்பு கொள்ள முடியாமல் பொதுமக்கள் அவதி
- பொதுமக்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் திருக்கனூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபடுவர்.
புதுச்சேரி:
தீ விபத்து மற்றும் ஆபத்துக்கால உதவி என்றால் பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு போன் செய்து தகவல் தெரிவிப்பார்கள்.
அதன் அடிப்படையில் தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.
இது போன்று திருக்கனூர் பகுதியில் நடைபெறும் தீ விபத்து உள்ளிட்ட சம்பவத்தின் போது பொதுமக்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் திருக்கனூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபடுவர்.
இந்நிலையில் திருக்கனூர் தீயணைப்பு நிலைய தொலைபேசி கடந்த 3 நாட்களாக இயங்க வில்லை. அப்பகுதியில் மரம் அகற்றப்பட்ட போது தொலைபேசி ஒயர் துண்டாகி விட்டதாக கூறப்படுகிறது. அதிலிருந்து கடந்த 3 தினங்களாக தொலைபேசி முழுமையாக வேலை செய்யவில்லை.
திருக்கனூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு தீயணைப்பு நிலையத்திற்கு போன் செய்தால் நீங்கள் தொடர்பு கொண்ட எண் உபயோகத்தில் இல்லை என்று வருகிறது.
தொலைபேசி வேலை செய்யாததால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.
பொதுமக்களின் நலன் கருதி திருக்கனூர் தீயணைப்பு நிலைய தொலைபேசியை உடனடி யாக சரி செய்ய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






