என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பொதுப்பணித்துறை ஊழியரின் மனைவி தற்கொலை
    X

    கோப்பு படம்.

    பொதுப்பணித்துறை ஊழியரின் மனைவி தற்கொலை

    • மின்விசிறியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • திருக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே உள்ள சோரப்பட்டு தென்னஞ்சாலை வீதியைச் சேர்ந்தவர் ஹரி (வயது 35) பொதுப்பணித்துறை ஊழியராக பணி புரிந்து வருகிறார்.

    இவரது மனைவி தேவிப்பிரியா (வயது 30) தேவிப்பிரியாவிற்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

    நேற்று மாலை வழக்கம்போல் மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் மனமுடைந்த தேவி பிரியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×