என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாணவர்கள் வைப்பு தொகை செலுத்த 16-ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டும்
    X

    கோப்பு படம்.

    மாணவர்கள் வைப்பு தொகை செலுத்த 16-ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டும்

    • மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
    • எந்த கோப்பின் அடிப்படையில் நிர்வாக ஒதுக்கீடு இடங்களாக மாற்றப்பட்டு ள்ளது என்பதை சென்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது வியப்பாக உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பெற்றோர்-மாணவர்கள் நலச்சங்க தலைவர் வை.பாலா புதுவை கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் ஆகி யோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிரு ப்பதாவது:-

    புதுவை கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் ஆகியோரின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல் இல்லாமல் சென்டாக் நிர்வாகம் 3-ம் கட்ட இள நிலை மருத்துவம் மற்றும் துணை மருத்துவ படிப்பிற்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது எனவும், அதற்கான வைப்புத் தொகையான ரூ.2 லட்சத்தை செலுத்த வேண்டு மெனவும் அனைத்து மாணவர்களின் செல்போ னில் குருந்தகவல் வெளி யானது. அதே வேளையில் இன்று 11 மணிக்குள் இத்தொகையை செலுத்தி தங்கள் விருப்பப் பாடங்களை தேர்வுசெய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இன்று மாதத்தின் 2-வது சனிக்கிழமை என்பதால் அனைத்து தனியார் மற்றும் அரசு வங்கிகள் செயல்ப டாது என்பது குறிப்பிட த்தக்கது.

    மேலும் தற்போது இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 12 மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. இந்த காலியாக உள்ள இடங்களை எந்த கோப்பின் அடிப்படையில் நிர்வாக ஒதுக்கீடு இடங்களாக மாற்றப்பட்டு ள்ளது என்பதை சென்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது வியப்பாக உள்ளது.

    இதற்காக புதுவை சுகாதாரத்துறையின் ஒப்புதலை பெற்றுள்ளதா என்பதை சென்டாக் நிர்வாகம் தெரிவிக்க வேண்டும்.

    ஏற்கனவே வருகிற 20-ந் தேதி முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களின் சேர்க்கையினை முடித்து அந்ததந்த மருத்துவ கல்லூரிகள் கலந்தாய்வு கமிட்டிக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

    எனவே வருகிற 16-ந் தேதி மாலை வரை மாண வர்கள் வைப்பு த்தொகை ரூ.2 லட்ச த்தை செலுத்தி காலியாக உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவ இடங்களை புதுச்சேரி மாநில மாணவர்களைக் கொண்டு அரசு ஒதுக்கீட்டு இடங்களாக அறிவித்து கலந்தாய்வினை நடத்த ஆணை பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×